Tuesday, August 01, 2006

தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள்

எப்போதாவது
பின்னிரவுகளில்
விழித்தெழும் போது,
திரும்பவும் தூக்கம்
என் கண்களைத்
தழுவும் வரையில்
தவழ்கிறேன், உன் நினைவுகளில்...
தூங்கியபின் கனவில்
திரும்பவும் நீ...

***

மருத்துவர் ஆலோசனையின் படி
இயற்கை காற்று வாங்க,
வைத்திருக்கிறேன் என் கணிணியில்
சீனரி வால்பேப்பர்...

***

கடிதங்கள்,
கைத்தொலைபேசி அழைப்புகள்,
குறுஞ்செய்திகள்,
மின்னஞ்சல்கள்,
வலைப் பதிவுகள்
ஒவ்வொன்றும்
சங்கீதமாகின்றன,
உன் பெயரைத் தாங்கி வரும்போது...

***

வலைப்பதிவுகளிலிருந்து
மீளலாமென்றுதான் நினைக்கிறேன்
ஒவ்வொரு பின்னூட்டமிடும் போதும்...
இ-கலப்பையை கணிணியில்
பார்க்கும் போதெல்லாம் குறுகுறுக்கிறது
பாழாய்ப் போன மனசு...
ஒவ்வொரு இடுகைக்கும் வரும்
ஒன்றிரண்டு பின்னூட்டங்களும்,
என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய்
தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும்,
இருக்கும்வரை இருந்தே தீருவேன்...
ஏனென்றால் நண்பர்களே,
போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல...

***

தூங்கும் போதும்
மடிக்கணிணியை
இதயத்துக்கு அருகிலேயே
வைத்திருக்கிறேன்...
டெஸ்க்டாப் வால்பேப்பரில்
நீயே இருப்பதால்....

***

எத்தனை கடிதங்கள்..
எத்தனை தொலைபேசி அழைப்புகள்..
எத்தனை மின்னஞ்சல்கள்..
எத்தனை குறுஞ்செய்திகள்..
எத்தனை மின் அரட்டைகள்..
இத்தனையுமா காட்டினாய், உன் தந்தையிடம் ?
அடியா ஒவ்வொன்றும், இடி...
அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...

***

சுடும் நிலவு
சுடாத சூரியன்
அழாத குழந்தை
இனிக்கும் மிளகாய்
இனிக்காத சர்க்கரை
வரிப்பிடித்தமில்லா சம்பளம்
போலிகளில்லா தமிழ்மணம்
அடிக்காத மனைவி
அமைதியான உலகம்
அனைத்தையும் காணலாம்
ஐம்பத்தைந்தே ரூபாயில்,
கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர்...

***

37 comments:

த.அகிலன் said...

அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...

ம் அனுபவமா? சார்
நன்றாயிருக்கிறது கவிதை

Anonymous said...

kuduthu vachavan ya nee...enga oorla kingfisher beer 60 ruva.....ana onnu ya...un kavithai ellam thanni adichittu padicha pothum.....lemon, more ellam thevaiye illai...thana
erangidum;-) chumma jollykku sonnen.....nalla muyarchi...ana unga nakkal nalla theriyuthu.

arun c

tbr.joseph said...

வரிப்பிடித்தமில்லா சம்பளம்
போலிகளில்லா தமிழ்மணம்//

இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமான வரிகள்:)

அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...//

ஒத்துக்கறேன்.. ஆனால் காதலித்தவளையே கைபிடிக்கத் தெரியாதவர்கள்?

சுடும் நிலவு
சுடாத சூரியன்
அழாத குழந்தை
இனிக்கும் மிளகாய்
இனிக்காத சர்க்கரை
வரிப்பிடித்தமில்லா சம்பளம்
போலிகளில்லா தமிழ்மணம்
அடிக்காத மனைவி
அமைதியான உலகம்
அனைத்தையும் காணலாம்
ஐம்பத்தைந்தே ரூபாயில்,
கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர்...//

இத்துடன் திருமணத்தில் முடியும் காதல்னும் சேர்த்துக்குங்க..

நல்லாருக்குங்க ஒவ்வொரு வரிகளும்..

Hariharan # 26491540 said...

