செட்டிநாடு வகை சிறப்பு பலகாரங்களை, சுவையாக சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் அடையாறு சங்கீதா உணவகத்திற்கு செல்லலாம்.
கிண்டியிலிருந்து வரும்போது, அடையார் மத்தியகைலாஷ் சிக்னலை தாண்டி, இடது புற சர்வீஸ் சாலையில் நுழைந்தால், ஒரு நிமிடத்தில் சங்கீதாவை அணுகலாம்.
வார இறுதி மாலை, இரவுகளில் கார் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். சர்வீஸ் சாலையில்தான் நிறுத்த வேண்டும். டூ விலரில் செல்வது உத்தமம்.
குழிப் பணியாரம், இடியாப்பம் வடைகறி, அடை அவியல், கேரட் ஹல்வா, பீட்ரூட் போண்டோ, மகாராஜா ஸ்பெசல் மசால் தோசை, பீன்ஸ் வடை, கேரட் வடை, பால் கொழுக்கட்டை, தேங்காய்பால் ஆப்பம் போன்ற பல வகையான உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்.
விலையும், ரொம்ப இருக்காது. இன்று நானும், என் மனைவியும் சென்று ஒரு ஆந்திரா பெசரட்டு, அடை அவியல், இடியாப்பம், குழிப் பனியாரம், பீட்ரூட் போண்டோ எல்லாம் சாப்பிட்டோம், 181 ரூபாய் பில்.
சங்கீதா அடையாறில் மட்டுமல்லாமல், சென்னையில் வேறு சில இடங்களிலும் இருக்கிறது. ஒருமுறை முயற்சித்து பாருங்களேன்..
என்னுடைய சென்ற வார உணவிட வழிகாட்டு பதிவு: மழைக்காடு, அடையார்
10 comments:
Bazzula road-la oru sangeetha irukula ? road peru sariya niyabagam illa.. but angeyum chettinadu dish atakaasama irukum.. esp.. romba romba mellisa oru dosai poduvaangaley..
ஓ, அப்படியா யாத்ரீகன், நான் அங்கே சென்றதில்லை..
செட்டிநாட்டு வகை சைவ உணவுகளுக்கு சங்கீதா ஒரு சிறந்த இடம்..
உங்க கருத்துக்கு நன்றி..
எச்சில் ஊற வைக்கிறீங்க சார். நான் வெளியூரு... எனக்கும் சங்கீதாவுக்கும் தூரமாச்சே!
சரி, சென்னைக்கக வந்தா, உங்க செலவுல சாப்பிடலாம்னு நினைக்ககறேன்...
(என் பதிவுக்கு வந்தமைக்கு நன்றி கார்த்தி!!!)
கார்த்தி! எனக்கு ஒரு பதிவு போட மேட்டர் கொடுத்ததுக்கு:-)))
ஆனா 2 பேருக்கு 181 அதிகம் தான். ஆனா இனி இப்படி போடும் போது170+11 அப்படி போடனும் சரியா??
ஆதவா, என்ன வெளியூரா, எந்த ஊரு நீங்க??
பரவாயில்லை.. அடுத்த முறை சென்னை வரும்போது வந்து சாப்பிட்டா போச்சு..
என்னது, நான் வாங்கித் தரனுமா?? கிழிச்ஞது போங்க.. சரி வாங்கித் தரேன்.. உங்க கிரெடிட் கார்டை மட்டும் ஒரு தடவை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.. :-)))
<<>>
அபி அப்பா,
என்ன இத வச்சு ஒரு பதிவு போடறீங்களா? என்னான்னு??
அது என்ன 170 + 11 (service tax)??
எது எப்படியோ, நல்லா சாப்பிடுங்க சரியா??
துபாய்ல சங்கீதாவெல்லாம் இருக்கா??
170=your bill
11= your wife's
:)))
kiki kiki,
ஹா ஹா ஹா..
நன்றி!!
இருந்தாலும் இது ரொம்ப ஓவர் :-))
vanakkam , ungal adayar sangeetha padiththen. neengal solvathu sangeethava, illai apoorva sangeethava. inge nelson manickam roadil oru sangetha ullathu. athil neengal 2 naal sappittal vayirrupokku nichayam. kurippaga sambar . whycant you try once. antha surrounding il veru hotel illathathathal avarkal ittathuthan sappadu, avarjkal solvathuthan vilai.
செந்தில் குமார், நான் குறிப்பிடும் ஹோட்டல் வெறும் சங்கீதாதான்.. எந்த குரூப் என்று தெரியவில்லை..
அடுத்த முறை செல்லும்போது விசாரித்து சொல்கிறேன்.. நன்றி..
:-)))
உங்கள் அனுபவங்களுக்கு வருந்துகிறேன்..
Post a Comment