Wednesday, August 09, 2006

கவனாமாயிருங்கள், இது உங்களுக்கும் நடக்கலாம் !

இன்று ரக்-ஷா பந்தன் தினம். பெண்கள், தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி உறவைக் கொண்டாடும் தினம். கவனாமாயிருங்கள் நண்பர்களே, இது இன்று உங்களுக்கும் நடக்கலாம். அழகான பெண்களைப் பார்த்தால் தூர ஓடி விடுங்கள். அதிகம் பெண்கள் கூடும் ஷாப்பிங் மால் போன்ற இடங்களை இன்று தவிர்ப்பது நல்லது. முழுக்கை சட்டை போட்டு வெளியில் நடமாடுங்கள்.

விஜய் 'நேருக்கு நேர்' படத்தில் ஹீரோயின் கவுசல்யாவிடம் சென்று 'ஏன், எங்களுக்கெல்லாம் ராக்கி கட்டி விட மாட்டீங்களா?' என்று கலாய்ப்பார். இதன் பிறகு 'அகிலா..அகிலா..' என்று சூப்பர் பாட்டு ஒன்று வரும்.

இதேபோல் நானும், இன்று அலுவலக பேருந்தில் ஏறி மேற்சொன்ன வசனத்தை கூறினேன் (ஹிந்தியில்தான் - புனேவில் தமிழ் தெரிந்த பெண்கள் குறைவு). அடுத்த வினாடியே, என் இரு கைகள் முழுவதிலும், விதவிதமான ராக்கிகள், நான் கதறக் கதற கட்டப்பட்டன. இதனால், நான் கூடிய சீக்கிரம் இந்த அலுவலகத்திலிருந்து மாறிவிடலாமென்று இருக்கிறேன்.

ஆகவேதான், இந்த எச்சரிக்கைப் பதிவு. கவனாமாயிருங்கள் நண்பர்களே !! சொந்த சகோதரியிடம் மட்டும் ராக்கி கட்டிக் கொள்ளுங்கள் !

அழகான பெண் ராக்கி கட்ட வந்தால், எப்படி எஸ்கேப் (தப்பி ஓடுவது) ஆவது என்று பின்னுட்டத்தில் யோசனை கூறுங்கள். பின்னூட்டமளிப்பவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ப்ளாஸ்டிக் குடம் வழங்கப் படும் !!!

படத்திற்கு நன்றி: தினமலர்

6 comments:

தேவ் | Dev said...

நீர் சோம்பேறி எனபதை அடிக்கடி நிருபிக்கிறீர் அய்யா.. நேத்தே நம்ம சங்கத்துல்ல இந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவிச்சு தீர்மானம் போட்டாச்சு.. நீர் இன்னிக்குத் தான் அதைப் பதிவிடுறீரு...

Vajra said...

கடந்த ரெண்டு வருஷமா...இந்தியாவில் இல்லாமல் தப்பித்து விட்டேன்....இல்லென்னா "அண்ணா " வாக்கி அம்போ என்று விட்டு விடுவார்கள்...அழகிகள்!!

ராசுக்குட்டி said...

தங்கச்சி... என்று தலைவர் MGR பாணியில் கட்டிப்பிடிக்கப் போகலாம்!

ஒண்ணா ராக்கி கயித்துல இருந்து தப்பிக்கலாம்... இல்லன்னா...

பழூர் கார்த்தி said...

தேவ், முன்பே வ.வா.சங்கத்தில் தீர்மானம் போட்டாச்சா, சாரி தலைவரே, பார்க்கலை...

என் சுறுசுறுப்பை பாரட்டுனதுக்கு நன்றி :-)))

****

வஜ்ரா, அதனாலென்ன இஸ்ரேல்லயும் ரக்-ஷா பந்தனை அறிமுகப்படுத்தி விடுங்களேன் :- )!!

****

ராசுக்குட்டி, தங்கச்சி என்று கூறிவிட்டால் பின் எப்படி தப்பிப்பது ?? நீங்க வேற :-)

SK said...

1. இரண்டு கையிலும் முழு நீள மாவுக்கட்டு போட்டுக்கலாம்!
2. பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைகளை எடுக்காமல் அலையலாம்.
3. கூடவே ஒரு பையனை கூட்டிக்கிட்டுப் போய், அவன் கையை நீட்டி அதில் கட்டி விடச் சொல்லலாம்.
4. கைவசம் ஒட்டுதாடி, மீசை வைத்திருந்து, அழகான பெண்கள் வரும்போது ஒட்டி மறைத்துக் கொள்ளலாம்.
5. 'ஐ லவ் யூ'ன்னு முழங்கையில் பச்சை குத்திக் கொண்டு நீட்டச் சொல்லும் போது காமிக்கலாம்.

இதெல்லாத்தையும் விட சூப்பர் ஐடியா,
வெளியில் அன்று முழுதும் தலை காட்டாமல் ஜுரம்னு பொய் சொல்லி விடலாம்!

சீக்கிரம் பிளஸ்டிக் குடத்தை அனுப்பி வைக்கவும்!!

பழூர் கார்த்தி said...

அனானி பின்னூட்ட வசதியை நீக்கி விட்டதால், ப்ளாக்கர் அக்கவுண்ட் இல்லாத ஹைதராபாத் நண்பர் ச.அருண், தனது பின்னூட்டத்தை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்... அவரது பின்னூட்டம் கீழே

****

வட
இந்திய
பழக்கம்
என
அவர்கள்
ராக்கி
கட்ட
வரும்
பொழுது
தென்
இந்திய
பழக்கம்
என
கையில்
தாலியுடன்
நிற்கவும்.....க
க க போ

அருண் ச

***