Tuesday, November 07, 2006

தமிழ் வலைப்பதிவுகள் - பொருத்துக

தமிழ் வலைப்பதிவாளர்களின் பெயரையும், அவர்களை இணைக்க ஒரு குறிப்பு வரியும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. எங்கே, சரியாக இணையுங்களேன், பார்ப்போம்.

சரியான விடைகளை பின்னூட்டத்தில் (எ.கா: 1 - j, 2-e, ....) கூறுங்கள். பின்னூட்டங்கள் உடனே வெளிவராது. சரியான பதிலென்றால் உங்களைப் பாராட்டி ஒரு சிறுகவிதையும், தவறென்றால் குறிப்பும் வழங்கப் படலாம். புதிரில் சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்களும் கலந்து கொள்ளலாம்!


1. டி.பி.ஆர்.ஜோசப் - a. பொருளாதார கட்டுரைகள்
2. பாஸ்டன் பாலா - b. அத்தை பெண்கள்: ராஷ்ஷசிகள் என்று, கவிதை புனைபவர்
3. தேசிகன் - c. ராமயணக் கதை, ஐடிபில் நினைவுகள் எழுதும் மொழிபெயர்ப்பாளர்
4. லக்கிலுக் - d. திரும்பிப் பார்த்தவர்
5. மா சிவகுமார் - e. சமீபத்திய 'தேன்கூடு போட்டி' விமர்சகர்
6. *** கணேசன் - f. 'இலவச'த்தை வழங்கியவர்
7. கார்த்திக் பிரபு - g. செய்திகளை பேச வைத்தவர்
8. யதா - h. தமிழில் எண்ணங்கள்
9. டோண்டு - i. கடலளவுக்கு கலக்குபவர்
10. பத்ரி - j. கோயில்கள் நிறைய சுற்றும், 'பெண்களூர்'காரர்

18 comments:

லக்கிலுக் said...

1. டி.பி.ஆர்.ஜோசப் - திரும்பிப் பார்த்தவர்

2. பாஸ்டன் பாலா - செய்திகளை பேச வைத்தவர்

3. தேசிகன் - கோயில்கள் நிறைய சுற்றும், 'பெண்களூர்'காரர்

4. லக்கிலுக் - 'இலவச'த்தை வழங்கியவர்

5. மா சிவகுமார் - பொருளாதார கட்டுரைகள்

6. *** கணேசன் - கடலளவுக்கு கலக்குபவர்

7. கார்த்திக் பிரபு - அத்தை பெண்கள்: ராஷ்ஷசிகள் என்று, கவிதை புனைபவர்

8. யதா - சமீபத்திய 'தேன்கூடு போட்டி' விமர்சகர்

9. டோண்டு - ராமயணக் கதை, ஐடிபில் நினைவுகள் எழுதும் மொழிபெயர்ப்பாளர்

10. பத்ரி - தமிழில் எண்ணங்கள்

Hariharan # 03985177737685368452 said...

ஸ்வாமி,

தெரிஞ்ச பழைய பேமஸான பார்டிங்களையே பொருத்தச் சொன்னா சுளுவான வேலைதானே!

புதிய ரொம்பவும் அறியப்படாத பதிவர்களைப் போட்டு பொருத்தும் படி அடுத்த பதிவைப் போடுமய்யா!

(ஹி.ஹி அதிலயாவது நம்ம பேர் வருமான்னு அல்ப ஆசை தான்!)

பழூர் கார்த்தி said...

லக்கிலுக், உங்கள் விடைகள் அனைத்தும் சரியே.. பதிவிட்ட பத்தே நிமிடத்தில் விடையளித்து அசத்தி விட்டீர்களே !!!

<<>>

முதலில் விடையளித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் !!

<<>>

இதோ உங்களுக்கான பாராட்டுக் கவிதை :-)))

இலவசமாய்
தலைப்பு தந்து
எங்களை
பரவசப் படுத்தியவரே!
சுறுசுறுப்பாய்
பதிலளித்து
பெற்றாய் நீ
முதல் பாராட்டு கவிதையை..
லக்கிலுக்கே,
லக்குக்கே லக்,
உன் பெயரை அது பெற்றதனால்!!!

நாமக்கல் சிபி said...

1

லக்கிலுக் said...

நன்றி உங்கள் வாழ்த்துப்பாவுக்கு

நாமக்கல் சிபி said...

1 - D
2 - H
3 - J
4 - F
5 - A
6 - I
7 - B
8 - E
9 - C
10 - G

நாமக்கல் சிபி said...

நம்மளைப் பத்தின கவுஜயை சீக்கிரமா எடுத்து உடுங்கோ!

(எவ்வளவு பிழை இருக்கிறதோ அதறிகேற்றாற்போல் திட்டி கவுஜ எழுதுவீங்களா என்ன? அப்புறம் ஆட்டோதாண்டி)

நாமக்கல் சிபி said...

என்னோட ஆன்ஸர் வந்துதா இல்லையாப்பா?

