Tuesday, October 17, 2006

கவிதைக்கு மெய் அழகு...

1


முருகன்..
கணேசன்..
இயேசு..
அல்லா..
அனுமான்..
பாலாஜி..
சிவன்..
எத்தனை பெயர்கள் இறைவா உனக்கு !!
ஒன்றிற்காவது இருக்கிறதா கடன் அட்டை* ??

~~~~~

* கடன் அட்டை - கிரெடிட் கார்டு

<<<<<>>>>>

2


ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
...
...
...
ஸ்ரீராமஜெயம்
நூற்றியெட்டு முறை
எழுதி அனுப்பினேன் மின்னஞ்சலை
ஸ்ரீராமர்@இந்திரலோகம்.காம் !!!
முகவரி சரியில்லை என திரும்பி
வந்து விட்டது,
யாராவது சொல்லுங்களேன்
ஸ்ரீராமர் எங்கேயிருக்கிறார் என்று ???

<<<<<>>>>>

3


நாட்டில் எங்கும் ஊழல் பெருகி விட்டது..
அரசியல்வாதிகள் ரொம்பவும் மோசம்..
என
பயணச்சீட்டில்லாமல் ரயிலில் பயணிப்பவர்
நிஜமாகவே கவலைப் படுகிறார் !!

<<<<<>>>>>

4


நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும்
கணிணி மென்பொருளாளர்
நான்கு ரூபாய்க்காக காய்கறிக் கடையில்
பேரம் பேசி, சண்டை போட்டு வெல்கிறார்...
வீட்டிற்கு வந்ததும்,
பெண் தோழியிடம் செல்பேசியில்
நாற்பது நிமிடங்கள் கதைக்கிறார் !!!

<<<<<>>>>>

5


நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோமடி,
உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!

<<<<<>>>>>


பின்குறிப்பு : உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-)) கவிதைகளை மேம்படுத்த மாறுதல் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகிறது!

17 comments:

நன்மனம் said...

3

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

3
4
-
-
1 2 5

ஹி ஹி....

Hariharan # 03985177737685368452 said...

ஸ்வாமி,

இந்திரலோகம் எல்லாம் சுகவாசிகளுக்கும் உல்லாசப் பேர்வழிகளுக்குமான இடமய்யா!
ராமர் மாதிரியானோரை இங்கு இருப்பதாக தேடினால் திரும்பித்தானய்யா வரும் மெயிலு!

ராமரை வெளியே தேடாமல் உட்கார்ந்து உன்னுள் இறங்கித் தேடுமய்யா!


யோவ் ராமஜெயம்ன்னு ராமபக்தன்மாதிரி 2ல ஆக்ட் காட்டிட்டு 5 ல என்னய்யா சொல்லி இருக்க்குறீர்! ஒரே அக்கிரமமா இருக்கு!

கோவி.கண்ணன் [GK] said...

//ஸ்ரீராமர்@இந்திரலோகம்.காம் !!!
//

முகவரி தவறு ! ராமர் ஏகப்பத்தினி விரதர் ! இந்திர லோகம் சுந்தரிகள் நிறைந்த இடம் அங்கு நிச்சயம் இருக்க மாட்டார் !

சரியான முகவரி !
drama@mithilai.com.in

drama - not ட்ராமா ! தசரத ராமா
:))

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி !!

***

ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்கு சிறு மாற்றத்துடன் மீள்பதியப் பட்டுள்ளது..

***

நன்மனம்,
// 3 //

:-)

***

குமரன் எண்ணம்,

//3
4
-
-
1 2 5

ஹி ஹி.... //

எல்லா கவிதையும் பிடிச்சுருக்குன்னு சொல்றீங்களா, இல்ல ஒன்னும் தேரலன்னு சொல்றீங்களா :-))) ???

***

ஹரிஹரன்,

//ராமரை வெளியே தேடாமல் உட்கார்ந்து உன்னுள் இறங்கித் தேடுமய்யா!//

சரிங்க, தேட ஆரம்பிச்சுடறேன் :-))

//யோவ் ராமஜெயம்ன்னு ராமபக்தன்மாதிரி 2ல ஆக்ட் காட்டிட்டு 5 ல என்னய்யா சொல்லி இருக்க்குறீர்! ஒரே அக்கிரமமா இருக்கு! //

கவிதையில் வருவதெல்லாம் என் அனுபவமல்ல, கவிஞனுக்கு தேவை கற்பனை :-)))

***

அருகம்புல்,

//மூன்றுமே நன்றாகத்தான் இருந்தது:-))) //

மொத்தம் 5 கவிதைகளல்லவா !! மூன்றுமே என்றால் எந்த மூன்றும் ???
குழப்பறீங்களே :-))))

***

கோவி.கண்ணன்,

//சரியான முகவரி !
drama@mithilai.com.in//

சரிங்க, இந்த முகவரியை முயற்சி செய்கிறேன் :-))

கோவி.கண்ணன் [GK] said...

//ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்கு சிறு மாற்றத்துடன் மீள்பதியப் பட்டுள்ளது..//

ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்கு சிறு தடுமாற்றத்துடன் மீள்பதியப் பட்டுள்ளது..
:)

தருமி said...

attendance மட்டும் போடணும்னா என்ன செய்யணும்னு சொல்லவேயில்லை.

ENNAR said...

1.கடன் அட்டை கொடுப்பவரே அவர்கள் தானே!!!
2. உங்கள் உள்ளத்தில்
3. கையில் பணம் இல்லை என்று சொல்லிக்கொண்டே வருமான வரி செலுத்தாதவர் தாங்கள் தானே.
4. அதிலாவது மிச்சம் கொள்ளலாம் எனத்தான்.
நான்கும் எனக்குப்பிடித்துள்ளது (என்னையல்ல)

பழூர் கார்த்தி said...

கோவி.கண்ணன்,
//ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்கு சிறு தடுமாற்றத்துடன் மீள்பதியப் பட்டுள்ளது..
:) //

மாற்றமோ, தடுமாற்றமோ என்று தெரிவதே தடுமாற்றமாக இருக்கிறது
எமக்கு :-))

***

தருமி,

//attendance மட்டும் போடணும்னா என்ன செய்யணும்னு சொல்லவேயில்லை. //

attendance மட்டும் போடணும்னா
வந்து இதே கேள்வியை ஒவ்வொரு இடுகையிலும் கேக்கனும் :-))

***

என்னார்,
//4. அதிலாவது மிச்சம் கொள்ளலாம் எனத்தான்.//
நிஜமாலுமே அப்படித்தானா :-) ????

//நான்கும் எனக்குப்பிடித்துள்ளது (என்னையல்ல)//
இதுக்கு என்னங்க அர்த்தம் ??

மா சிவகுமார் said...

3,4

அன்புடன்,

மா சிவகுமார்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கவிதை 2 எனக்கு பிடித்திருக்கின்றது

இறைவன் இமெயிலில் இல்லையப்பா.. உன்
.இயதத்தில் அல்லவா இருக்கின்றார்

வல்லிசிம்ஹன் said...

3,4.
ஸ்ரீராமா@அயோத்யா.காம்.
மெயில் போடலாம். மிதிலை மாமனார் வீடு.

:-)0

பழூர் கார்த்தி said...

மா சிவகுமார்,

//3,4//

சமூக யதார்த்தங்களை மெலிதாய் இடித்துக் காட்டும் இக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருப்பதில் எமக்கு ஆச்சரியமில்லை, நன்றி :-))

***

நிலவு நண்பன்,
நன்றி.

//இறைவன் இமெயிலில் இல்லையப்பா.. உன்
.இயதத்தில் அல்லவா இருக்கின்றார் //

இறைவன் இதயத்தில் இருந்தாலும் இமெயிலில் பேசுவதுதான் மென்பொருளாளர்களான எம் வழக்கம், பழக்கம் :-))))

***

வல்லிசிம்ஹன்,
நன்றி.

//ஸ்ரீராமா@அயோத்யா.காம்.
மெயில் போடலாம். மிதிலை மாமனார் வீடு.//

ஆஹா, அற்புதமான விலாசம், யோசனை :-))) இன்றே அடுத்த மெயில் அனுப்பி விடுகிறேன்

மிதிலையின் தற்கால பெயர் என்ன, எங்கேயிருக்கிறது என்று யாராவது சொல்லுங்களேன்...

ராம்குமார் அமுதன் said...

3 ***********
4 **********
1 *********

Unknown said...

un thambiyai/annanai paartha pin unnai vittuvittal ........sirippayooo...etho ezhutha kavithai alla, kaadhalum kadalai poda mattumalla, varum kanneeraikkooda vazhiyil niruthhuvathai irrukkavendam, padhi vazhiyileye vittu kevalamai oduvathai irukka koodathu.......

பழூர் கார்த்தி said...

மதுரையம்பதி, அமுதன், San,

நன்றி!!

<<>>

San, நீங்க என்ன எழுதியிருக்கீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியவில்லை....

நாடோடி இலக்கியன் said...

//நாட்டில் எங்கும் ஊழல் பெருகி விட்டது..
அரசியல்வாதிகள் ரொம்பவும் மோசம்..
என
பயணச்சீட்டில்லாமல் ரயிலில் பயணிப்பவர்
நிஜமாகவே கவலைப் படுகிறார் !!//



எங்கும் ஊழல்
கவலைப் பட்டார்
பயணச்சீட்டில்லாமல்
ரயிலில் பயணிப்பவர்!!!
சும்மா ஒரு யோசனை, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,இப்படி நச்சுன்னு சுருக்கி எழுதுங்க.