சோம்பேறி பையன் சுறு சுறுப்பான மாதிரி தெரியுதே.

//அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...//

கிங் பிஷர் தர்ற தைரியமோ? :-)))

(துபாய்) ராஜா said...

தூக்கம் தொலைத்த இரவுகளிலே இவ்வளவு அருமையாக கவிதைகள் என்றால்.....,

சோம்பேறி பையன்!பகலிலும்
கொஞ்சம் சுறுசுறுப்பாக முயற்சித்துப் பாருங்கள் தூக்கம் தொலைக்க.

Anonymous said...

ithu kavithai alla ! Nalla kathai !

Anonymous said...

of the lot, kadaisi rendu kavidhaigal (?)..they are good..keep the good work going..

prasanna

சிவமுருகன் said...

//அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...//

அதெப்படிங்க? ஒரே வரியில போட்டு தாக்கிட்டீங்க?

//
அடிக்காத மனைவி
அமைதியான உலகம்
அனைத்தையும் காணலாம்
ஐம்பத்தைந்தே ரூபாயில்,
கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர்...
//

கிங் பிஷர் கிட்ட அட்வாண்ஸ் ஏதாவது?

தேவ் | Dev said...

பாஸ் நீங்க அடிக்கடி தூக்கம் தொலைக்கணும்ங்கறது என்னுடைய ஆசை... :)
கவிதைகள் அனைத்திலும் குறும்புத் தனம் .. அருமை

பழூர் கார்த்தி said...

அகிலன், அனுபவம் அல்ல, அனுபவங்கள் :-)

***

அருண், தானாக தண்ணி போதை இறங்குற அளவுக்கா இருக்கு என் கவித ?? இப்படி சொல்லி சொல்லித்தான்யா உசுப்பேத்தி உடுறீங்க.. இனிமே வாரம் பத்து கவிததான்.. பாவம் தமிழ்மணம் :-)

***

ஜோசப், காதலித்தவளை கைப்பிடித்தவர்கள் தைரியசாலிகள்தான்.. ஆமாம் எவ்வுளவு தைரியம் அவர்களுக்கு பாருங்கள், கண்ணைத் திறந்து கொண்டு பாழும் கிணற்றில் :-)))

***

ஹரிஹரன், கிங்பிஷர் மட்டுமல்ல, 5000, 2000, கல்யாணி எல்லாமும்தான்..

***

துபாய் ராஜா, சுறுசுறுப்பாவா ??? போங்க சார், உங்களுக்கு எப்பவுமேஏஏ விளையாட்டுதான் :-))

***

அனானி, கவிதை கதையானதா ??
கககபோ :-)

***

பிரசன்னா, நன்றிங்கன்னாவ்வ்

***

சிவமுருகன், அட்வான்ஸ் எல்லாம் கிடையாது... ரெடிகேஷ்தான் :-)

***

தேவ், அப்ப இனிமே வாரம் பத்து கவித போட்டுறலான்றீங்களா ??
மறக்காம வந்து பின்னூட்டம் போடோனும், சரியா :-)

தேவ் | Dev said...

கண்டிப்பா.. நீங்க வேற இப்போ கும்ப்கோணத்தின் சங்கப் பிரதினிதி ஆக வேற தேர்ந்தெடுக்கப் பட போறீங்க:)

பழூர் கார்த்தி said...

நன்றி தேவ்..

ஏஏஏஏய்ய்ய்ய், என்னை வச்சி காமெடி, கீமெடி எதுவும் பண்ணலயேயய.... (தலைநகரம் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்..) :-)

கார்த்திக் பிரபு said...

nall iruku kalakkunga!!1

sivagnanamji(#16342789) said...

தாழம்பேட்டை இல்லையா?
அதான் கமகமக்குது

ENNAR said...

முச்சங்க புலவர் முதல் முந்தாநாள் புலவர் வரை கொச்சை கவி பாடும் போது எங்கள் சோம்பேறியின் கவிதை கேட்க இச்சையுடன் இருக்கேன்.
ம்.. பாடும் பாடும் கேட்க நாங்களுண்டு

Anonymous said...

அடிக்காத மனைவி//
ரொம்பதான் பயந்து போய் இருக்கிறதுமாதிரி காட்டிக்கிறீங்களே...
"வாழ்க்கையே நாடகமேடைதானே"!

