Sunday, March 08, 2009

என் மனைவிக்காக, ஓர் கவிதை

அருகிலிருந்தால்
எந்நிமிடமும் ஊடல்தான்..
சிறுசிறு நிகழ்வுகளுக்காய்
நீயும், நானும்
கோபப் படுவோம்..
நீ அருகிலில்லா
இஞ்ஞாயிறு
ஏனோ போரடிக்கிறது..
ஒவ்வொர் நிமிடமும்
மெதுவாய் நகர்கின்றது..
சீக்கிரம் வாயேன்
என்னருமை மனைவியே,
அடுத்த ஊடலை
உடனே அவதானிப்போம்..

13 comments:

Anonymous said...

:)

பழூர் கார்த்தி said...

நன்றி கவின், தொடர்ந்து வாருங்கள்..

Anonymous said...

மனைவிக்கான கவிதைகளில் ஊடல் இல்லாமல் எழுத முடிவதில்லை.... முள்ளிருந்தாலும் அது ரோஜாதானே!

வாழ்த்துக்கள் நண்பா!
nisiyas.blogspot.com

பழூர் கார்த்தி said...

ஷீ-நிசி,

உங்க வாழ்த்துக்கும், நட்புக்கும் நன்றி!!

//முள்ளிருந்தாலும் அது ரோஜாதானே!//

மிக சரியாக சொன்னீர்கள்..

உங்க பெயரே வித்தியாசமா இருக்கே, என்ன பொருள் இதற்கு?

ராஜா said...

ra

ராஜா said...

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டானு ஜனகராஜ் மாதிரி ரொம்ப சந்தோஷமா ஆபீஸ்ல சொல்லிக்கிட்டு இருந்தீங்க, இங்க என்னடானா ரொம்ப வருத்தமா கவிதை எழுதிருக்கீங்க

நிகழ்காலத்தில்... said...

ஒன்று திருமணமாகதவராக இருக்கவேண்டும்.
இல்லை, திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இருக்க
வேண்டும் இதில் எது சரி…..?

அபி அப்பா said...

அட சாமீ! அவங்க நிம்மதியா ஊரூக்கு போனா கூட கவிதை எழுதி சண்டை போட கூப்பிடும் பழூர் கார்த்தி வாழ்க பல்லாண்டு:-))

பழூர் கார்த்தி said...

ராஜ்,
ஹிஹிஹி :-)
இப்படியெல்லாம் சொல்லி, குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடாது..

<<>>

அறிவே தெய்வம்,
சரியாக கணித்திருக்கிறீர்கள்..
நீங்க ரொம்ப புத்திசாலி...

<<>>

அபி அப்பா,
இது நிஜ சண்டை இல்லைங்க.. பாசத்தினால் விளையும் ஊமைச் சண்டைகள் :-)))

ஆதவா said...

ஊடலைக் காட்டிலும் உங்கள் இருவருக்குமிடையெ உள்ள அன்பும் காதலும்தான் இகக்விதையில் நன்கு தெரிகிறது!!

தொடருங்கள்

பழூர் கார்த்தி said...

ஆதவா,

உங்க கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி... நான் பொதுவா மொக்கை கவிதைகள்தான் நிறைய எழுதுவேன்.. ஏதோ ஒன்றிரண்டை கொஞ்சம் நல்லா எழுத முயற்சி செய்கிறேன் :-))

Anonymous said...

அன்பின் ஆழம் சொல்கிறது உங்கள் கவிதை!

வாழ்த்துக்கள்!

பழூர் கார்த்தி said...

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி ஷீ-நிசி.. ஏற்கனவே ஒரு முறை கருத்து கூறியிருக்கிறீர்கள்.. உங்களை அடிக்கடி படிக்கத் தூண்டுகிறதா,என் கவிதை? எனக்கு பெருமைதான் ஹிஹி :-))