சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. ஏழு வருடங்களாக வலைப்பதிகிறேன்.. அமெரிக்காவில் வசிக்கிறேன்..
Sunday, February 22, 2009
தேன்கூடு திரட்டி என்னானது?
இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பதிவு உலகத்திற்கு வந்திருக்கிறேன். எனது முந்தைய பதிவில் வலைப்பதிவு உலகத்தின் இந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி வினவி இருந்தேன். அதில் எவரும் தேன்கூடு திரட்டி பற்றி சொல்லவில்லை. யாராவது சொல்லுங்களேன், என்னானது இத்தளம்? 2007ல் தேன்கூடு திரட்டி மிக அருமையாக செயல் பட்டுக் கொண்டிருந்ததே, நிறைய போட்டிகள் எல்லாம் வைத்தார்களே. எங்கே போயிற்று தேன்கூடு?
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
தேன் கூடு் திரட்டியை நிர்வகித்து வந்த சாகரன் அவர்களின் மறைவுக்குப் பிறகு தேன் கூடு திரட்டி நிர்வகிக்க சரியான நபர்கள் இல்லாமல் அப்படியே செயலிழந்தி இருக்கிறது!
http://blog.thamizmanam.com/archives/84
யோவ்
பதிவைப் போட்டுட்டு பின்னூட்டங்களை பப்ளிஷ் கூட பண்ண முடியாத அளவுக்கு சோம்பேறித்தனமா?
http://www.google.com/search?hl=en&q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&btnG=Google+Search&aq=f&oq=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95
அநியாயத்துக்கு சோம்பேறிய்யா நீர்!
தகவலுக்கு நன்றி, நாமக்கல் சிபி :-)
<<>>
//யோவ்
பதிவைப் போட்டுட்டு பின்னூட்டங்களை பப்ளிஷ் கூட பண்ண முடியாத அளவுக்கு சோம்பேறித்தனமா?//
அட ஏங்க நீங்க வேற.. சில சமயங்களில் new post எழுதிட்டு, பப்ளிஷ் பட்டனை அழுத்தவே எனக்கு சோம்பேறித் தனமா இருக்கும் :-))
ஹிஹிஹி..
<<>>
//அநியாயத்துக்கு சோம்பேறிய்யா நீர்!//
இப்பவாவது புரிஞ்சா சரி :-)))
அதுசரி, உங்க நந்தவனம் ப்ளாக்குக்கு போனா தொடர்கதையை 15 பாகம் போட்ருக்கீங்களே, என்ன மாதிரி பசங்க படிக்க வசதியை சின்னதா ப்ளாக் போஸ்ட் போடக்கூடாதா??
//அதுசரி, உங்க நந்தவனம் ப்ளாக்குக்கு போனா தொடர்கதையை 15 பாகம் போட்ருக்கீங்களே, என்ன மாதிரி பசங்க படிக்க வசதியை சின்னதா ப்ளாக் போஸ்ட் போடக்கூடாதா??//
உண்மைத் தமிழன் பதிவெல்லாம் படிச்சதில்லையா நீங்க?
ஹெஹெ!
கேக்குறாங்கய்யா டீடெய்லு!
//அட ஏங்க நீங்க வேற.. சில சமயங்களில் new post எழுதிட்டு, பப்ளிஷ் பட்டனை அழுத்தவே எனக்கு சோம்பேறித் தனமா இருக்கும் :-))//
அப்பேர்ப்பட்ட ஆளா நீயி?
ஆமாங்க சிபி, உண்மைத் தமிழனும் தொடர் எழுதராரா? அவரு லிங்க்கை கொஞ்சம் கொடுங்களேன்..
க.க.க.போ.. :-)
நீங்க சாதாரணமா எதையாவது எழுதுவீங்களா (அதாவது கதை, கவிதை, தொடர்கதை) தவர்த்து வேறு..
உங்களோட primary blog எது?
கார்த்தி நான் அபிஅப்பா!என்னால சைன் இன் பண்ன முடியலை!
கார்த்தி! நீங்க இதுவரை 80 பதிவு போட்ட ஒரு மூத்த பதிவர்! நீங்களே இப்படி எல்லாத்துக்கும் நொய் நொய்ன்னு சந்தேகம் கேட்கலாமா?
தேன்கூடு சாகரன் இறந்த பின்னே கூட நீங்க சிவாஜி படம் பத்தி பதிவு போட்டீங்க!
பின்ன கூட திருச்சி பத்தி பதிவு போட்டீங்க!
பின்ன உங்களுக்கு பெயர் மாற்று பெருவிழா எல்லாம் நடந்துச்சு.
நான் நீங்க எழுத ஆரம்பிச்சு 17 வது பதிவிலே இருந்தே பின்னூட்டம் எல்லாம் போட ஆரம்பிச்சு நீங்க 18 பதிவு மட்டுமே எழுதின 2007ல நான் லைம்லைட்டுக்கு வந்தாச்சு. என்ன உங்களுக்கு சாகரன் மறைவே தெரியலை என்னை எப்படி தெரியும்!
போகட்டும்!
உங்க பிரச்சனை என்ன?
யார் யார் எழுதறாங்க அதான?
நீங்க எழுதின காலத்திலே நல்லா எழுதின மயிலாடுதுறை சிவா, எல்லேராம், ராம்கி, எல்லாரும் ச்சே ச்சே இந்த பழம் புளிக்கும் ன்னு போயாச்சு!அப்பப்ப வந்து எட்டி பார்ப்பங்க!
பினாத்தலார் முக்கிய பிரச்சனைன்னா வந்து ஒரு பதிவு ப்போட்டு 100 மார்க் வாகிட்டு போயிடுவார்.