பொன்ஸ்~~Poorna said...

//வலைப்பதிவுகளிலிருந்து
மீளலாமென்றுதான் நினைக்கிறேன்
ஒவ்வொரு பின்னூட்டமிடும் போதும்...
இ-கலப்பையை கணிணியில்
பார்க்கும் போதெல்லாம் குறுகுறுக்கிறது
பாழாய்ப் போன மனசு...
ஒவ்வொரு இடுகைக்கும் வரும்
ஒன்றிரண்டு பின்னூட்டங்களும்,
என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய்
தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும்,
இருக்கும்வரை இருந்தே தீருவேன்...
ஏனென்றால் நண்பர்களே,
போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல...
//

சோ.பை, இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...

அடிக்கடி தூக்கம் தொலைக்க வாழ்த்துக்களுடன்..

பழூர் கார்த்தி said...

கார்த்திக் பிரபு, கலக்குங்கன்னு சொல்றீங்களா இல்ல கலங்குதுங்கன்னு சொல்றீங்களா :-)) ??

***

சிவஞானம்ஜி, தாழம்பேட்டை அல்ல, தாதம்பேட்டை, இருந்தாலும் மணக்கலாம்...

***

என்னார், இதுல ஏதும் உள்குத்து இல்லையே ?? ஆமா, உங்க கவிதைப் பின்னூட்டம் பாராட்டா, திட்டா ??

***

அனானி, வாழ்க்கையே நாடகமேடைதான், திருமணமாகும் வரைக்கும்...

***

பொன்ஸ், இனிமே அடிக்கடி கவிதைகளுடன் தமிழ்மணத்தை சுக்குநூறாக்குவோம் :-)))

Anitha Pavankumar said...

chance illa ponga...
enakku unga ovvaru kavidhaium romba pidchirundhadu

கோவி.கண்ணன் said...

தூக்கம் வரவில்லை என்பதால்
தோன்றிய எண்ணங்களில் எல்லாம்
பல்வேறு கவிதைகளை
எழுதி குவித்துவிட்டு
கூப்பிட்டேன் பாராட்டுபவர்களை !
படித்து முடிக்கும் முன்பே
தூக்கம் வருகிறதென்று
கொட்டாவியுடன்
சென்று விட்டார்கள்

சோம்பேறி பையன் மண்ணிக்க !

கோவி.கண்ணன் [GK] said...

//என்ன மூச்ச போட்டாலும், பின்னூட்டம் மட்டும் சின்கிள் டிஜிட்ட தாண்ட மாட்டேங்குதுங்க//

கவலையை விடுங்க ... நம்ப ஆளுங்க ... உங்கள் நண்பன் (சரவணன்) இருக்கிறார் ... கிழுமத்தூரார் மகேஸ் இருக்கிறார்,, அருமை நண்பர் சிவபாலன் இருக்கிறார் ... ஆன்மிகத் தென்றல் எஸ்கே இருக்கிறார்.. அனுப்பி வைக்கிறேன் அங்கு :)

கோவி.கண்ணன் [GK] said...

//எத்தனை கடிதங்கள்..
எத்தனை தொலைபேசி அழைப்புகள்..
எத்தனை மின்னஞ்சல்கள்..
எத்தனை குறுஞ்செய்திகள்..
எத்தனை மின் அரட்டைகள்..
இத்தனையுமா காட்டினாய், உன் தந்தையிடம் ?
அடியா ஒவ்வொன்றும், இடி...
அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...//

சோ ... யன் (முழுசா எழுதறத்துக்கு சோம்பேறித்தனம் தான் :) ) .... நான் கூட கோழைதான் ... படித்தேன் வெடித்தேன் ... சிரிப்பு வெடிதான் :)

பழூர் கார்த்தி said...

கோவி.கண்ணன், கவிதைக்கே கவிதையா, நல்லா இருக்குங்கோவ்...
நன்றி

****

அனிதா பவன்குமார், நிஜமாவே நல்லாத்தான் இருக்கா, அப்ப இனிமே கவித மழைதான் போங்க..

****

கோவி.கண்ணன்,

for(i=1; i<=10; i++)
printf("நன்றி");

****

கோவி.கண்ணன் said...

for i = 1 to n
debug.print( ":)" )
next

பழூர் கார்த்தி said...

