Sunday, February 22, 2009

சன் டிவியே, மனசாட்சி இருக்கிறதா??

இன்று (ஞாயிறு) காலையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். தர்ம பத்தினியின் தொணதொணப்பு தாங்காமல் (ஹிஹிஹி, எப்போதும் கணிப்பொறியை கட்டிக் கொண்டு மாரடிக்கிறேனாம்), சற்று நேரம் கணிப்பொறியை மூடிவிட்டு, டிவியை ஆன் செய்தேன். நேரம் காலை ஒன்பது ஐம்பத்தைந்து.

சன் டிவியில் டாப் டென் மூவிஸ் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டாம் இடம் 'வெண்ணிலா கபடி குழு'வை பார்த்து ரசித்தேன். நல்ல படம்தான். அடுத்ததாக முதலிடம் பிடித்த படத்தை காட்டியபோது மிகுந்த அதிர்ச்சி. ஹார்ட் அட்டாக் வந்தது போலிருந்தது, கண்ணீர் கொட்டியது. ஏனென்றால் முதலிடமென் சன் டிவி அறிவித்த படம் 'படிக்காதவன்'.

படு மொக்கையான படம். பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. சன் டிவி பிக்சர்ஸ் வெளியீடு என்பதற்காக என்ன வேண்டுமானாலும் ரேங்கிக் குடுப்பதா? என்ன அநியாயம் இது? எப்படி ரேங்கிங்கை நிர்ணயிக்கிறார்கள்? இப்படித்தான் சில நாட்கள் முன்பு தெனாவட்டு, திண்டுக்கல் சாரதியையும் முதலிடத்தில் அறிவித்தார்கள்.

சன் டிவியே, உனக்கு மனசாட்சியே இல்லையா????

13 comments:

ஆ.ஞானசேகரன் said...

சரியா சொன்னிங்க! சன் டீவி காதுல கேட்காது, கேட்கவே Kகாது.

பழூர் கார்த்தி said...

இதை பத்தியெல்லாம் எங்கேயாவது புகார் கொடுக்க முடியாதா? டிவி ஒழுங்குமுறை ஆணையம் ஏதாவது இருக்கா??

<<>>

ஞானசேகரன், உங்க கருத்துக்கு நன்றி..

குப்பன்.யாஹூ said...

Let us boycot sun pictures films, Then slowly they will change.

மாயவரத்தான் said...

ஹும். கலைக்னர் டி.வி.யில் ரொம்ப நாளைக்கு 'உளியின் ஓசை'யை முதலிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதுக்கு இது எம்புட்டோ பரவாயில்ல.

We The People said...

ராஜ் டி.வியில் காதல்ன்னா சும்மா இல்லை தான் முதலிடம் என்ன செய்ய அவர்கள் படங்களை அவர்கே முதலிடம் கொடுக்கும் நிலையில் உள்ளது :(((

ரசிப்பு இப்பொழுது தினிக்கப்படுவதே உண்மை!

கார்க்கிபவா said...

நீங்க தமிழகத்துக்கு புதுசா?????

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க சார்.. எல்லாம் ஒன்னுதான்..

தருமி said...

வந்ததும் வராததுமாய்
பத்தவச்சிட்டேயே, பரட்டை!

பழூர் கார்த்தி said...

கார்க்கி, சுரேஷ், தருமி, மாயவரத்தான், குப்பன் யாஹூ, வீ த பீப்புள், உங்க எல்லோருடைய கருத்துக்கும் நன்றி!!

தருமி, ஏதோ என்னால் முடிஞ்சது :-))

கார்க்கி, என்ன பண்றதுங்க, அநீதியை கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே :-)))

இரா. வசந்த குமார். said...

Hai....

Welcome Back to Tamil Blogosphere.....!!!

http://kaalapayani.blogspot.com

கீழை ராஸா said...

காதலில் விழுந்தேனுக்கு பிறகு வந்த எல்லா சன் பிக்சர்ஸ் படமும் சன் டிவியில் நம்பர் 1 தான்...எது எப்படியோ பத்தாவது இடத்திற்கு கூட தகுதி இல்லாத படத்தை கூட தைரியமாக முதல் இடமளிக்கும் சன் டிவியின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும் பழுரான்...

Bhuvanesh said...

இதுக்கே இப்படி சொன்னா எப்படி?? வரும் 2010 புத்தாண்டில் "2009 டாப் டென் மூவிஸ்" பாருங்க.. முதல் இடத்தில சன் தயாரித்த/தயாரிக்கப்போற பதினைந்து படங்கள் இருக்கும்!!!

Abarna said...

bhuvanesh.. well said... avargal vaithathe sattam... top ten ellam...