Saturday, September 03, 2005

அம்பியும், அன்னியனும்... Version 2.0

இந்த பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே எழுதப் பட்டது. சற்றே திருத்தப்பட்டு Version 2.0 ஆகவெளிவருகிறது.

இந்த பதிவிற்கு 'Alexandra' என்று தலைப்பு வைத்திருந்தால், இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் தமிழ்க் கட்டுரைக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறேன் என்று யாரவது தமிழ்க் குடிதாங்கிகள் போராட்டம் நடத்தினால் என்ன செய்வது என்று நினைத்து, தலைப்பை மாற்றி விட்டேன்.

உங்களுக்கெல்லாம் அலெக்ஸாண்டர் என்றவுடன் என்ன ஞாபகம் வரும்? வரலாற்றில் பல நாடுகளை படையெடுத்து வென்ற மாவீரர் அலெக்ஸாண்டர் ஞாபகத்திற்கு வருவார். அல்லது தமிழகத்தில் காவல்துறை டிஜிபி ஆக இருந்த அலெக்ஸாண்டர் ஞாபகத்திற்கு வரலாம். புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர் படம் கூட ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் எனக்கு அலெக்ஸாண்ட(ரா)ர் என்றால், திருச்சி முல்லை தியேட்டர் ஞாபகத்திற்கு வரும். எதற்கென்று புரிய வில்லையென்றால், திருச்சிவாசிகளிடம் விளக்கம் கேட்கவும்.

காலேஜ் படிக்கும் காலத்திலிருந்து, நான் கவிதைகள் எழுதுவதுண்டு.

'பெய்கிறது மழை..
சாய்கிறது தழை..'
என்று ஒரு ரேஞ்சில் புதுக்கவிதைகள் எழுதி குவிப்பேன்.

நோட்டீஸ் பின்பக்கம், பஸ் டிக்கெட், தியேட்டர் டிக்கெட் என்று எது கிடைத்தாலும் எதாவது எழுதி, அதை கவிப்பேரரசு வைரமுத்து ரேஞ்சுக்கு ஒவ்வொரு வரியையும் இரண்டு தடவை சத்தம் போட்டு சொல்லி கருத்து கேட்டதால், உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டுக் காரர்கள் காலி செய்து வேறு ஊர் சென்றார்கள். ஊரில் ஏதாவது வயசான கேஸ் ரொம்ப நாட்களாக இழுத்துக் கொண்டு கிடந்தால், என்னை அழைத்துச் சென்று கவிதை படிக்கச் சொல்வார்கள். மறுநாளே பால்தான். இருந்தும், என் கவிதை தாகம் குறைய வில்லை.

நண்பர்களின் ஊக்குவிப்பால், சில திருக்குறள்களை தற்காலத்திற்கு தக்கவாறு மறுவடிவமைத்தேன். அப்படி மறுவடிவமைத்த ஒரு குறளைப் பாருங்கள்.

குழலினிது யாழினிது என்பர் அவர்தம்
கேர்ள்பிரண்டினை கிஸ் அடிக்காதவர்.

சென்ற முறை எழுதியிருந்ததற்கு நிறைய பதில்கள் வந்தன. ஆயிரக்கணக்கான வாசகர்கள் பாராட்டி எழுதியிருந்தார்கள் என்று ஜல்லியடிக்க விரும்ப வில்லை. சில நண்பர்கள் மெயில் மூலமாகவும், சிலர் போனிலும், வேறு சிலர் நேரிலும் பாரட்டினார்கள்/திட்டினார்கள். கடிதத்தைப் படித்த, ரசித்த, கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களுக்கு புரோக்கரேஜ் இல்லாமல் வீடு வாடகைக்கு கிடைக்கவும், Tax Deduct செய்யாத சம்பளம் கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திடீரென்று போன வாரம் ஆபிஸில் வேலை செய்ய வேண்டுமென்று சொல்லி விட்டார்கள். பழக்கமில்லாமததால் கஷ்டமாகி விட்டது. பேப்பர் படிக்க முடியாமல், டுபாக்கூர் மெயில்கள் படிக்க முடியாமல், கடலை போட முடியாமல் என்னடா வேலை இது என்று அக்தரைக் கண்ட கங்குலி போலாகி விட்டேன். தினமும் 12 பக்கத்திற்கு Project Status Report மெயிலில் பற்பல தவறுகளுடன் அனுப்பினேன். அதைப் படித்து நொந்து போய், என்னுடைய டீமில் 3 பேர் (Resignation) பேப்பர் போட்டார்கள். மிச்சமிருப்பவர்களை அடுத்த Projectல் பார்த்துக் கொள்வோம் என்று ரிப்போர்ட் அனுப்பவதை நிறுத்தி விட்டேன்.

