Friday, September 01, 2006

தீவிரவாதிகளுக்கு நன்றி

தீவிரவாதிகள் என்றாலே சமூகம் அவர்களை கொடூரமானவர்களாக பார்க்கின்றது. ஆனால் சில சமயம் தீவிரவாதிகளும் அவர்களை அறியாமலேயே, நமக்கு நன்மைகள் ஏதாவது செய்து விடுகின்றனர்.

ராகா என்று எனக்கொரு நண்பர் இருக்கிறார். மென்பொருள் சோதனையாளராக இருக்கிறார். அலுவலுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். லண்டன் வழியே அமெரிக்கா - நியூயார்க். பின் டல்லாஸ் மாகாணத்திற்கு செல்ல வேண்டும். கிளம்புவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே பயண ஆயுத்தங்களை செய்ய ஆரம்பித்தார்.புனே பிக் பஜாருக்கு சென்று நூடுல்ஸ் பாக்கெட்டுக்கள் ஃபேமிலி பேக் - 4, பாசுமதி அரிசி 2 கிலோ, வத்தக்குழம்பு ரெடி மிக்ஸ் - 2 பாட்டில், ஊறுகாய் பாக்கெட்டுக்கள் - 2 இன்னும் பற்பல தின்பண்டங்கள். ஊரிலிருந்து அம்மாவை வரச்சொல்லி பருப்புப் பொடி, கொத்தமல்லி பொடி, கருவேப்பிலை பொடி,புளிக்காய்ச்சல் இன்னும் சில திரவ உணவுகள் அனைத்தும் தயார்.

ஊருக்கு கிளம்பும் முன் தின இரவு, நண்பரின் வாழ்க்கையில் விதி விளையாடியது. லண்டனில் விமானத்தை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதிகள்(?) 12 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டன் - நியூயார்க் பிரயாண கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டன. திரவ உணவுகள், வேறு திரவங்கள் ஹேண்ட் லக்கேஜில் எடுத்துச் செல்ல தடை செய்யப் பட்டன. செக்-இன் லக்கேஜில் எடுத்துச் செல்லலாம் என்றாலும், நண்பர் முன் ஜாக்கிரதையாக லக்கேஜை பாதியாகக் குறைத்து விட்டு (திண்பண்டங்கள் பெரும்பாலானவற்றை தவிர்த்து விட்டு) அமெரிக்கா சென்று விட்டார்.

இப்போது ப்ளாட்டில் இன்னொரு நண்பரும், நானும் வத்தக்குழம்பு மிக்ஸையும், பொடி வகையறாக்களையும் காலி செய்து கொண்டிருக்கிறோம். ரொம்ப சுவையாக உள்ளன, அமெரிக்கா போவதற்காக வாங்கியவை அல்லவா! அந்த தீவிரவாதிகளுக்கு ரொம்ப நன்றி !!! நீங்க என்ன சொல்றீங்க, நான் நன்றி சொல்றதுல ஒன்னும் தப்பில்லையே ????

*****

மும்பையில் வசிக்கும் நண்பர் அரவிந்த் சந்திரசேகரன் எழுதி அனுப்பிய கவிதை இது.


புதிர் ---- முத்தம் !


உரசல் ஒன்றுதான்
சத்தம் ஒன்றுதான் -
இவைகளின்
இனிமையான
இணைப்பால் ஏற்படும்
முத்தமும் ஒன்றுதான்.
உதடுகள் மாறும் போது
உணர்வுகளில் மாற்றம் ஏனோ!


***

12 comments:

dondu(#11168674346665545885) said...

நல்ல ஜாலியான பதிவு. உங்கள் காண்டக்ஸ்டில் அது ஜாலியாகப் போய் விட்டது. ஆனால் எனக்குப் பல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை அரசு படிவங்கள் ஆகும். முக்கியமாக ஸ்ரீலங்கா அகதிகளுக்காக அவை சம்பந்தப்பட்ட அரசு சார்பில் தமிழாக்கப் படுகின்றன. எனக்கு மொழிபெயர்ப்பு வேலையென்றாலும், இந்த பாழாய்ப் போன யுத்தம் இல்லாதிருந்தால் அவரவர் தத்தம் ஊரிலேயே சந்தோஷமாக இருந்திருப்பார்களே என்ற நினைவைத் துடைக்க முடியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கார்த்திக் பிரபு said...

anonys pothtadhunnu innimey theeviravadhingra perla ellarum pinotam ida arambichru poranga!!

