Wednesday, September 21, 2005

ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி கலைப்பு

சற்றுமுன் கிடைத்த தகவல். கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி. ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி மொத்தமும், நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் தொடர் முடிந்ததும் கலைக்கப் பட உள்ளது. வருங்காலத்தில் கிரிக்கெட் என்ற சொல்லே ஸிம்பாப்வேயில் இருக்காது. ஸிம்பாப்வே கிரிக்கெட் கூட்டமைப்பும் (ZCU) இத்துடன் கலைக்கப் படுகிறது. ஸிம்பாப்வே அணியின் கேப்டன் 'தைபு'வும், மூத்த வீரர் 'ஸ்டீரிக்'கும், இது குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டனர். ஸிம்பாப்வே நாட்டின் தலைவர் (பிரசிடண்ட்) 'ராபர்ட் முகபே' இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த நாள் ஸிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு ஒரு சோகமான, மறக்க முடியாத நாள்" என்று குறிப்பிட்டு உள்ளார். இதற்கான காரணத்தை கேட்கையில் அவர் கூறியதாவது "இது ஸிம்பாப்வே நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு, கிரிக்கெட் அணி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தேசமும் இதற்காக வேதனைப் படுகிறது. ஸிம்பாப்வே மக்கள் மனமொடிந்து போயுள்ளனர். வரிசையாக எல்லா அணிகளிடமும் மோசமாகத் தோற்றாலும், நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்திருப்போம், ஆனால் இந்திய அணியின் கேப்டன் 'கங்குலி' எங்களுக்கு எதிராக சதம் (செஞ்சுரி) அடித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதை, எங்களால் தாங்க இயலவில்லை! இதை மட்டுமே இப்போது, என்னால் கூற இயலும்."

ஆதாரம் : ரியுட்டர்ஸ் செய்தி நிறுவனம்

பின் குறிப்பு : இந்த தகவல் எனக்கு மின்னஞ்சலில் முன்செலுத்தப்(Forward) பட்டது. உபயம் : நண்பர் அருண்.

8 comments:

Suresh said...

:-))))

வீ. எம் said...

லொல்லு, லொல்லு :)

Muthu said...

செம நக்கல். பாவம்பா கங்குலி :-)

பழூர் கார்த்தி said...

ஆருயிர் அண்ணன், தானைத் தலைவர்
'கங்குலி' நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து சாதனை படைக்க பிரார்த்திப்போம் :-)

பழூர் கார்த்தி said...

// அரசு : எங்களாலும் தாங்க முடியவில்லை //

அரசு, இது ரொம்ப ஓவர்யா :-)

தானைத் தலைவர் கங்குலி 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு
அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரை
வாங்கிக் கொடுத்துள்ளார், ஞாபகம் இருக்கட்டும் :-)

Ganesh Gopalasubramanian said...

கங்குலி பாவங்க அவர விட்ருங்க

enRenRum-anbudan.BALA said...

Your "kiNdal" is like a Jayasuria sixer over POINT :)

Atleast after this "NEWS", Ganguly should quit :)

பழூர் கார்த்தி said...

கணேஷ் மற்றும் பாலாவுக்கு நன்றி.

கங்குலியாவது விலகுறதாவது... போங்க பாலா உங்களுக்கு எப்பவுமே
விளையாட்டுதான் :-)