இன்றைய ஞாயிற்றுக்கிழமை அற்புதமாக ஆரம்பித்தது. காலையில் அலாரம் வைத்து, 6 மணிக்கே எழுந்து விட்டேன். மேட்ச் துவங்கிய முதல் பாலிலிருந்து டிவியை விட்டு அங்கே இங்கே நகரவில்லை. சேவக் ஏமாற்றினாலும், சச்சின், யுவராஜ், தோனி, ரெய்னா என்று நியுசியை துவம்சம் செய்து விட்டர்கள். இந்தியா எடுத்த பேட்டிங் பவர்ப்ளேயில் 69 ரன்கள் குவித்ததெ, ஆட்டத்தின் திருப்பு முனை என கருதுகிறேன்.
இந்தியாவின் இறுதி ஸ்கோர் - 392/4. நியுசிலாந்து இதை சேஸ் செய்வது மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். வெட்டோரி இல்லாதது, அவர்களுக்கு ஒரு இழப்பே. முதல் போட்டியாதலால், அனுபவமில்லா கேப்டன் பவுலிங்கை மேனேஜ் செய்ய ரொம்பவும் கஷ்டப் பட்டார்.
பார்ப்போம், நியூசியின் பேட்டிங் வலுவானது, எனவே போட்டி சவாலாய் இருக்குமென நினைக்கிறேன். தற்போதைய ஸ்கோர் NZ: 203/5 (30.3 ov)
1 comment:
பரபரப்பான 9வது விக்கெட் ஜோடியின் ஆட்டத்திற்கு பின், நியுசி 334 ரன்களுக்கு ஆல் அவுட், இந்தியா வெற்றி.. ஆனாலும் கடைசி 5 ஓவர்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டன :-)
Post a Comment