Email பற்றிய பதிவால் சில சங்கடங்கள் ஏற்பட்டன. தொழில் ரகசியங்களை வெளியிடுகின்றேன் என்று சில நண்பர்கள் குறை கூறினர். அவர்கள் கருத்தும் சரிதான். அவர்களுக்கு சீக்கிரம் Girl Friends கிடைக்கட்டும் அல்லது திருமணமாகட்டும்.

குறை கூறுவது என்றவுடன், எனது காலெஜ் புரபசர் ஞாபகத்துக்கு வருகிறார். கிளாஸ் ரூமில் எப்போதாவது Fan நின்று விடும். உடனே பேன் இல்லாமல் வேர்க்கிறது, பாடம் கவனிக்க முடிய வில்லை என்று புரபசரிடம் புருடா விடுவோம். அவர் 5 நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்பார். எதற்கென்று கேட்டால், 5 நிமிடத்தில் உங்களுக்கு வேர்ப்பது பழகிவிடும் என்பார்.

குறை கூறுவதில் சிலர் கில்லாடிகள் என்றால், சிலர் குறை தீர்ப்பதில் கில்லாடிகள். நான் திருச்சியில் காலெஜ் படிக்கும் காலத்தில் Computer Course சேர்ந்தேன். அங்கே C, C++ என்று கணிணி மொழிகள் கற்று தந்தார்கள் அல்லது கற்றுத்தர முயற்சி செய்தார்கள். Lab Session-னின் போது, 20 லைனில் C Program அடித்தால் 40 Errors காட்டும். உடனே கிரிக்கெட்டில் Third Ampire-க்கு காட்டும் Signal போல் கை காட்டி Lab Assistant-டை கூப்பிடுவோம். அவர் வந்து சரி செய்த பிறகு 52 Errors காட்டும். அவர் இது 'System problem', 'Compiler Malfunction', 'Software corruption' என்று குத்து மதிப்பாக ஏதாவது சொல்வார். அதான் அவரே சொல்லிவிட்டாரே என்று குரூப்பாக கிளம்பி முல்லை தியேட்டருக்கு 'Alexandra' படம் பார்க்க சென்று விடுவோம்.

மறுநாள் சுத்தமாக குளித்து வந்து, அதே புரோகிராமை ஆராய்வோம். சா-பூ-த்ரீ போட்டு நான்கைந்து கமாக்களை எடுத்து Compile செய்தால், 45 Errors காட்டும். அப்போது சீனு என்ற புத்திசாலி எங்கள் செட்டில் இருந்தான். அவனைக் கூப்பிட்டு காண்பித்தால், 3 நிமிடத்தில் எல்லா Error-களையும் எடுத்து விடுவான். என்னவென்று பார்த்தால், தலைவர் Error வரும் Lines எல்லாவற்றையும் Delete செய்து விடுகிறார். Compile செய்தால் 0 Errors என்று வரும். Run செய்தால் System shutdown ஆகி, corrupt ஆகி விடும்.

இப்படி எனக்கும் கம்பியூட்டருக்கும், ஐய்வஸ்ர்யா ராய் - சல்மான் கான் போல் பொருத்தம் இருந்தது. எப்படியோ அடித்துப் பிடித்து காலேஜ் முடித்து ஹைதராபாத் ஒடி வந்து விட்டேன். வேலைக்கு வந்த பிறகு கொஞ்சம் பொறுப்பு வந்து C, Oracle கற்றுக் கொண்டேன்.

சமீபத்தில் 'அந்நியன்' படம் பார்த்தேன். அதில் வரும் விக்ரம் போல எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். சாதாரணமாக 'அம்பி' விக்ரம் போல் சாதுவாக இருப்பார். சாப்பிடும் போது 'அந்நியன்' ஆகி விடுவார். தன் தட்டில் இருப்பது மட்டுமல்லாமல், பக்கத்து தட்டையும் ஒரு கை பார்த்து விடுவார். நானே வாழ்க்கை வெறுத்துப் போய், சாதம் சாப்பிடப் பிடிக்காமல், ரவா தோசை வாங்கி வருவேன். அதில் முக்கால் தோசை பிடுங்கி சாப்பிட்டு விட்டு 'Have a nice lunch, friend' என்பார்.

இன்னொரு நண்பர் இருக்கிறார். வாய் கூசாமல் பொய் சொல்வார். சம்பளத்திலிருந்து, Girl friends எண்ணிக்கை வரை பொய்யோ பொய் என்று சாதனை படைப்பார். அஜித்குமார் பக்கத்து வீடு என்பார். 10th Std Exam-ல் கணக்கில் நூற்றுக்கு நூறு என்பார். 45 + 35 எவ்வளவு என்றால், 5 நிமிடம் யோசித்து, உடம்பு சரியில்லை, நாளைக்கு சொல்கிறேன் என்று நழுவுவார். இப்போது இவர் ஒரு MNC-யில் HR Dept-ல் வேலை பார்க்கிறார், 'Right person for right job' !

