Tuesday, August 21, 2007

சென்னையின் ப்ளஸ்கள்(+)

சிங்காரச் சென்னையில் செப்டம்பர்-11ம் தேதி கால்பதிக்கின்றேன். 1998-ல் பி.எஸ்.சி முடித்தவுடன் ஹைதராபாத் கிளம்பினேன். ஹைதராபாத்தில் ஐந்தரை வருடங்கள் இருந்து விட்டு மும்பை கிளம்பினேன். ஹைதராபாத்தில் இருந்த நாட்களில் உருப்படியாக எம்.சி.ஏ படித்து முடித்தேன். நவி மும்பையில் இரண்டேகால் வருடங்கள் வாசம். பிறகு ஏப்ரல்-2006ல் புனே வந்தேன். இப்போது இங்கிருந்து கிளம்பி சென்னை மாநகரத்தில் வசிக்கப் போகிறேன்.

நமது அலுவலகம் சென்னை புறநகரில் உள்ளதால் போக்குவரத்து, தண்ணீர் பிரச்சனைகள் அவ்வளவாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

1991-லிருந்து 1998 வரை திருச்சியில் வசித்தேன். இப்போது மீண்டும் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு அதுவும் சென்னைக்கு வருவது ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் thrilled கொஞ்சம் excited. ஆனால் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தையும், climateடையும் நினைத்தால் கொஞ்சம் scared.

சென்னைக்கு வருவதால் நான் கருதும் ப்ளஸ்கள் (+)
1. சொந்த ஊருக்கு (கும்பகோணம்) பக்கம், அடிக்கடி சென்று வரலாம். பெற்றோர், உறவினர்களை அடிக்கடி சந்திக்கலாம்.
2. வார இறுதிகளில் கட்டாயம் தமிழ் சினிமா
3. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினத்தந்தி போன்றவற்றை சூடாக படித்து விவாதிக்கலாம்
4. டீக்கடை வெட்டி அரட்டை
5. தாவணி/சுடிதார், மல்லிகைப் பூவுடன் மங்களகரமான/அழகான இளம்பெண்கள்
6. நைட்டு கடைகளில் கொத்து பரோட்டா, குஸ்கா, ஆம்லெட், இட்லி, etc....
7. வலைப்பதிவர் சந்திப்பு, பட்டறை என்று நாமும் நம் பங்குக்கு பட்டையை கிளப்பலாம்

இதைத் தவிர நீங்களும் ஏதாவது + சொல்லுங்களேன்
+ மட்டுமே :-)

15 comments:

பழூர் கார்த்தி said...

8. தமிழ் FM கேட்கலாம்..

வெங்கட்ராமன் said...

5. தாவணி், மல்லிகைப் பூவுடன் மங்களகரமான/அழகான இளம்பெண்கள்

இது எந்த ஏரியான்னு சொன்னா ரொம்ப வசதியா இருக்கும். . . .

:-))))))))))))))))))

Hariharan # 03985177737685368452 said...

9)சென்னை புறநகர் ரயில் + மாடி ரயில் பயணங்களைச் சேர்த்துக்கலாம்!

10)மெரினா பீச்சுக்கு உஷர்ரா உச்சிவெயில்ல போனா உங்க தன்மானம் டேமேஜாகாது... சாயந்திரம் போனா சாரி சொல்லறதுக்கில்லே!

11)தமிழ்நாட்டுல/ சென்னையில லைஃப் உங்களுக்கு பெரிய அட்வெஞ்சராக இருக்கும்! (தாவணியைத் தேடிக்கிட்ட்ட்டேடே இருக்க வேண்டிவரும்ன்றதால)

12. ஒன்பது வருஷமா சுத்தமா நின்னுபோயிட்ட உங்களோட பகுத்தறிவு வளர்ச்சி மீண்டும் தமிழ்நாட்டுல சென்னைக்கு வர்றதாலே குபீர்னு பொங்கி எழும்! கவனமா இருங்க!

இப்படி அபூர்வ சிந்தாமணி ரேஞ்சுக்கு ஆயிரம் ப்ளஸ் இருக்கு லிஸ்ட்லே:-))

siva gnanamji(#18100882083107547329) said...

பிறந்த இடம்தேடி பெருமையுடன்
தவழும் இளந்தென்றலே வருக....

பழூர் கார்த்தி said...

