Sunday, March 08, 2009

எஜமான் காலடி மண்ணெடுத்து..

இன்று காலை கே டிவியில் எஜமான் படம் க்ளைமேக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். நெப்போலியனை அடித்துப் போட்டு, கத்தியை அவரது மார்புக்கு அருகே சொருகி விட்டு, "நான் என்னைக்குமே பதவி, புகழுக்கு அலைஞ்சதில்லை.." என்று பேசிவிட்டு திரும்பி செல்கிறார், பின்னனியில் எஜமான் காலடி மண்ணெடுத்து பாட்டு ஒலிக்கிறது.

வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நான் தீவிர ரஜினி விசிறி அல்ல, ஆனாலும் எனக்கு இந்த காட்சியை பார்த்த போது புல்லரித்தது. மிகவும் ரசித்தேன். ரஜினியிடம் என்னை மாதிரி சாதாரண ரசிகனையும் கவர்ந்து இழுக்கக் கூடிய சக்தி அவரது நடிப்பால் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உதயகுமார், திறமையாய் காட்சி அமைத்ததையும் குறிப்பிட வேண்டும்.

எப்போது எஜமான் வந்தது, என தெரிய வில்லை. 1990ல் வந்திருக்கலாம். இன்றும் அந்த படத்தை பார்த்து ஒன்றி ரசிக்க முடிகிறது.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில், நான் படித்துக் கொண்டிருந்த போது ஒருமுறை டைரக்டர் உதயகுமர் ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார்.

எஜமான பட நினைவுகளை பற்றி கேட்கும்போது, ரஜினி மீனாவின் பேச்சை கேட்டு பட்டாம் பூச்சி புடிக்க செல்வாரல்லவா, அப்போது கிராம மக்களில் ஒருவர் 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா எதை வேணாலும் புடிப்பாரு' என்ற வசனம் வரும். ஆரம்பத்தில் அந்த வசனத்தை 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா கோட்டையையே புடிப்பாரு' என்றே உதயகுமார் அமைத்திருந்தாராம், ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதால் மாற்றப் பட்டதாம்.

காலடி மண்ணெடுத்து வழிபடுவது போல் காட்டுவது ஓவராக தனிமனித வழிபாடாய் இருக்கிறதே என்று கேட்டோம், சரியாக பதிலளிக்காமல் நழுவி விட்டார்.

என்ன இருந்தாலும், ரஜினி இந்த படத்தில் கலக்கி விட்டார் அல்லவா??

3 comments:

நாஞ்சில் பிரதாப் said...

பாத்து... ரஜீனி ரசிகர் மன்றத்துல போய் சேர்ந்துராதீங்க....

தமிழன்-கறுப்பி... said...

;)

என்ன கொடுமை இது...

பழூர் கார்த்தி said...

உங்க கருத்துக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்..

எந்த ரசிகர் மன்றத்திலும் நான் சேருவதாய் இல்லை :-))

<<>>

தமிழன் - கறுப்பி, இதுல என்னங்க கொடுமை ?? :-))