Friday, May 13, 2011

தமிழகத் தேர்தல் 2011 - சில செய்திகளும், சில கமெண்ட்சும்

கலைஞர் டிவி காலை 945 மணி வரை சிறப்பு ஓளிபரப்பை வைத்துக்கொண்டு திமுக 29 இடங்களில் முன்னிலை, அதிமுக 28 இடங்களில் முன்னிலை என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்கள், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் பாடல்கள் ஒளிபரப்பினர். நக்கீரன் கோபால் 945 மணிக்கும் நாங்கள்தான் ஆரம்பத்திலேயே சரியாகக் கணித்தோம் திமுக வெற்றிபெறுமென்று கூவிக் கொண்டிருந்தார்.

கமெண்ட்: கோவாலு, உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லியா? உங்கள கடல்ல தள்ளினாக் கூட கட்டுமரமா மிதப்பீங்க போலிருக்கே!!

அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.
வடிவேலு: அப்ப நானாத்தான் மாட்டிட்டனா??

கொளத்தூரில் முடிவு தள்ளிவைப்பு, மெஷின் கோளாறால் இழுபறி
ஸ்டாலின்: நமக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குதோ??

கலைஞர்: தமிழக மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து விட்டார்கள்
அப்ப இனிமே இளைஞன், பொன்னர் சங்கர் மாதிரி நிறைய படம் கொடுப்பீங்க போலிருக்கே, பாவம்தான் நாங்க!!

தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர் கட்சியாகிறது.
ரஜினி அப்பவே தமிழக மக்களை இனிமே ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதுன்னு இதை நினைச்சுத்தான் சொன்னாரோ? என்ன கொடுமை சரவணன் இது??

ரஜினி பூரண நலமாக உள்ளார்
இதுக்கும் எலக்சன் ரிசல்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை. அவரு ஓட்டு போட்டதை வீடியோ எடுத்த நாளிலிருந்தே உடம்பு சரியில்லாம் இருந்தாரு, பாவம் இப்பதான் பாதி உசுரு வந்துருக்கு!!

சட்டசபை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்படும்
ஆரம்பிச்சீட்டிங்களா? இன்னும் ரிசல்ட்டே முழுசா வரலையே?