வெங்கட்ராமன்,

//இது எந்த ஏரியான்னு சொன்னா ரொம்ப வசதியா இருக்கும். . . //

ஏங்க, நானே இப்பதான் அங்க வரப்போறேன்.. என்கிட்ட கேட்டால் எப்படி, நீங்கதான் சொல்லவேணும் :-))

<<>>

ஹரிஹரன்,
பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கீங்க போலிருக்கே, கலக்கல்...

//ஒன்பது வருஷமா சுத்தமா நின்னுபோயிட்ட உங்களோட பகுத்தறிவு வளர்ச்சி மீண்டும் தமிழ்நாட்டுல சென்னைக்கு வர்றதாலே குபீர்னு பொங்கி எழும்! கவனமா இருங்க!//

இது சூப்பர் :-)))))))

<<>>

சிவஞானம்ஜி,

கவிதை வாழ்த்திற்கு நன்றி!!

துளசி கோபால் said...

உங்க அஞ்சாம் எண் எதிர்பார்ப்பு..................

கொஞ்சம் டவுட் தான்:-)

aynthinai said...

Hai Karthi,
Wishes for the happy life at chennai.i too missing chennai for the last 3 years, hope i will also be a part of chennai very soon.
all the best.

பழூர் கார்த்தி said...

துளசி கோபால்,
//உங்க அஞ்சாம் எண் எதிர்பார்ப்பு..................
கொஞ்சம் டவுட் தான்:-) //
என்ன இப்படி பயமுறுத்துகிறீர்கள் :-)
ஒன்றிரண்டு பெண்களாவது தாவணி அணிய மாட்டார்களா, என்ன.. :-))))

<<>>

ஐந்தினை,
வாழ்த்திற்கு நன்றி!!
சீக்கரம் நம்ம ஊர் பக்கம் வந்து விடுங்கள், சென்னையை ஒரு கை பார்த்திடுவோம் :-))

உண்மைத்தமிழன் said...

வாங்க கார்த்தி..

எத்தனை நம்பர் போட்டு சொல்லியிருந்தாலும் கும்பகோணத்துக்குன்னு ஒரு தனி ரூட் இருக்கு பாருங்க. அது ஒண்ணே நமக்குப் போதும்.. சென்னை உங்களுக்குப் புடிச்சுப் போயிரும்.. என்ன.. கொஞ்சம் டிராபிக்ல நிக்கும்போதுதான் கும்பகோணத்துக்கே போயிரலாம்னு நினைப்பு வரும்.. அவ்வளவுதான்..

நாடோடி இலக்கியன் said...

//தாவணி், மல்லிகைப் பூவுடன் மங்களகரமான/அழகான இளம்பெண்கள் //

"தாவணி்" அப்படின்னா என்ன? எந்த காலத்தில இருக்குறீங்க? கார்த்தி!!!

பழூர் கார்த்தி said...

உண்மைத் தமிழன்,

நீங்களும் கும்மோணந்தானா??
உங்க வாழ்த்திற்கு நன்றி !!

//டிராபிக்// பார்க்கலாம், ஆபீஸ் பக்கத்திலே வீடு கிடைச்சுடுச்சுன்னா தப்பிச்சுடலாம் :-))

<<>>

நாடோடி இலக்கியன்,

//"தாவணி்" அப்படின்னா என்ன? எந்த காலத்தில இருக்குறீங்க? கார்த்தி!!!//

அய்யய்யோ.... தமிழ்நாட்டை விட்டு 9 வருடம் தள்ளி இருந்ததனால் லேட்டஸ்ட் நிலவரம் எனக்கு தெரியாம போயிடுச்சே.. இருந்தாலும், ஏதாவது ஒரு கோயிலில் கூடவா தாவணிப் பெண்ணை பார்க்க முடியாது ??? எனக்கு நம்பிக்கை இருக்குங்க :-))))

dubukudisciple said...

தாவணி், மல்லிகைப் பூவுடன் மங்களகரமான/அழகான இளம்பெண்கள்////
idu kurainthu ulllathu tamizhnaati

சிவா said...

சென்னை என்னை போடா வெண்ணை
என்றது. அதனால் எனக்கு பிடிக்காது.

சிவா said...

1.கூவம் நதியின் வாடை
2.மார்டின் மேட்களுக்கு மடியாத Mosquitoes
3.வியர்வை குறையாத பொழுது
இவைகளையும் + ஆக கருதினால் பொழப்பு அழுப்பு இல்லாமல் இருக்கும்.

சீனு said...

ஹி...ஹி...ப்ளஸ்? இப்புடு சூடு.

http://chennapattinam.blogspot.com/2007/01/50.html