இன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் போது பேருந்தில் பண்பலை வானொலி கேட்டுக் கொண்டிருந்தேன்.
பெரும் மோசடி செய்த பிரபல் ஐடி கம்பெனியின் பேரில் படமெடுத்த ஹீரோவை வைத்து அடுத்த படம் செய்ய யாரும் முன்வரவில்லையாம், அதனால் அவரே சொந்த படம் திரும்பவும் எடுக்கிறாராம்.
சரி அந்த கதையை விடுங்கள்.
கிசுகிசு என்பது தமிழ்ச்சொல்லா? இல்லையெனில், இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?
துணுக்கு - என்பதற்கான தமிழ்ச்சொல் என்ன?
கேரட் என்ற காய்கறியின் தமிழ்ச் சொல் என்ன? அப்படி ஏதும் இல்லையெனில், ஏன் இல்லை? கேரட், ஆப்பிள், பீன்ஸ் போன்ற காய்கறிகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்க வில்லை?
எல்லோரும் வந்து பதில் சொல்லுங்கள், விவாதிக்கலாம்!!
7 comments:
//கேரட் என்ற காய்கறியின் தமிழ்ச் சொல் என்ன? அப்படி ஏதும் இல்லையெனில், ஏன் இல்லை? கேரட், ஆப்பிள், பீன்ஸ் போன்ற காய்கறிகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்க வில்லை?//
இராம.கி ஐயாவை அடுகவும்! ச்சே கேட்கவும்!
you are asking to much of questions!
You are eligiboe to become my sishyan!
பித்தானந்தா,
உங்க பெயரே சும்மா ஜிலுஜிலுன்னு (இதுக்கு தமிழ்ச் சொல் என்ன) இருக்குங்க..
இரண்டாண்டுகளுக்கு முன்பு அதிர்ஷ்டம் என்பதற்கான தமிழ்ச் சொல்லை கேட்ட போது, இராம.கி ஐயாவே வந்து பதில் சொன்னது இப்போது என் ஞாபகத்திற்கு வருகிறது..
<<>>
கேள்வி நிறைய கேட்பதால், என்னை உங்க சிஷ்யனா ஏத்துகிட்டதுக்கு நன்றி!! :-)
ஜிலுஜிலு என்பதற்கு குளுகுளு என்ற சொல்லை பயன் படுத்தலாம்..
துணுக்கு - கருத்து எனலாமா??
carrot, beans, apple ellame english kaikarigal endre peyar petravai..
adhanal adharku tamil peyar enna endru vivadhippadhil artham illai,..
answer is the question itself!
Swami, office-la than ellarkittayum question kaettu imsai paduthureengana..ingayuma
ஆப்பிள் - குமளிப் பழம்.
ஆரஞ்சு - கிச்சிலிப் பழம்.
Post a Comment