Tuesday, March 31, 2009

வடபழனி சரவணபவன்

சரவணபவன் உணவகம் சென்னையில் நிறைய இடங்களில் உள்ளன. ஆனாலும் வடபழனியில் சாப்பிடுவது இன்னமும் விசேஷமானது.

பக்கத்திலேயே பிரசித்தமான வடபழனி முருகன் கோவில் உள்ளது. கோவில் தூய்மையாக, அழகாக உள்ளது. திவ்யமான, திருப்தியான தரிசனத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளை தவிர்ப்பது உத்தமம். நாங்கள் வியாழன் மாலை சென்றோம், அதிக கூட்டமில்லை, பொறுமையாக முருகனிடம் உரையாட முடிந்தது.

சரவணபவனில் தென்னிந்திய, வட இந்திய உணவுகளும் கிடைக்கின்றன. தமிழக உணவு வகைகளில் இட்லி, தோசை, வடை போன்றவைகள் விதவிதமாய் கிடைக்கின்றன. நாங்கள் நெய் சாம்பார் இட்லி (மினி இட்லி 14 - நெய் சாம்பாரில் விட்டு), இடியாப்பம் மசாலா கறியுடன், மினி டிபன் (மினி தோசை, நெய் சாம்பார் இட்லி, கேசரி, உப்புமா) எல்லாம் சாப்பிட்டோம். அற்புதமாக இருந்தது, 170 ரூபாய் பில். முன்பொரு முறை அசோக் நகர் சரவண பவனில், சாப்பாடு சாப்பிட்டோம், அதுவும் நன்றாக இருந்தது.

நீங்கள் தரமான தமிழக டிபன் வகையறாக்களை சாப்பிட, சரவண பவன் செல்லலாம்.

உணவகத்தில் வாரியாரின் வெவ்வேறு புகைப்படங்கள், பெரிதாக மாட்டப் பட்டு இருந்தன. ஓரிரண்டு புகைப்படங்களில் அண்ணாச்சியும், பின்னாளில் ஜீவஜோதிக்காக ஜெயில் செல்லப் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

எனது முந்தைய உணவிட வழிகாட்டு பதிவுகள்
மழைக் காடு - அடையார் - சென்னை
அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

5 comments:

Anonymous said...

சரவணபவன் ஆரம்பிக்கப் பட்ட இடம் கே.கே.நகர் என நினைவு.

Anonymous said...

சென்னை கே கே நகரில் தான் முதல்சரவண பவன் ஆரம்பிக்கப்பட்டது. (14-12-1981) அவர்களது இனைய தளத்தை பார்கவும்,..

http://www.saravanabhavan.com/milestones.php


Arun

கிரி said...

//ஓரிரண்டு புகைப்படங்களில் அண்ணாச்சியும், பின்னாளில் ஜீவஜோதிக்காக ஜெயில் செல்லப் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.//

:-)))

பழூர் கார்த்தி said...

பெயரில்லா & பெயரில்லா, தகவலுக்கு நன்றி!! இடுகையில் மாற்றி விடுகிறேன்..

:-)

<<>>

கிரி,
ஆமாங்க, ரொம்ப வருத்தமா இருந்தது, அவருடைய கடின உழைப்பால்தான் சரவணபவன் இவ்வுளவு தூரம் முன்னேறியுள்ளது.. ஆனால் பெயரை கெடுத்துக் கொண்டாரே..

Anonymous said...

சரவணபவனில் ஒரிரு நாள் தான் உண்ண முடியும்.. அவர்கள் செய்யும் அனைத்தி பதார்த்தளும் எண்ணை, நெய் மிக அதிகமாக உள்ளது..சுவைக்காக இவற்றை கூட்டி விடுகிறார்கள்.