கோவி.கண்ணன், புரோகிராமுக்கே புரோகிராமா ????

உங்களுக்கும் புரொகிராம் தெரியும்னு ஒத்துக்கறேன் :-)))

லாங்வேஜ் என்னங்க, VBயா ??

***

எது எப்படியோ, நம்ம பின்னூட்ட கவுண்ட்டர் 25-ஐ தொட்டு விட்டது !!!!!!!

***

பின்னூட்டப் புரட்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!

***

3-4 முறை பின்னூட்டமிட்டு புரட்சியை முன்னிருந்து நடத்திய கோவி.கண்ணன் அவர்களுக்கு, ஸ்பெசல் நன்றி !!

***

கோவி.கண்ணன் said...

//லாங்வேஜ் என்னங்க, VBயா ??//

if windows.system32.apiStrCmd ("debug.print") then
MsgBox "Program Language : " & windows.system32.apiStrCmd ("debug.print").toString "
end if

Message Box Shows
"Program Language : Microsoft Visual Basic 6.0"

Press OK

Anonymous said...

Sir..Enna Kaadala..a..???
Entha kaadal panrathalaam ok.. Could u make this as everlasting one...???Otherwise it would seems only as DAY dreamz and it would spoil ur Life's CAREER also.
Really its good on the view of a poet but not in the point of LOSER who wants to do many sucessful things...Welcoming few more like such adventures....

- Balaji Raghavan

Anonymous said...

Sir...

Enna Kaadala..a..???

Entha kaadal panrathalaam ok.. Could u make this as everlasting one...???Otherwise it would seems only as DAY dreamz and it would spoil ur Life's CAREER also.

Really its good on the view of a poet but not in the point of LOSER who wants to do many sucessful things...

Welcoming few more like such adventures....

பழூர் கார்த்தி said...

கோவி. கண்ணன், என்ன பெரிய புரொகிராமெல்லாம் எழுதி பயமுறுத்துகிறீர்கள் :-)

இந்தாங்க, இதுக்கென்ன பதில் ???

class நன்றி
{
void sayநன்றி()
{
cout<<"நன்றி தலைவரே";
}
}

void main()
{
நன்றி.sayநன்றி();
}

****

அனானியாக எழுதிய பாலாஜி ராகவன் அவர்களே, உங்க பதிலை பதினைந்து தடவை படிச்சுப் பாத்துட்டேன்.. ஒன்னும் விளங்கலை, தயவுசெஞ்சு நீங்களே திரும்ப வந்து நோட்ஸ் - விளக்கவுரை போட்ருங்களேன் :-)))

Dharumi said...

Anonymous said...
அடிக்காத மனைவி//
ரொம்பதான் பயந்து போய் இருக்கிறதுமாதிரி காட்டிக்கிறீங்களே...
"வாழ்க்கையே நாடகமேடைதானே"!

- என் இந்த பின்னூட்டம் எப்படி அனானி என்று வந்தது என்று தெரியவில்லையே !

SK said...

தூங்காத இரவுகளில்
எழுதிய கவிதைகளைப்
படித்துப் பார்த்ததும்
மனதில் தோன்றிய எண்ணங்கள்!

நீங்கள் மணமானவர்!
ஏற்கெனவே காதலித்தவர்!
காதலிக்கு அனுப்பிய கடிதங்களை
தந்தையிடம் அவள் போட்டுக்கொடுக்க
கோழை போலல்லாமல் வீரனாக
இடிபோன்ற அடிகளை வாங்கினவர்!

காதலியின் பெயர் சங்கீதா!
இன்னும் அவரை மறக்க முடியாமல்
காற்று விசிறியில் இயற்கைப் படத்தின் நடுவில்
யாருக்கும் தெரியாமல் அவள் படத்தை
இன்னமும் ஒட்டிவைத்து மகிழ்பவர்!

மனைவி அதை ஒருநாள் கண்டுபிடிக்க
அவரிடம் மொத்துப் பட்டவர்!
இதையெல்லாம் மறக்க வேண்டி
வலைப்பூ ஆரம்பித்தவர்!

ஒன்றிரண்டு பின்னூட்டம் வந்ததும்
நாளையே நாம்தான் நட்சத்திரம்
என்னும் கனவில் நிதம் வாழ்பவர்!

