Monday, November 22, 2010

எனக்குப் பிடித்த பத்து நடிகர்களின் பத்து திரைப்படங்கள்..

நான் எந்த நடிகரின் விசிறியோ, தீவிர ரசிகனோ அல்ல. தமிழ் சினிமாவுக்கு, நல்ல திரைப்படங்களுக்கு ரசிகன்.




நான் உலகத் திரைப்படங்களையோ, வேற்று மொழி திரைப்படங்களையோ நிறைய பார்த்தவன் இல்லை. மேட்ரிக்ஸ் படமே எனக்கு விஜய் டிவியில் தமிழில் பார்த்த பிறகுதான் பாதி புரிந்திருக்கிறது :-)


1. கமல் - அவ்வை சண்முகி
2. ரஜினி - எந்திரன்
3. சூர்யா - வாரணம் ஆயிரம்
4. ஆர்யா - மதராச பட்டினம்
5. வடிவேலு - வின்னர்
6. ஐஸ்வர்யா ராய் - ராவணன்
7. விக்ரம் - சாமி
8. திரிஷா - அபியும் நானும்
9. ஜாக்கிசான் - Rush Hour
10. அமிதாப் பச்சன் - சீனி கம்

இதை சாக்காக வைத்து பதிவர்கள் தொடர் பதிவு போட்டும், அனானிகள் இஷ்டத்திற்கு பின்னூட்டம் போட்டும் (கலாய்க்கலாம், ஆனால் நாகரிகமாக) கும்மியடிக்கலாம்!!! :-))

Sunday, November 21, 2010

சென்னை பிசாஹட்டின் புதிரான போக்கு..

சென்னை சாலிகிராமம் ஆற்காடு ரோட்டில் பிசாஹட் (Pizza Hut) உள்ளது. எங்கள் வீட்டிற்கு அருகே இருப்பதால் பிஸ்ஸா (அல்லது பிசா.. இதற்கு தூய தமிழ்ப் பெயர் என்ன?) சாப்பிட நினைத்தால் இங்கேதான் செல்வோம்.

நேற்று சனி இரவு 10:10 மணிக்கு அங்கே சென்றோம். ஆனால் கடையை மூடிக் கொண்டிருப்பதாகவும், மேலும் சாப்பிட எதுவுமில்லை என்றும் கூறினர். சரியென்று நாங்கள் வெளியே வந்தபோது வாசலருகே போர்டில் வேலை நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று போட்டிருந்தது. அதைப் பார்த்து விட்டு நாங்கள் திரும்பவும் உள்ளே சென்று ஏன் சீக்கிரம் மூடுகிறீர்கள் என்று கேட்டதற்கு சரியான பதிலில்லை. சனிக்கிழமை என்பதால் சீக்கிரம் மூடுகிறோம் என்றார்கள்.




நாங்கள் திரும்பி வரும்போது, ஒரு இளைஞர் கூட்டம் வேறு வந்து விசாரித்து விட்டு திரும்பினர்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைதானே மக்கள் நிறையபேர் வருவர். சனி இரவு என்பது வார இறுதியாதால் அப்போது கூடுதல் நேரம் கூட திறந்து வைக்கலாமே? ஏன் 11 மணிக்கு மூட வேண்டிய கடையை சீக்கிரம் மூட வேண்டும்?

நாங்கள் அருகிலுள்ள வேறு ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு திரும்பி வரும்போது இன்னமும் பிசாஹட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஏன் இன்னமும் கடையை மூடவில்லை? வேறேதுனும் நடந்து கொண்டிருக்கிறதா?

இப்படி சந்தேகத்திற்கிடமான வகையில் எங்களை உணவருந்த அனுமதிக்காததை எதிர்த்து நுகர்வோர் கோர்ட்டில் முறையிட இயலுமா, அதற்கு என்ன ஆதாரம் எங்களிடமிருக்கிறது என்ற கேள்விகளுடன் காரை செலுத்திக் கொண்டிருந்து போது எப்.எம்மில் வழிந்தது 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே..' என்ற பாடல்!!!

Saturday, November 20, 2010

விஜய் டிவியின் சுவாரசியமான நிகழ்ச்சிகள்..

வழக்கமான சீரியல், சினிமாவை தவிர்த்து நிறைய வித்தியாசமான, சுவாரசியமான நிகழ்ச்சிகளை விஜய் டிவி தொடர்ந்து அளித்து வருகிறது. எனவேதான் எனக்கு தமிழ் தொலைக்காட்சி சானல்களிலேயே விஜய் டிவியை நிறைய பிடிக்கிறது.




எனக்கு பிடித்த சில நிகழ்ச்சிகள்

  • அது, இது, எது?
  • ஒரு வார்த்தை ஒரு லட்சம்
  • நீயா நானா?
  • சூப்பர் சிங்கர் (இதில் வரும் குட்டிப்பையன் ஸ்ரீகாந்தை எனக்கு நிறைய, இயல்பான இனிப்பான பாடகர் மனோவை இன்னும் நிறையவும் பிடிக்கும்.)
  • முன்பு தமிழ் பேச்சு என் உயிர் மூச்சு என்று ஒரு நிகழ்ச்சி வந்தது, இப்போது ஒளிபரப்பாகிறதா என்று தெரியவில்லை.

சன் டிவிக்கு சரியான போட்டியை அளிப்பது விஜய்தான் என்பது பொய்யில்லை அல்லவா?