Monday, October 09, 2006

மழைச்சாரலில் நனைந்த கவிதைகள்



1

மழை பொழியும் பின்னிரவுகளில்
சுடச்சுட தேநீருடன்
வராந்தாவில் நின்றபடியே
மழையை ரசிக்கும்போதும்
ஞாபகத்திற்கு வருவதில்லை,
வீடில்லாமல் மழையில் நனைந்தபடியே
தெருவில் உறங்கும் மக்களின் வாழ்க்கை !!

***

2

நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோம்,
உன் தங்கையை நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!

***

3

மழையில் நனையும் கார்
நடுவீதியில் நின்றவுடன்
கூப்பிடாமலேயே ஓடிவந்து
தள்ளிவிடும் தெருவில் வசிக்கும் சிறுவர்கள்...
பிச்சைக்காரருக்கு
சூடான சாதம் போடும்
பக்கத்து வீட்டு பாட்டி...
வழி தெரியாமல் தவிக்கும்
வெளியூர் காரருக்கு
கூடவே வந்து பஸ் ஏற்றி
விடும் கடலை விற்பவர்...
கீழே தவற விட்ட பணத்தை
கூப்பிட்டு எடுத்துக் கொடுக்கும்
வழிப்போக்கர்...
இவர்களுக்காக
இன்னும் இருக்கிறது ஆகாயம் !!!!

***

கடைசிக் கவிதை தமிழ்ச் சங்க போட்டிக்காக எழுதப் பட்டது. உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-))

17 comments:

ENNAR said...

சோம்பேரிப் பையன் நன்றாக உள்ளது தங்கள் கவிதை

SP.VR. SUBBIAH said...

Out of the 3 - number 2 is good

பழூர் கார்த்தி said...

நன்றி என்னார், தங்கள் புகைப்படத்தில் இருக்கும் பிள்ளையார் படம் அருமை...

எனது பெயர் சோம்பேறி பையன். "சோம்பேரிப் பையன்" அல்ல :-)))

***

நன்றி சுப்பையா, காதல் கவிதைகள் என்றுமே இளைஞர்களுக்கு போரடிப்பதில்லை.. நக்கல் நிறைந்த காதல் கவிதைகள் நிறைய எழுத விருப்பம் :-))

Hariharan # 03985177737685368452 said...

ஸ்வாமி,

//உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...//

தங்கையை என்பதுதானே சரி

படம் எந்த இடம்? கலக்கலாக பசுமை!

அறிமுகத்துக்கு அப்புறமா அண்ணன் என்ன செய்தார்?

எந்த ஆஸ்பிட்டல்ன்னு சொன்னா ஹார்லிக்ஸ்,சாத்துக்குடி அனுப்ப வசதியா இருக்கும்!

2சுள்ளுன்னு முதுகுல வெய்யில் மாதிரி உறைக்கிறது.
3ம் பரவாயில்லை:-)))

விமர்சனம், கவிதைன்னு கலக்கறே ஸ்வாமி! ஜமாய்ங்க.

அன்புடன்,

ஹரிஹரன்

இரா. வசந்த குமார். said...

1,2, ;-)

கார்த்திக் பிரபு said...

moondrumey nalla iruku somberi paiyan avaragle

dondu(#11168674346665545885) said...

மூன்றாவதிருக்க முதலிரண்டைப் பார்ப்பவர் யார்?

அவை நன்றாகவே உள்ளன என்பதில் ஐயமில்லை, ஆனால் நாம் இங்கு ஒப்பிடுகிறோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

ரெயின்போ, நன்றி !

***

ஹரிஹரன், நன்றி !!

//
//உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...//

தங்கையை என்பதுதானே சரி//

ஆமாம், சுட்டிக் காட்டியதற்கு நன்றி..
பதிவிலும் திருத்தி விடுகிறேன்..

//படம் எந்த இடம்? கலக்கலாக பசுமை! //

கிரிவன் என்ற மலைப்பகுதி, புனேவிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது.. வாருங்கள் ஒருமுறை !!

//அறிமுகத்துக்கு அப்புறமா அண்ணன் என்ன செய்தார்? //

உங்கள் கற்பனை ரசிக்க வைக்கிறது :-))))
(இப்படி சொல்லித்தான் தப்பிக்க வேண்டும் :-)))

//விமர்சனம், கவிதைன்னு கலக்கறே ஸ்வாமி! ஜமாய்ங்க.//

நடுவில் கார்ட்டூனை விட்டு விட்டீர்களே !!

***

வசந்த், மூன்று பிடிக்க வில்லையா, மூன்றுமே பிடிக்க வில்லையா :-))))
எதுவாயினும், நன்றி :-) !!

***

கார்த்திக் பிரபு, நன்றி !!

பழூர் கார்த்தி said...

டோண்டு,

//மூன்றாவதிருக்க முதலிரண்டைப் பார்ப்பவர் யார்? //

நன்றி !!

***

கேன்சரியன்,

இரண்டாம் கவிதையில் வார்த்தைப் பிழையை திருத்தி விட்டேன்..
நன்றி !!

முதல் 2 கவிதைகள் போட்டிக்கல்ல...

Ganesh Gopalasubramanian said...

:-)

பழூர் கார்த்தி said...

கோ.கணேஷ்,

கருத்திற்கு நன்றி :-)
எங்கே தற்போதெல்லாம் உங்கள் பதிவுகளை பார்க்க முடிவதில்லை ??

***

நண்பர் ச.அருண் ஹைதராபாத்திலிருந்து மின்னஞ்சலில் பின்னூட்டம் அனுப்பியுள்ளார்.. அது பின்வருமாறு :

1 & 3 - too gud...2 - as always ur "nakkal - naiyandi - sk" eppudi venumnalum sollalam.....as dondu
mentioned we compare all the three poems...but i dont see a reason to ignore 1 or 3(no offence meant to
dondu).....as i see, both r xcellent, both r potential to make people think...for perverted minds
"sk" means super kavithai ;-)

arun c

***

நன்றி அருண்..
நக்கல் நிறைந்த காதல் கவிதைகள் நிறைய எழுதப்போகின்றேன் :-))

Unknown said...

1 - touching

2- touching o touching

3 - my choice

Sundari said...

3rd Kavidhai was too good...
The reason is because each one of us would have experienced atleast one such situation...
Great going :-) !!!!

பழூர் கார்த்தி said...

தேவ், கருத்திற்கு நன்றி !!

***

சுந்தரி, நன்றி..

***

மூன்றாம் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.. முடிவுகள் இன்னும் வரவில்லை...

பழூர் கார்த்தி said...

போட்டி முடிவு நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியாகி விட்டது, நமது கவிதை அவுட்ட்ட்ட்ட்ட் :-)))

மஞ்சூர் ராசா said...

முதல் கவிதையும் மூன்றாம் கவிதையும் நன்றாக இருக்கின்றன.
இரண்டாம் கவிதை கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

FunScribbler said...

கார்த்தி, கவிதைகள் அருமை. கவிதை 3 ரொம்ப நல்லா இருக்கு. நல்ல சிந்தனை! தொடர்ந்து எழுதுங்கள்!