Thursday, February 19, 2009

பழைய பதிவர்களெல்லாம் எங்கே??

தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்து இருக்கிறேன், 2005-2006 ல் பார்த்து, படித்து பழகிய நிறைய பதிவர்களை தற்போதைய இடுகைகளில் சந்திக்க முடியவில்லை. அவர்க்ளெல்லாம் எங்கே சென்றார்கள், இன்றும் எழுதுகிறீர்களா??

1. கோ. கணெஷ்
2. டி.பி.ஆர். ஜோசப்
3. தருமி
4. துளசி கோபால்
5. ஞான வெட்டியான்
6. டுபுக்கு

இன்னும் பல பதிவர்கள் ஞாபகம் வரவில்லை. இவர்களின் links கொடுக்க முடியுமா?

தேன்கூடு திரட்டி தளம் என்னானது? தமிழ்மணத்தை தவிர வேறு aggregators வந்து பிரபலமாகி உள்ளதா??

போலி பிரச்சினை தீர்ந்து விட்டதா??

தமிழ் வலைப் பதிவில் வேறு ஏதாவது முன்னேற்றங்கள்? Improvements/updates/rules?

தயவுசெய்து சொல்லுங்களேன்...

19 comments:

Udhayakumar said...

என்னது காந்தி செத்துட்டாரா??? எப்போ?

கோவி.கண்ணன் said...

சோம்பேறி பையன்,

மீண்டும் வருக !

rapp said...

http://dubukku.blogspot.com/

http://thulasidhalam.blogspot.com/

http://dharumi.blogspot.com/

dondu(#11168674346665545885) said...

//போலி பிரச்சினை தீர்ந்து விட்டதா??//

பார்க்க: http://dondu.blogspot.com/2008/07/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

உங்கள் பேரில் இருந்த போலி வலைப்பூவும் அழிக்கப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அபி அப்பா said...

ஹி ஹி ஹி:-))

எம்.எம்.அப்துல்லா said...

மீள் வருகைக்கு வாழ்த்துகள்

தருமியும்,துளசி அம்மாவும் இன்றும் ஆக்டிவாக வலைப்பூக்களில் இயங்குகிறார்கள்.


தமிழ்மணம் தான் இப்போது முன்னனியில் உள்ள திரட்டி. தமிழிஸ்சும் தற்போது புகழ் பெற்று வருகின்றது. போலி பிரச்சனை தற்போது முற்றிலும் ஒழிந்து விட்டது. கடந்த 8 மாதமாக வலை உலகம் மிகவும் சிறப்பாக இயங்குகின்றது.

பழூர் கார்த்தி said...

உதயகுமார்,
உங்க வேதனை எனக்கு புரியுது.. ஹிஹிஹி..

<<>>

கோவி. கண்ணன்,
நினைவு வைத்திருப்பதற்கு நன்றி!!

<<>>

rapp, உரல்களுக்கு நன்றி!!

<<>>

டோண்டு, தகவலுக்கும், போராடியதற்கும் நன்றி!!

<<>>

அபி அப்பா,
யாருங்க நீங்க, டைரக்டர் ராதாமோகனா??? ஹிஹிஹி..

<<>>

எம்.எம்.அப்துல்லா,
ரொம்ப நன்றிங்க, தமிழிஷிலும் எனது பதிவை இணைத்து விடுகிறேன்..

செந்தழல் ரவி said...

வாங்க சோம்பேறி பையன்...

தமிழ்மணத்துடன், தமிழ்ஷ், தமிழ்வெளி, சங்கமம் போன்ற திரட்டிகளும் உண்டு, \

தமிழ்ஷ் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு நன்றாக உள்ளதால் விரைந்து முன்னேறி முன்னணி திரட்டியாக மாறிவிட்டது

போலி பிரச்சினை ? இங்கே நிறைய பேருக்கு போலி பிரச்சினை என்றால் என்ன என்றே தெரியாமா போய்விட்டது

எல்லா பதிவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் பெயரை கூகிளில் போட்டு தேடவேண்டியது தானே ? இதை எல்லாமா சொல்லிக்கொடுக்கவேண்டும் ?

கமெண்ட் மாடரேஷன் இல்லாமல் பதிவுகள் ஆரோக்கியமாக இயங்குகிறது...

தருமி said...

அடுத்த கட்ட "ஆட்டம்" ஆரம்பிங்க ..

Namakkal Shibi said...

அது சரி!

நீர் எங்கே போயிருந்தீர் இத்தினி நாளா?

Namakkal Shibi said...

//போலி பிரச்சினை தீர்ந்து விட்டதா??
//

ஹைய்யோ! ஹைய்யோ!

Namakkal Shibi said...

//போலி பிரச்சினை ? இங்கே நிறைய பேருக்கு போலி பிரச்சினை என்றால் என்ன என்றே தெரியாமா போய்விட்டது//

இதுதான் எல்லாரும் விரும்பிய நிலை!

பழூர் கார்த்தி said...

செந்தழல் ரவி,

விளக்கமான பதிலுக்கு நன்றி!!