எனது இன்னொரு நண்பர் ஒரு கெட்ட வார்த்தை களஞ்சியம். தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் பட்டியல் போட்டு, எனக்கு இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை பேசினால் பிடிக்காதென்பார். அவர் வாயில் ஒரு நல்ல வார்த்தைக்கு இரண்டு கெட்ட வார்த்தை வரும் !

என்ன இருந்தாலும், இவர்களெல்லாம் எனது நண்பர்கள். இவர்களை விட்டுக் கொடுக்க முடியாது. நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள், நம் வாழ்க்கையில் எதாவது ஒரு Impact - பாதிப்பை எற்படுத்துகிறார்கள். எந்த ஒரு மனிதனுக்கும், Positives Negatives என இரண்டுமே இருக்கும். எதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும் !

16 comments:

குழலி / Kuzhali said...

நன்றாக இருந்தது பதிவு, ரசித்து படித்தேன்.

ramachandranusha said...

நல்லாத்தான் இருக்கு, ஆனா பேருதான் சரியில்லே. சோம்பேறி பையன் என்பதை வால் பையன் என்று மாற்றிக் கொண்டால் பொறுத்தமாய் இருக்கும் :-)))))

Suresh babu said...

Good one.

:-)))

kasiarunachalam said...

நல்ல நகைச்சுவை பதிவு...அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது "திடீரென்று போன வாரம் ஆபிஸில் வேலை செய்ய வேண்டுமென்று சொல்லி விட்டார்கள்." மற்றும் கணிணி மொழிகள் Lab Session.

மோகன்தாஸ் said...

அய்யோ பழைய நினைவுகளையெல்லாம் கிளப்பிவிட்டுவிட்டீர்கள்.

நூறு நாள் அந்த படம் ஓடினதா நினைவு. சரியா?

வீ. எம் said...

ஹா ஹா ஹா, நல்ல நகைச்சுவை பதிவு சாரே!!
//ஆனால் தமிழ்க் கட்டுரைக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறேன் என்று யாரவது தமிழ்க் குடிதாங்கிகள் போராட்டம் நடத்தினால் என்ன செய்வது //
அது சரி பையா, ஆனா
Positives Negatives 'Right person for right job' 'Have a nice lunch, friend' Std Exam Girl friends CompileMalfunction', 'Software corruption'
இதெல்லாம் என்ன????
யாரங்கே... தமிழ் குடிதாங்கிகள் யாராச்சும் இருக்கீங்களா???

கரிகாலன்-karikaalan said...

இப்போதும் தில்லைநகர் முல்லை
தியேட்டரில் அலக்ஸ்சாண்ரா படம்
போடுகிறார்களா?ஒரு ரிக்கட் அனுப்பி
வைக்கவும்.பழைய ஞாபகங்களை கிளறிவிட்டுவிட்டீர்கள்.

பழூர் கார்த்தி said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

ramachandranusha, பேர் மாத்துறதுக்குதான் சோம்பேறித் தனமா இருக்குங்க :-)

கரிகாலன், இப்ப போடலைங்க, நான் காலேஜ் படிச்சப்ப போட்டாங்க....

Anonymous said...

Hi ,
you are having a good way of writing with comedy bugger,but pls stop commenting tamil language say like U said the thirukural.Got it ..

Anonymous said...

அலெக்ஸாண்ட்ரா, உங்க ஊர்ல மட்டுந்தான் போட்டாங்களோ? எங்க ஊர்லயுந்தான் போடுவாங்கோ. காலைக்காட்ச்சிக்கு பொட்டி எதுவும் கிடைக்கலைன்னா, இருக்கவே இருக்கு, பருவ ராகம், அலெக்ஸாண்ட்ரா மற்றும் 'சிராக்கோஓஓஓஓ'.

Anonymous said...

Excellent sir...as i too from trichy and IT nakkal.....migavum rasithen...cheerup..

PKS said...

very humorous.

thanks and regards, PK Sivakumar

amuthan said...

nice one looks very realistic

naju said...

vaai vittu sirikk vaiteerhal. nandri.

அன்பு said...

ramachandranusha, பேர் மாத்துறதுக்குதான் சோம்பேறித் தனமா இருக்குங்க :-)

பதிவைப்படிச்சு சிரிச்சதவிட இது சூப்பர்!

Anonymous said...

it brings back all types of friends to memory.
nalla sirippu katturai.niraya ezhuthungal . andal..n