Thursday, October 05, 2006

உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன்

உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. சிக்குன்குனியா நோய் தீவிரமடைந்துள்ள இந்நிலையில் எதிர்க்கட்சிகள் இதையே ஆயுதமாக எடுத்துள்ளன. அரசாங்கமோ, நோயின் தீவிரத்தை உணராமல் சப்பைக்கட்டு கட்டி வருகிறது. தேன்கூடு போட்டியின் இந்த மாத தலைப்பைப் பார்த்தவுடன் இது குறித்து, என் மனதில் உதித்த கார்ட்டூன் இது.

கார்ட்டூனைப் பார்த்து, ரசித்து உங்கள் கருத்தை மறவாமல் சொல்லுங்கள். அனேகமாக தமிழ் வலைப்பதிவுகளில் இதுவே முதல் கார்ட்டூன் என நினைக்கிறேன், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் !!



***

தேன்கூடு-தமிழோவியம் அக்-06க்கான போட்டிக்கான கார்ட்டூன்.

20 comments:

கார்த்திக் பிரபு said...

i enjoyed it ..wishes somberi paiyan

லக்கிலுக் said...

கார்ட்டூனன எல்லாம் விட்டுத் தள்ளுங்க தலைவரே....

தேன்கூடுப் போட்டி படைப்புகளுக்கான உங்கள் விமர்சனம் எங்கே? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

சென்ற முறை மாதிரி விலாவரியாக விமர்சனம் செய்ய முடியலைன்னாலும் பரவாயில்லை. கொஞ்சம் சுருக்கமாகவாவது ட்ரை பண்ணுங்க தலைவா.... ப்ளீஸ்....

உங்க விமர்சனங்களைப் பார்த்து தான் நான் சென்றப் போட்டிக்கான படைப்புகளையே படித்தேன்.....

பழூர் கார்த்தி said...

நன்றி கார்த்திக் பிரபு !

***

நான் உருவாக்கிய முதல் கார்ட்டூன், இது..பார்ப்போம் எப்படி வரவேற்பு பெறுகிறது என்று !!

***

இந்த மாத போட்டிக்கு ஏதாவது படைப்பு அளித்துள்ளீர்களா ??

மு.கார்த்திகேயன் said...

சோம்பேறி பையா.. என் வலைதளத்திற்கு முதல் வருகைக்கு நன்றி..

கார்ட்டூன் மிகவும் அருமையா இருக்கிறது.. முயற்சிக்கு வாழ்த்துக்கள்

vv said...

கார்ட்டூன் நன்றாக உள்ளது நண்பரே

//அனேகமாக தமிழ் வலைப்பதிவுகளில் இதுவே முதல் கார்ட்டூன் என நினைக்கிறேன்,//

இதைப் பாருங்கள்

http://tamiltoons.blogspot.com/

கார்ட்டூனுக்காகவே தொடங்கினது. கொஞ்சநாள் கழித்து படம் வரைந்த நண்பர் வெளியூர்போய்விட்டார். எனக்கு நேரமில்லாமல் அது அப்படியே கிடக்கிறது.

விஜய் தன்பதிவில் சில பிளாஷ் கார்ட்டூன் போட்டார்.

சமீபத்தில் நீங்கள் தான்.

பழூர் கார்த்தி said...

நன்றி லக்கிலுக்,

இந்த முறை விமர்சனம் செய்வதாக இல்லை :-))

அனைத்து படைப்புகளையும் படித்து, விமர்சனம் செய்வதற்கு நிறைய நேரமும், உழைப்பும் தேவைப்படுகிறது, இது தற்போது இயலாது...

பார்ப்போம், பிறகு முடிகிறதா என்று...

***

கார்த்திகேயன் முத்துராஜன்,

நன்றி...

yata said...

கார்டூன் நல்லாருங்குங்க. வாழ்த்துக்கள்.

//அனைத்து படைப்புகளையும் படித்து, விமர்சனம் செய்வதற்கு நிறைய நேரமும், உழைப்பும் தேவைப்படுகிறது, இது தற்போது இயலாது...

பார்ப்போம், பிறகு முடிகிறதா என்று...//

ஆமா, உண்மைதான். போன முறை நீங்க கலக்கிட்டீங்க. எல்லாருக்கும் ரொம்ப நாட்கள் உங்கள் விமர்சனங்கள் நினைவில் நிற்கும்.

இந்த முறை உங்க வழியில நான் கொஞ்சம் முயற்சி செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

Boston Bala said...

சுவையான ஆரம்பம். வித்தியாசமான போட்டி இடுகை!

மௌஸைப் பிடித்து வரைவது சௌகரியமில்லை என்று எண்ணுகிறேன். வரைவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் உயர்தர நிரலிகள் (நிழல், முப்பரிமாணம் போன்றவற்றை சுலபமாக்கும்), மௌசுக்கு பதிலாக டேப்லெட், பென்சில் போன்ற சுட்டுக்கருவிகள் பயன்படுத்தலாம்.

பழூர் கார்த்தி said...

விகடகவி, பாரட்டிற்கு நன்றி !

http://tamiltoons.blogspot.com/ - தமிழ்டூன்ஸ் தளம் நன்றாக உள்ளது, தொடருங்களேன் :-)

தகவலுக்கு நன்றி..

//விஜய் தன்பதிவில் சில பிளாஷ் கார்ட்டூன் போட்டார்.//

சுட்டி கொடுக்க இயலுமா ??

***

//உங்க விமர்சனங்களைப் பார்த்து தான் நான் சென்றப் போட்டிக்கான படைப்புகளையே படித்தேன்..... //

லக்கிலுக், எனது விமர்சனங்களுக்கு மதிப்பளித்ததற்கு மிக்க நன்றி, இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது :-) !!