துளசி கோபால் said...

1 d
2 g
3 j
4 f
5 a
6 i
7 b
8 e
9 c
10 h

பழூர் கார்த்தி said...

நாமக்கல் சிபியாரே, உங்கள் விடைகளில் இரு பதிவர்களுக்கான விடைகளை மாற்றி விட்டீரே.... எதுவென்று சொன்னால் எளிதாகி விடுமே.. திரும்பவும் முயலுங்களேன் சிபியாரே !!

பழூர் கார்த்தி said...

ஹரிஹரன்,

//புதிய ரொம்பவும் அறியப்படாத பதிவர்களைப் போட்டு பொருத்தும் படி அடுத்த பதிவைப் போடுமய்யா!
(ஹி.ஹி அதிலயாவது நம்ம பேர் வருமான்னு அல்ப ஆசை தான்!) //

நிச்சயம் செய்து விடலாம் நண்பரே, அடுத்த புதிர் பதிவில் அதிகம் அறியப்படாத பதிவர்களை களத்தில் இறக்கி விட்டு விடுவோம்.. உங்களையும், என்னையும் சேர்த்துத்தான் :-))

பழூர் கார்த்தி said...

நாமக்கல் சிபியாரே, உங்கள் முதல் பின்னூட்டத்தில் 1 என்ற எண் மட்டும் வந்துள்ளது, இரண்டாம் பின்னூட்டத்தில் உங்கள் விடைகளை சொல்லியிருக்கிறீர்கள், அது பின்பு வெளியிடப்படும்...அதிலிரண்டு விடைகள் தவறு..

கோவி.கண்ணன் [GK] said...

சோம்பேறி பையனிலிருந்து கார்த்தி பெயர் மாற்றம் நல்லா இருக்கு !

:)

பழூர் கார்த்தி said...

துளசி கோபால், உங்கள் விடைகள் அனைத்தும் சரியானவையே!! பாராட்டுக்கள்!! இதோ உங்களுக்கான கவிதையை பிடியுங்கள் :-))

<<>>

வாசமிகு
துளசி தளத்தில்
தினசரி மனிதர்களை
திருத்தமாய்
அறிமுகப்படுத்தும்
நறுமுகையே,
நல்மனமே..
சரியாய் பதில்களை
நவின்றாய் நீ,
நன்றி, நவின்றதற்கு!
உம் வாசம்
தமிழ் வலைப்பதிவை
தொடர்ந்து நனைக்க
வாழ்த்துக்கள் !!

பொன்ஸ்~~Poorna said...

எனக்கெதுவும் "கவிதை" எழுதிக் கொடுக்க மாட்டீங்கன்னு மொதல்ல உறுதி கொடுங்க அப்புறமா உங்களுக்கு விடைகள் சொல்லுறேன்..

பழூர் கார்த்தி said...

பொன்ஸ்,
//எனக்கெதுவும் "கவிதை" எழுதிக் கொடுக்க மாட்டீங்கன்னு மொதல்ல உறுதி கொடுங்க அப்புறமா உங்களுக்கு விடைகள் சொல்லுறேன்.. //

ஏங்க, நம்ம கவித என்ன அவ்வளவு மோசமாவா இருக்கு :-)))
சரி, உங்க கண்டிஷனுக்கு ஒத்துக்கறேன், விடையை சொல்லுங்க !!

<<>>

சிபியாரே,

எங்கே சரியான பதில்களை இன்னும் காணோமே ???

//எவ்வளவு பிழை இருக்கிறதோ அதறிகேற்றாற்போல் திட்டி கவுஜ எழுதுவீங்களா என்ன? அப்புறம் ஆட்டோதாண்டி) //

அப்படின்னா நீங்களும் ஆட்டோ பார்ட்டிதானா :-))),
அய்யய்யோ தெரியாமா போச்சே :-(
வேணும்னா உங்க விடைகள் எல்லாம் சரின்னு பின்னூட்டம் போட்ருவோமா :-)))

நாமக்கல் சிபி said...

//எனக்கெதுவும் "கவிதை" எழுதிக் கொடுக்க மாட்டீங்கன்னு மொதல்ல உறுதி கொடுங்க அப்புறமா உங்களுக்கு விடைகள் சொல்லுறேன்..
//

கவுஜைக்கு நான் வேணா டிரை பண்ணட்டா?


யானை படம்
பூனை படம்
நாலு காலு மிருகம் படம்
பட்டாம் பூச்சி, சிட்டுக் குருவி
அத்தனையும் இருக்கும் படம்


காமெடியாக் கொஞ்ச காலம்
கதை எழுதி வந்தாங்கோ!
படகிலேறி கொஞ்ச நாளும்
பறந்தாங்கோ!
இப்போ வெட்டியாச் சுட்டு
சோதனைதான் செய்றாங்கோ!

Samuel said...

இந்தியா என் வீடு - அரசியல், பொருளாதாரம், சமூகம், மதம் பற்றி ஒரு வலைப்பதிவு