அடையார் சிக்னலில் (flyover கீழே) அமைந்துள்ள உணவு விடுதி Rain Forest. உணவும், விடுதியின் சுற்றுப்புற சூழலும், வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.
விடுதியின் கதவே, ஒரு பாதாள அறைக்குள் செல்வது போல் sliding wood ஆக அமைந்துள்ளது. உள்ளே சென்றால் மான் தலை, பாம்புகள், பறவைக் கூடுகள் என அருமையான அலங்கார பொருட்கள்.
உணவும் சுவையாக உள்ளது. உங்களுக்கு south indian, north indian, chinese என்று விதவிதமான உணவு வகைகள் கிடைக்கின்றன. ஒரு சைட் டிஷ் (side dish) ன் விலை சராசரியாக 100 ரூபாய் ஆகிறது. அளவு நிறையவே கிடைக்கிறது (quantity).
இதைவிடவும் பிரமாதமான விஷயம், நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரடி, ஒற்றைக் கண்ணன் பேய் போன்ற விதவிதமான வேடங்களில் ஒருவர் வருகிறார்.
உங்கள் மனைவியை பயமுறுத்த, இதை விடவும் அருமையான தருணம் மனித உரிமை பேசும் இக்காலத்தில் கிடைப்பது அரிது :-)
இருவர் சென்று 500 ரூபாய்க்குள் திருப்தியாய் சாப்பிட்டு வரலாம்.
என்னங்க மழைக்காடுக்கு கிளம்பிட்டீங்களா, இருங்க ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க..
4 comments:
வெள்ளி, சனி, ஞாயிறுகளில் முன்பதிவு கிடையாதாம், மற்ற நாட்களில் உண்டு..
- பழூர் கார்த்தி
weekend la lunch kaaga 4 pm varikkum kaathirukkum gumbalum undu indha hotel ku....
adha mention panna vittuteengale swami!
அபர்ணா,
நன்றி.. ஆமாம் நீங்கள் கூறியது போல் வார இறுதிகளில் கூட்டம் அலைமோதும்.. லஞ்ச் சாப்பிட வேண்டுமென்றால் நீங்கள் 1 மணிக்கு முன்பே செல்வது உத்தமம்..
:-)
நாமக்கல் சிபி, உங்க கருத்து எனக்கு புரிந்து விட்டது.. ஹிஹிஹி.. நன்றி!!
Post a Comment