2005 ஜூனில் வேலை குறைவாயிருந்த ஒரு அலுவலக மதியத்தில் பொழுது போகாமல் இணையத்தில் ‘Writer Sujatha Novels’ என்று தேடிய பொழுது வந்த ஒரு லிங்க் என்னை தேசிகனின் வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அவருடைய சில இடுகைகளை படித்தேன், அப்படியே அங்கிருந்து தமிழ்மணம் சென்று நிறைய இடுகைகளை படிக்க ஆரம்பித்தேன். நாமும் எழுதலாமே என்று ஆர்வம் வந்தது. தேசிகனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, எப்படி எழுதுவது என்று கேட்டு, ஒரு வழியாக 2005-ஆகஸ்டில் ஒரு வலைப்பதிவினை ஆரம்பித்தேன்.
எனது முதல் இடுகை - நண்பர்களுக்காக ஒரு பதிவு..
முதல் பின்னூட்டத்தினை, தேசிகன் அளித்தார் “சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள்”.
இன்று வரையிலும் இதை பின்பற்றி வருகிறேன். இதுவரையிலும் யாரிடமும் சண்டை போட்டதில்லை, எனது கருத்துகளை நாகரீகமாகவும், பிறர் மனம் புண்படாதவாறும்தான் இடுகையோ, பின்னூட்டமோ எழுதி வருகிறேன்.
வலைப்பதிவு ஆரம்பித்த போது ரொம்ப மஜாவாக இருந்தது. பெரிய எழுத்தாளராகி விட்டோம் என்று ஒரே மகிழ்ச்சி. பார்க்கும் நபரிடமெல்லாம் ப்ளாக் அட்ரஸைக் கொடுத்து, அவசியம் படித்து பின்னூட்டம் போடுங்கள் என்றேன். என்னைக் கண்டாலே அலறி அடித்து ஓட ஆரம்பித்தனர் என் நண்பர்கள் :-)
எனது முதல் இடுகைக்கு, தேசிகனைத் தவிர பாஸ்டன் பாலாவும், டோண்டுவும் பின்னூட்டினார்கள். நன்றி, வலைப்பதிவு முன்னோடிகளே!
ஆரம்பத்தில் சோம்பேறி பையன் என்ற பெயரில் எழுதினேன், பின் திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்தவுடன் பெயரை மாற்றிக் கொண்டேன் :-)
நிறைய வரவேற்பினை பெற்ற, எனது சில இடுகைகள்
நம்ம ஊர் திருச்சி
தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள்
தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்
மின் அஞ்சல் ரகசியங்கள்
அம்பியும், அன்னியனும்... Version 2.0
கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்
உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன்
சென்னையின் ப்ளஸ்கள்(+)
என் மனைவிக்காக, ஓர் கவிதை
வலைப்பதிவில் நான் சாதித்தது என்ன?
பெரிதாக ஒன்றுமில்லை. என் மனதுக்கு எழுத தோன்றியவற்றை எழுதினேன். கவிதை, கதை, சினிமா விமர்சனம், கார்ட்டூன், வாழ்க்கை அனுபவங்கள் என கலந்து கட்டி அடித்தேன். 2006 செப்டம்பரில் தேன்கூடு நடத்திய போட்டியில் கலந்து கொண்ட 80 இடுகைகளை படித்து விமர்சனம் செய்ததைத்தான் சாதனையாக கருதுகிறேன். வேலைப்பளுவிற்கு நடுவில் ஒரு 25 நாட்களில் 80 இடுகைகளை படித்து, விமர்சனம் எழுதி மதிப்பெண் அளிப்பது சுலபமானதல்ல என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என கருதுகிறேன்.
வலைப்பதிவின் ப்ளஸ்கள் (என நான் கருதுவது)
நம் எழுத்தை அச்சில் பார்க்கும் அல்ப சந்தோஷம்
நாம் நினைத்ததை எழுதி, ஆரோக்கியமாக விவாதிக்க முடிவது
பத்திரிக்கைகளில் படிக்க முடியாத கருத்துக்கள், விவாதங்களை படிக்க முடிவது
வலைப்பதிவின் மைனஸ்கள் (என நான் கருதுவது)
சில சமயங்களில், நாம் எழுதிய கருத்தை எதிர்ப்பதாய் நினைத்துக் கொண்டு, நம்மை எதிர்ப்பது
மொக்கை பதிவாயிருந்தாலும், நண்பர் எழுதியிருந்தால் வரிந்து வரிந்து பின்னூட்டமிடுவது
இடுகைகளிலும் மூலம் சாதி, மத, இன துவேஷம்
ஆபாச, தனிநபர் துவேஷ பின்னூட்டங்கள்
புதியவர்களுக்கு அறிவுரை
சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள் :-)
சமர்ப்பணம்
எனக்கு வலைப்பதிவு உலகத்தை அறிமுகப்படுத்தி, பதிய கற்றுத்தந்து, உற்சாகப்படுத்திய நண்பர் தேசிகனுக்கு, இந்த நூறாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.