//எல்லா பதிவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் பெயரை கூகிளில் போட்டு தேடவேண்டியது தானே ? இதை எல்லாமா சொல்லிக்கொடுக்கவேண்டும் //

ஹிஹிஹி.. ஒரு சோம்பேறித் தனம்தான்.. வேறென்ன????

மேலும் தமிழ் வலைப்பதிவு குறித்த updates எல்லாம் உங்க மாதிரி சக பதிவர்கிட்டதானே கேட்க முடியும்..

<<>>

தருமி,

நன்றி!! ஆட்டத்தை ஆரம்பித்து விட்டேன் :-)

<<>>

நாமக்கல் சிபி,

நன்றி. இத்தனை நாள் எங்கேயும் போகவில்லை, நிறைய அலுவலக வேலைகள் காரணமாய் வரமுடிய வில்லை..

மேலும் வீட்டிலேயே இணைய இணைப்பு வாங்கி விட்டதும் ஓர் காரணம் என் மீள் வருகைக்கு..

<<>>

தேன்கூடு திரட்டி என்னப்பா ஆச்சு, யாரச்சும் சொல்லுங்களேன்..

Namakkal Shibi said...

கார்த்தி நான் அபிஅப்பா!என்னால சைன் இன் பண்ன முடியலை!

கார்த்தி! நீங்க இதுவரை 80 பதிவு போட்ட ஒரு மூத்த பதிவர்! நீங்களே இப்படி எல்லாத்துக்கும் நொய் நொய்ன்னு சந்தேகம் கேட்கலாமா?

தேன்கூடு சாகரன் இறந்த பின்னே கூட நீங்க சிவாஜி படம் பத்தி பதிவு போட்டீங்க!

பின்ன கூட திருச்சி பத்தி பதிவு போட்டீங்க!

பின்ன உங்களுக்கு பெயர் மாற்று பெருவிழா எல்லாம் நடந்துச்சு.

நான் நீங்க எழுத ஆரம்பிச்சு 17 வது பதிவிலே இருந்தே பின்னூட்டம் எல்லாம் போட ஆரம்பிச்சு நீங்க 18 பதிவு மட்டுமே எழுதின 2007ல நான் லைம்லைட்டுக்கு வந்தாச்சு. என்ன உங்களுக்கு சாகரன் மறைவே தெரியலை என்னை எப்படி தெரியும்!

போகட்டும்!

உங்க பிரச்சனை என்ன?
யார் யார் எழுதறாங்க அதான?
நீங்க எழுதின காலத்திலே நல்லா எழுதின மயிலாடுதுறை சிவா, எல்லேராம், ராம்கி, எல்லாரும் ச்சே ச்சே இந்த பழம் புளிக்கும் ன்னு போயாச்சு!அப்பப்ப வந்து எட்டி பார்ப்பங்க!

பினாத்தலார் முக்கிய பிரச்சனைன்னா வந்து ஒரு பதிவு ப்போட்டு 100 மார்க் வாகிட்டு போயிடுவார்.

வழக்கம் போல தருமிசார் பதிவு போட்டா அவரின் பின்னூட்டங்கள் பெருசா நல்ல விவாதமா இருக்கு!

ஞானவெட்டியான் அய்யா தமிழுலகம் குழுமத்திலே அட்டகாசமா எழுதிகிட்டு இருக்கார், ஆனா அப்பப்ப தமிழ்மணத்திலே வர்ரார்.

துளசி டீச்சர் நல்லா இப்பவும் அதே நகைச்சுவையோட தமிழ்மணத்திலே எழுதறாங்க!

டுபுக்கு எப்போதும் போல அவருக்கு இன்கிரிமெண்ட் கிரைக்கும் போது ஒரு பதிவுன்னு காமடியா போடுரார்,

லக்கி, கோவியார் , சிபி எல்லாம் எப்போதும் போல நல்லா எழுத்றாங்க!எப்போதும் போல சிபி இன்னும் 5 பிளாக் ஆராம்பிச்சு அமோகமா இருக்கார்

என்னை போல சின்ன பதிவர்கள் சில பேர் கிளம்பி இருக்காங்க!

செந்தழல் ரவி! நல்லா இருக்கார்!

ஆசீப் நிறைய எழுதிகிட்டு இருந்தார். 2 மாசமா கொஞ்சமா கூட எழுதுவதில்லை!

இது போதுமா? இனி ஸ்டார்ட் ம்மீசிக்! முதல்ல ஒரு கவிதை!

அன்புடன்
அபிஅப்பா

பழூர் கார்த்தி said...

நன்றி அபி அப்பா..

அபி அப்பா said...

நன்றி எல்லாம் வேண்டாம்! உங்க பாணி கவிதைம்மா ப்ளீஸ்!

பழூர் கார்த்தி said...

அபி அப்பா,
உங்களுக்காக ஒரு கவிதை சூடோடு பதிவேற்றி விட்டேன்..

Namakkal Shibi said...

ஜோசஃப் சார் கழுத்து வலியின் காரணமா இப்போ எழுதறதில்லை!

(ஓவரா திரும்பிப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவாம்!)