1. ஆர்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார், ஆனால் அவரது கேரக்டர் முழுமை பெறாதது போல் தோன்றுகிறதல்லவா?
2. பூஜா, பாலாவின் முந்தைய கதாநாயகிகளையே ஞாபகப்படுத்துகிறார், முக்கியமாக பல இடங்களில், நந்தாவின் லைலாவையே பார்க்கும் படி இருப்பது, படத்தின் பலமா அல்லது பலவீனமா?
3. காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி காட்சி (மிமிக்ரி, எம்ஜிஆர் - சிவாஜி - நயந்தாரா டான்ஸ்) படத்தில் எவ்விதத்திலும் ஒட்ட வில்லையே?
4. பூஜா பாடுவதாக தோன்றும் சில பாடல்கள், வெவ்வேறு குரல்களில் வருகின்றனவே (வயதான குரல் பாடல்) அவருக்கு பொருந்த வில்லையல்லவா?
5. கிளைமேக்ஸில் பூஜாவின் சிதைந்த முகத்தில் மேக்கப் என்பது அப்பட்டமாக தெரிகிறதே, ஏன் இந்த இடறல்?
6. கடைசி காட்சியில் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான், எங்கே அவனது அடிப்பொடிகள், இன்ஸ்பெக்டர்?
இதற்கெல்லாம் பாலாதான் பதில் சொல்லவேண்டும் என்பதில்லை, இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்களேன்..
3 comments:
அதற்குள் விசர்சனமா? படம் பார்த்திவிட்டு வந்தே 30 நிமிடங்கள் தானே அகிறது!
கேள்விகளுக்கு விடை.
1.)அவரது வேடத்திற்கு இந்த படத்தில் அவ்வளவு தான் வலம் வர முடியும்.
பிச்சைக்காரர்களை மையப்படுத்தும் பொழுது அவர் character கொஞ்சம் அனாவசியம்..
2.) எனக்கு பூஜா நடிப்பு யாருடனும் ஒப்பிடத்தோன்றவில்லை... மிகவும் ப்ரமாதமாக நடித்திருக்கிறார்.
3.) தேவை இல்லை தான். பிதாமகனில் ஒரு remix ஹிட் ஆனது.அது போல் இதுவும் ஆகலாம் என எதிர் பார்த்தார்களோ என்னவோ.
4.) இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் பாலா.
5.) கமலிடம் சென்று இவர்கள் makeup கற்றுக் கொள்ளவில்லையோ என்னவோ :-)
6.) எத்தனை பேர் வந்தாலும் ருத்ரன் அவர்களை வீழ்த்திவிடுவாம் என அனைவருக்கும் தெரியும்.. எதற்கு extra செலவுகள் என விட்டுவிட்டனர் போலும்.
இன்றுதான் பார்த்தேன். என்னை முக்கியமாகக் கவர்நதது பிச்சைக்கார்களது துயரம் செறிந்த வழ்வைப் பதிவு செய்திருப்பதுதான். ஜெயமோகனின் அனுபவங்கள் பாலாவிற்கு நிறையவே உதவியிருக்கினறன போலும்.
abarna, உங்க விளக்கங்களுக்கு நன்றி..
கடைசி கேள்விக்கான உங்கள் பதிலை ரசித்தேன்..
<<>>
முருகானந்தம், உங்க கருத்துக்கு நன்றி!!
Post a Comment