வழக்கம் போல தருமிசார் பதிவு போட்டா அவரின் பின்னூட்டங்கள் பெருசா நல்ல விவாதமா இருக்கு!
ஞானவெட்டியான் அய்யா தமிழுலகம் குழுமத்திலே அட்டகாசமா எழுதிகிட்டு இருக்கார், ஆனா அப்பப்ப தமிழ்மணத்திலே வர்ரார்.
துளசி டீச்சர் நல்லா இப்பவும் அதே நகைச்சுவையோட தமிழ்மணத்திலே எழுதறாங்க!
டுபுக்கு எப்போதும் போல அவருக்கு இன்கிரிமெண்ட் கிரைக்கும் போது ஒரு பதிவுன்னு காமடியா போடுரார்,
லக்கி, கோவியார் , சிபி எல்லாம் எப்போதும் போல நல்லா எழுத்றாங்க!எப்போதும் போல சிபி இன்னும் 5 பிளாக் ஆராம்பிச்சு அமோகமா இருக்கார்
என்னை போல சின்ன பதிவர்கள் சில பேர் கிளம்பி இருக்காங்க!
செந்தழல் ரவி! நல்லா இருக்கார்!
ஆசீப் நிறைய எழுதிகிட்டு இருந்தார். 2 மாசமா கொஞ்சமா கூட எழுதுவதில்லை!
இது போதுமா? இனி ஸ்டார்ட் ம்மீசிக்! முதல்ல ஒரு கவிதை!
அன்புடன்
அபிஅப்பா
(அபி அப்பா சார்பா நான் இங்கே பின்னூட்டமிட்டிருக்கிறேன், அவர் எனக்கு தனிமடலில் அனுப்பி இருந்தார்)
//நீங்க சாதாரணமா எதையாவது எழுதுவீங்களா (அதாவது கதை, கவிதை, தொடர்கதை) தவர்த்து வேறு..
உங்களோட primary blog எது?//
ஏம்பா இப்படி சுத்தி வளைச்சி கேட்டு கஷ்டப் படுறே?
நேரடியா, ஸ்ட்ரெயிட்டா
எந்த பிளாக்லே மொக்கை போடுவீங்க ன்னு கேக்க வேண்டியதுதானே?
1.பிதற்றல்கள் - நம்ம பிரைமரி மொக்கை!
2. கலாய்த்தல் திணை அடுத்தவங்களை கலாய்க்க! (கூடிய சீக்கிரம் உம்மையும் கலாய்க்கக் கூடும்)
3. மனமும் நினைவும் - கவிதைகளுக்காக
4. நந்தவனம் - கதைகளுக்காக
5. தேன்கிண்ணம் - திரையிசைப் பாடலகள் (கூட்டு முயற்சி)
6. வருத்தப் படாத வாலிபர் சங்கம் - நகைச்சுவைக்காக (கூட்டு முயற்சி)
7. முருகனருள் - முருகன் பாடல்களுக்கக (கூட்டு முயற்சி)
8. கானகந்தர்வன் - கே.ஜே.யேசுதாஸ் பாடல்களுக்காக ((கூட்டு முயற்சி, இன்னும் ஒரு பதிவு கூட போட்டதில்லை அங்கே)
//ஆமாங்க சிபி, உண்மைத் தமிழனும் தொடர் எழுதராரா? //
அவரோட ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு தொடர் மாதிரி இருக்கும்!
தாராளமா ஒரே பதிவை ஒரு வாரம் படிக்கலாம்! (ஒரு தபா படிச்சி முடிக்கவே அவ்ளோ நேரம் ஆயிடும், ஹிஹி, எவ்ளோ கலாய்ச்சாலும் ட்ஹாங்கிக்குவார், தங்கமான மனுஷன்)
http://truetamilans.blogspot.com/
உங்களைப் பார்த்தா சொட்டை மனோஹர் மாதிரியே இருக்கு!
நாமக்கல் சிபி, விளக்கங்களுகு நன்றிங்க!!
அபி அப்பா எப்படி நாமக்கல் சிபி பேர்ல சைன் இன் பண்ணார்னு நேத்தி பூரா மண்டையை உடைச்சுகிட்டு இருந்தேங்க..
அவருக்கும் என் நன்றி!!
தேன்கூடு சாகரன் மறைவு எனக்கு தெரியும், ஆனால் அவரது மறைவுக்கு பிறகு தேன்கூடு செயலிழந்ததுதான் தெரியாது..
//"தேன்கூடு திரட்டி என்னானது?"//
தேன்கூட்டில் யாரோ கல் எறிஞ்சிட்டாங்க போல......மொத்தமாக காணும்.
நீங்கள் ஒவ்வொரு பதிவுலும் கேட்கிற கேள்விகள்.
'என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா ?'
கோவி. கண்ணன், என்னங்க ஒவ்வொரு பதிவிலுமா இந்த கேள்வியை கேக்கறேன், ஓவரா கலாய்க்கிறீங்களே :-))))
//அபி அப்பா எப்படி நாமக்கல் சிபி பேர்ல சைன் இன் பண்ணார்னு நேத்தி பூரா மண்டையை உடைச்சுகிட்டு இருந்தேங்க..//
இது ஒரு பெரிய விஷயமா?
கொஞ்சம் அனானி/அதர் ஆப்ஷன் திறந்துவிட்டு பேருங்க! உங்க பேர்லயே கூட அபி அப்பா சைன் இன் பண்ணுவார்!
பை தி வே நீங்க இந்த புரொஃபைல் சோதனை, எலிக்குட்டி சோதனைலயெல்லாம் சர்ட்டிஃபைடு வாங்கின ஆள்தானே?
Post a Comment