Anu said...

oh no...
oru vattakozhambu mixkaga.theeviradhigalukku nanriya..
too much...nga

ரவி said...

புனேயில் எங்க இருக்கீங்க ? நான் போனவாரம் புரூக்சைட் அப்படின்னு ஒரு ஹோட்டல்ல தான் தங்கி இருந்தேன். ( விமான் நகர்) - டெக் மகிந்திரா எதிர்க்க..

தீவிரவாதிங்களுக்கு நன்றி எல்லாம் சொல்லாதீங்க..அவனுங்களால எவ்வளவு பேர் இன்னல்களுக்கு உள்ளானார்கள்...

புள்ளைங்க பாலை கூட குடிச்சு பார்த்தானுங்க..

கொஞ்சம் ஆழமா சிந்தித்து தீவிரவாதிங்களை திட்டுங்க..ஆமாம்...

வஜ்ரா said...

உண்மையான தீவிரவாதி நீங்க தான்! பாவம் உங்கள் நண்பர்!

தருமி said...

சரியான சாப்பாட்டு ராமரே! அங்கே அந்த ராகா சாப்பாட்டுக்கு என்ன பாட்டு எந்த ராகத்தில - முகாரி? - பாடிக்கிட்டு இருக்காரோ..பாவம்!

ENNAR said...

இது ரொம்ப நல்லயிருக்கு

பழூர் கார்த்தி said...

வாருங்கள் நண்பர்களே, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி !!

***

டோண்டு, உங்கள் ஆதங்கம் எனக்கும் புரிகிறது, இது நகைச்சுவைக்காக மட்டுமே, தீவிரவாதிகளைஆதரிக்க அல்ல :-)

***

கார்த்திக் பிரபு, தீவிரவாதிகள் என்கிற பேரில் பின்னூட்டம் வருமா, பயமுறுத்தாதீங்கய்யா :-((((((

***

அனிதா, வீட்டு சாப்பாடு இல்லாம கஷ்டப்படறவங்களுக்குத்தாங்க இதோட அருமையெல்லாம் புரியும் :-))

***

பழூர் கார்த்தி said...

செந்தழில் ரவி, இது நகைச்சுவைக்காக மட்டுமே, தீவிரவாதிகளைஆதரிக்க அல்ல :-)

புனேவில் பிபேவாடி பகுதியில் வசிக்கிறேன், ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ தூரம்..

***

வஜ்ரா, நான் தீவிரவாதியா, இல்லைங்க.. மிதவாதி :-))

***

தருமி, ராகா குஜாலாக இருக்கிறார் அமெரிக்காவில், அவருக்கு வத்தக்குழம்பு மிக்ஸை நினைத்துக் கவலைப்படக் கூட நேரமில்லை :-))

***

என்னார், நல்லாயிருக்குன்னு சொன்னது வத்தக்குழம்பு மிக்ஸையா :-) ??

ENNAR said...

//என்னார், நல்லாயிருக்குன்னு சொன்னது வத்தக்குழம்பு மிக்ஸையா :-) ?? //

இதுவும் நல்லாவேயிருக்கு

நல்லாயிருக்காம் ஞாயம் வெளுத்தப்போச்சாம் சாயம்

பழூர் கார்த்தி said...

என்னார், உங்களுக்கு மட்டும்தான் பழமொழி தெரியுமா ?? இந்தா புடிங்க என் பழமொழிய

"சாமிக்கே சாம்பார் இல்லயாம், பூசாரிக்கு புல்மீல்ஸ் கேக்குதா ????"

டிபிஆர்.ஜோசப் said...

இப்போது ப்ளாட்டில் இன்னொரு நண்பரும், நானும் வத்தக்குழம்பு மிக்ஸையும், பொடி வகையறாக்களையும் காலி செய்து கொண்டிருக்கிறோம். ரொம்ப சுவையாக உள்ளன, அமெரிக்கா போவதற்காக வாங்கியவை அல்லவா! அந்த தீவிரவாதிகளுக்கு ரொம்ப நன்றி !!! நீங்க என்ன சொல்றீங்க, நான் நன்றி சொல்றதுல ஒன்னும் தப்பில்லையே //

தப்பேயில்லை.. இதைத்தான் ப்ளெஸ்சிங் இன் டிஸ்கைஸ்ம்பாங்க.. ஜமாய்ங்க:))