***

யதா, பாராட்டிற்கு நன்றி..

//இந்த முறை உங்க வழியில நான் கொஞ்சம் முயற்சி செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். //

நிச்சயம் செய்யுங்கள், வாழ்த்துக்கள் !!

பழூர் கார்த்தி said...

நிர்மல், பாராட்டிற்கும், + போட்டதற்கும் மிக்க நன்றி !

***

பாஸ்டன் பாலா, வருகைக்கும், பாராட்டிற்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி !!

படங்கள் வரைய நிரலிகளின் பெயர் சொன்னால், பயன்படுத்த முயற்சிக்கிறேன்.. நன்றி !

vv said...

பார்ப்போம். டூன்சாமி அழகா கிராபிக்ஸ் பண்ணித் தருவார். அவர் இல்லாம டூன்ஸ் ஆர்வம் வற்றிப்போச்சு. அப்பப்போ பதிவுகளை படிப்பதோடு சரி. நேரம் கிட்டும்போது மறுபடி இட முயற்சி செய்கிறேன்.

vijay- அல்வாசிட்டி http://halwacity.com/blogs/

கார்ட்டூன்களுக்கான சுட்டிகளை தேடித்தான் பார்க்க வேண்டும்.
கிடைத்த ஒன்று இது. படம் காணவில்லை http://halwacity.com/blogs/?p=204

அப்புறம் காஞ்சி பிலிம்ஸ் கூட அரசியல் கார்ட்டூன் போட்டு வந்தார். அவருடைய பழைய பதிவுகள் எங்கே போனதென்று தெரிவில்லை. http://kanchifilms.blogspot.com

பதிவர் பொன்ஸ் இப்போ ஒரு பிளாஷ் கார்ட்டூன் போட்டிருக்k

ரவி said...

சிறப்பாக உள்ளது சோம்பேறி...

டீவியா மைக்ரோவேவ் ஓவனான்னு சரியா தெரியல்ல..))

நல்ல முயற்ச்சி..

இரா. வசந்த குமார். said...

நன்றி சோம்பேறிப் பையன்... உங்கள் வருகை கண்ட பிறகே, நாமும் போட்டியில் இருக்கிறோம் என்று தெரிய வருகிறது.. அதெப்படி டைமிங்கா, நச்சுனு கார்ட்டூன் போட்டிருக்கீங்க... அருமையாக் இருக்குங்க..

பழூர் கார்த்தி said...

விகடகவி, மீள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி !!

அல்வாசிட்டி பதிவை, படமில்லாமல் பார்த்தேன் :-)

பொன்ஸ் பதிவும் நன்றே !!

உங்க படத்தில் வரும் அனிமேஷன் கூட கலக்கல்தான் போங்க :-))

***

செந்தழல் ரவி, நன்றி

//டீவியா மைக்ரோவேவ் ஓவனான்னு சரியா தெரியல்ல..))//

ஏங்க, அதுக்குத்தான் டயலாக்ல கலர்டிவின்னு தெளிவா போட்ருக்கோம்ல... கஷ்டப்பட்டு படம் வரைஞ்சா உங்களுக்கு கிண்டலா இருக்கா :-)))))))))

***

வசந்த், ரொம்ப நன்றி, டைமிங்கா ஏதாவது படைக்கலாம்னுதான் இந்த கார்ட்டூன்... கத, கவித எல்லாம் போரடிச்சு போச்சு (யாரும் படிக்க மாட்டேங்கறாங்க என்பது வேற விஷயம்...)
:-))))

ENNAR said...

சோம்பேரி பையன் தாங்கள் ஓட்டு போடவில்லை என்றால் என்ன உங்கள் ஓட்டை வேறுயாராவது போடப் போகிறார்கள் நீங்கள் சொந்தஊரில் இல்லையே. உங்கள் சொந்தகாரர் உங்கள் வார்டில் போட்டியிடுவதாக கேள்வி. நமது தலைவர் தான் அதிகமாக வெற்றிப்பெறப்போகிறார்.

Boston Bala said...

Some links for downloading...

The ultimate resource page:
Google Directory - Computers > Software > Graphics > Vector Based

Pretty handy:
Easy Drawing Software - Download SmartDraw FREE and draw anything easily!

For Professional design:
SketchUp Home

One more:
Vector Graphics, Illustration and Drawing Free Software Download - DrawPlus

ராசுக்குட்டி said...

முதல் முயற்சி நன்றாக உள்ளது, தொடர்ந்து வரையுங்கள்...சித்திரமும் கைப்பழக்கம் ;-)

btw the concept was topical பாராட்டுக்கள்!

பழூர் கார்த்தி said...

என்னார்,

//தாங்கள் ஓட்டு போடவில்லை என்றால் என்ன உங்கள் ஓட்டை வேறுயாராவது போடப் போகிறார்கள்//

ஆமாங்க அதுதான் பயமா இருக்கு, என்ன பண்ணலாம்னு சொல்லுங்களேன், போஸ்டல் ஓட்டு (அ) இணைய ஓட்டு ஏதாவது உண்டா ??

//நமது தலைவர் தான் அதிகமாக வெற்றிப்பெறப்போகிறார். //

இது யாருங்க நமது தலைவர் ????

***

பாஸ்டன் பாலா, சுட்டிகளுக்கு மிக்க நன்றி, பயன்படுத்த முயற்சிக்கிறேன் :-)

***

ராசுக்குட்டி,

//சித்திரமும் கைப்பழக்கம்//

புதுமொழி : சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் ப்ளாக் பழக்கம் :-)))

//btw the concept was topical பாராட்டுக்கள்! //

நன்றி, நன்றி !!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல முதல் முயற்சி.

பழூர் கார்த்தி said...

குமரன் எண்ணம்,

நன்றி, நன்றி !!