-தாரகை ஆவது கிடக்கட்டும்
முதலில் ஒரு பின்னூட்டமாவது
வாங்கப் பார் என உள்மனது
அரற்றுவதால் தூக்கம் தொலைத்தவர்!

பின்னூட்டம் விழும்போது
கணினியில் வருகின்ற
'டிங்' எனும் சத்தத்திற்காக
கணினியை மார்போடு அணைத்தே
படுத்துப் புரள்பவர்!
[மொத்திய மனைவி இன்னும்
நெருங்கி வராததும்
ஒரு காரணமாய் இருக்கலாம்!]

அதனால் இப்போது எங்களையெல்லாம்
பழி வாங்கிக் கொண்டிருப்பவர்!!

:::))


[லைட்டாக எடுத்துக் கொள்ளவும்!]

பழூர் கார்த்தி said...

தருமி, உங்கள் கணிணியை அனானி அட்டாக் செய்து விட்டார் என நினைக்கிறேன், ஜாக்கிரதை :-)

***

எஸ்கே, நீங்கள் எழுதிய கவிதை அருமையிலும் அருமை !!!
நான் இதை லைட்டாகவும், கனமாகவும் எடுத்துக் கொண்டேன் :-))

அதெப்படிங்க, நான் கல்யாணமானவன், காதலித்தவன், மனைவி கையால் அடிவாங்கிக் கொண்டிருப்பவன் என்றெல்லாம் சரியாக கெஸ் செய்தீர்கள், ரொம்ப புத்திசாலி நீங்கள் :-) !!

****

எஸ்கே, அதிலும் இந்த வரிகள் மிகவும் ரசித்தவை

//பின்னூட்டம் விழும்போது
கணினியில் வருகின்ற
'டிங்' எனும் சத்தத்திற்காக
கணினியை மார்போடு அணைத்தே
படுத்துப் புரள்பவர்!
[மொத்திய மனைவி இன்னும்
நெருங்கி வராததும்
ஒரு காரணமாய் இருக்கலாம்!]//


நீங்களும் கவிதை எழுத ஆரம்பித்து விடுங்கள், தமிழ்மணத்தை சும்மா
விடக்கூடாது :-)))) !!!

Chandravathanaa said...

ம்.. ரசிக்கும் படியாக எழுதியிருக்கிறீர்கள்.

பழூர் கார்த்தி said...

சந்திரவதனா, நன்றி!!

<<>>

எப்படியாவது பின்னூட்ட கவுண்ட்டர் நாற்பதை (40) தொட்டு விட்டால் நன்றாயிருக்கும் :-)))

ஆபிஸில் பக்கத்து சீட் ஃபிகரிடம், பெரிய எழுத்தாளன் என்று சொல்லியிருக்கிறேன் :-))))

நிலவு நண்பன் said...

//என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய்
தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும்,
இருக்கும்வரை இருந்தே தீருவேன்...
ஏனென்றால் நண்பர்களே,
போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல...//

சரி சரி கோவப்படாதீங்க நண்பா..தமிழ்மணத்துல பேசி உங்களை அடுத்த தடவை நட்சத்திரமாக்கி விடலாம் சரிதானே..நிம்மதியா தூங்குங்க..

நாமக்கல் சிபி said...

நீங்களும் கவிதை எழுதுவீங்களா?

அப்ப சரி!

இங்கே கலாய்க்க ஆள் கிடைக்காம திண்டாடிகிட்டு இருக்கேன்!

பழூர் கார்த்தி said...

நிலவுநண்பா,

//சரி சரி கோவப்படாதீங்க நண்பா..தமிழ்மணத்துல பேசி உங்களை அடுத்த தடவை நட்சத்திரமாக்கி விடலாம் சரிதானே..நிம்மதியா தூங்குங்க.. //

எனக்கு நட்சத்திரம் வேணாங்க, பின்னூட்டம் கிடைச்சா போதும் :-))

<<>>

எட்டாவது வள்ளல் சிபி,

//இங்கே கலாய்க்க ஆள் கிடைக்காம திண்டாடிகிட்டு இருக்கேன்! //

ஆரம்பிச்சு வைங்களேன், விளையாட்டை :-)))