நன்றிகள்
வலைப்பதிவு நண்பர்களே, நீங்கள் இதுவரை எனக்கு அளித்து வந்த ஆதரவிற்காகவும், இனிமேல் அளிக்கப்போகும் ஆதரவிற்கும் நன்றிகள் பலப்பல, இதுவரை வலைப்பதிவில் நான் பயணித்ததையும், இனிமேல் எப்படி பயணிக்க வேண்டும் என்பதையும், உங்கள் வலைப்பதிவு அனுபவங்களையும், உங்களது வேறு கருத்துகளையும், தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள். இவை என்னை உற்சாகப் படுத்தி, தொடர்ந்து எழுதச் செய்யும்.
நன்றி, மீண்டும் வாருங்கள்!!
20 comments:
Valthukkal romba arumaiya irnuthuchu apprum :-) tiruchiya neenga super
வாழ்த்துக்கள்
வளர்க
வாழ்த்துக்கள் கார்த்தி..
100 இடுகை வரைக்கும் வந்துட்டீங்களா? சந்தோஷம்..
நான் 2003 ஜூன் மாசம் பதிவராகி சமீபத்தில் தான் 76 வது இடுகை எழுதினேன்..
உங்கள் சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது..
வாழ்த்துக்கள் மீண்டும் !!
சீமாச்சு...
http://seemachu.blogspot.com
அன்பு சோம்பேறி பையன்...
வாழ்த்துக்கள். அப்பப்ப எழுதுங்கள். :)
வாழ்த்துக்கள் சோ பை என்னும் பழூராரே!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணன்...
\\
சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள்
\\
ஆனால் முன்பு போல ஆரோக்கியமான விவாதங்களும் இப்போது குறைந்தால் போலத்தெரிகிறது...
வாழ்த்தளித்த அனைவருக்கு நன்றி, நண்பர்களே!!
<<>>
தமிழன் - கருப்பி, ஆமாம் உங்கள் கருத்து உண்மையே.. :-(
வாழ்த்துக்கள்.
டிபிஆர்.
முட்டாள்கள் திணத்தன்று ஒரு புத்திசாலித்தணமானப் பதிவு. உங்கள் நகைச்சுவை உணர்வின் ரசிகன் நான். தொடர்ந்து நிறைய எழுதி சாதிக்க வாழ்த்துக்கள்.
அருண் ச
நன்றி டிபிஆர் & அருண்!!
:-))
100 இடுகைகள் எழுதறது ரொம்ப பெரிய விஷயம்,
என்னைப் போன்றவர்கள் படிக்கவே சோம்பேரித்தனம் ,நீங்க என்னடான்னா 100 பதிவுகளை எழுதித் தள்ளீருக்கீங்க.
முதன் முதலில் எனக்கு தமிழில் டைப் பண்ண கற்றுக்கொடுத்ததே நீங்கள்தான்.
இன்னும் ஐந்து வருடங்களில் 1000 அசாத்திய பதிவுகள் எழுதிட வாழ்த்துக்கள்.
சிவா, உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி!! நாம் புனேயில் போய்வந்த மலையேற்றங்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறதே :-)))
அண்ணாச்சி வாழ்த்துக்கள் .. வாழ்கை எப்படி போகுது ?
வாழ்த்துகள் !இணைய உலகில் இனிமை சேர்த்திட மேலும் பல மைல்கற்களை கடந்திடுவீராக !
நன்றி கார்த்திக் & மணியன்!!
உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி!!
<<>>
கார்த்தி, வாழ்க்கை மும்பையில் இருந்த்தை விடவும் சுவாரசியமாய்த்தான் செல்கிறது.. :-)
அப்பாடி.... இப்போத்தான் நூறா??? வாழ்த்துக்கள்!!! (நீங்களும் நம்மள மாதிரிதானா?)
உங்கள் வலைப்பதிவு ஆலோசனைகள், ப்ளஸ் மைனஸ் எல்லாமே ரசிக்கவைத்தது!! வாழ்த்துகள்!!!
நூறுக்கு வாழ்த்துகள். இனி சுருக்கப் பல பல பதிவுகள் போடுங்கள். தேசிகன் கை நல்ல கை.
ஆதவா, உங்கள் கருத்திற்கு நன்றி!!
<<>>
வல்லிசிம்ஹன், நன்றி, நிறைய எழுத முயற்சிக்கிறேன்..
Post a Comment