இன்று வெள்ளிக்கிழமை,
நாளை சனிக்கிழமை,
நாளை மறுநாள் ஞாயிறு,
நம் பெயர்கள்,
தோழிகளின் பெயர்கள்,
நம் செல்பேசி எண்கள்,
மின்னஞ்சல் கடவுச்சொல்,
பணம் வழங்கும் அட்டையின் கடவு எண்,
நேற்று நாம் பார்த்த திரைப்படத்தின் கதை....
எல்லாம் நினைவில் உள்ளதடா
உன்னை பார்க்கும் வரை, என் காதலா !!
<<<<<>>>>>
புகைப்பட உதவி : நண்பர் ராகவேந்தர், புனே.
4 comments:
//உன்னை பார்க்கும் வரை, என் காதலா !!//
:))))
நல்ல தலைப்பு வெச்சிருக்கீங்க! இப்பதான் எல்லாரும் வெள்ளி,சனின்னு டைட்டில் வைக்கிறத நிறுத்திருக்காங்க, நீங்க ஆரம்பிச்சுவெச்சுடுவீங்க போலிருக்கே
:)))))
நன்றாக இருக்கிறது. படமும் சேர்த்துதான்.
நண்பர்களே, வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !!
<<>>
நாகை சிவா, இந்த கவிதை காதலி காதலனை நினைத்து கூறுவது போல் அமைந்திருக்கிறது, கடைசி இரண்டு வரிகளை சற்று இப்படி மாற்றினால்
..எல்லாம் நினைவில் உள்ளதடி உன்னை பார்க்கும் வரை, என் காதலி!!
..
காதலன் -> காதலி என கருதலாம், இது வாசகர்களின் புரிதலுக்கே/கற்பனைக்கே, :-)))
<<>>
வேந்தன்,
//இப்பதான் எல்லாரும் வெள்ளி,சனின்னு டைட்டில் வைக்கிறத நிறுத்திருக்காங்க, நீங்க ஆரம்பிச்சுவெச்சுடுவீங்க போலிருக்கே//
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, இப்பவே இந்த கவிதைக்கு காதலன் பதில் சொல்வது போல் என்கிட்ட ஒரு கவிதை தயாராயிருக்கு. கவிதை தலைப்பு "இன்று திங்கள்கிழமை...".
இது திங்கள்கிழமை வெளியிடப்படும்,
மறக்காம வந்து பாருங்க :-))
<<>>
கார்மேகராஜா,
//நன்றாக இருக்கிறது. படமும் சேர்த்துதான். //
உங்களுக்காக உபரித் தகவல், படம்
கங்காதாம்-புனேயில் நண்பர் ராகவேந்தரால் எடுக்கப்பட்டது.. இன்னும் சில அருமையான படங்களுடன் எம் கவிதைகள் தொடரும் :-)))
Post a Comment