'இன்று வெள்ளிக்கிழமை...' என்ற காதலியின் கவிதையை கடந்த இடுகையில் பார்த்தோமல்லவா, இப்போது அதற்கு பதில் சொல்லும் விதத்தில் வரும் காதலனின் கவிதையை அனுபவியுங்கள் !
<<<>>>
இன்று திங்கள் கிழமை,
நாளை செவ்வாய் கிழமை,
ஒவ்வொரு முறையும்
வாங்கிக் கொடுக்கும் குளிர்பானங்கள்,
கூட்டிச் செல்லும் திரைப்படங்கள்,
உணவருந்தும் குளிரூட்டப்பட்ட விடுதிகள்,
கணக்கிலடங்கா பரிசுப் பொருட்கள்,
மணிக்கு இருமுறை தொலைபேசி அழைப்புகள்,
அளவில்லா இணைய அரட்டைகள்,
இவைகளால் கரையும் என் வங்கி சேமிப்பு,
எல்லாம் நினைவிற்கு வருகிறதடி
உன்னை பார்த்தவுடன், என் காதலி !!
<<<>>>
6 comments:
:) good
அனுபவம் பேசுதோ. . . . ?
இது கவித!
very good :)
//வெள்ளிக்கிழமைக்கு படம் போட்ட நீங்கள். நொந்து போன எங்கள் மனங்களுக்கு திங்கள் கிழமையும் ஒரு படம் போட்டிருக்கலாம்//
வழிமொழிகிறேன்!
//கரையும் என் வங்கி சேமிப்பு// அதற்காகவாவது, ஒரு படம் கண்டிப்பாக போட்டிருக்க வேணும்! என்ன செய்வது, காதலைத் தவிர வேறு ஏதும் நினைக்காத காதலன் கிட்ட இதெல்லாம் எதிர்பாத்தா முடியுமா?
பழுராரே நன்றாக உள்ளது எந்த பழுவூர் டி பழுவுரா?
பிரபு ராஜா, நன்றி!
<<>>
வெங்கட்ராமன்,
//அனுபவம் பேசுதோ. . . . ? //
கவிஞனுக்கு தேவை கற்பனை, அனுபவம் அவசியமில்லை...
<<>>
சடையப்பா,
அடுத்த கவிதைக்கு படம் போட்டு விடுவோம் :-))
<<>>
வேந்தன், நன்றி!
<<>>
கண்ணபிரான்,
காதலைத் தவிர வேறு அனைத்தையும் நினைக்கிறான் காதலன் :-))
<<>>
என்னார், ஆமாம்
Post a Comment