Wednesday, September 13, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 36 to 40

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்
1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35


36. சபலம் - சிறுகதை - saran

பேய்களைப் பற்றிய பயம் கொண்ட முதிர் இளைஞரின்(?) கதை. "தொலைக்காட்சிகளில் 'horror' மூவிஸ் வந்தால் கூட, எப்படியேனும் எனது மனைவியையும் இரு குழந்தைகளையும் சமாளித்துவிட்டு வேறு சேனல் மாற்றிவிடும் அளவுக்கு நான் தைரியசாலி" என்ற வரிகளில் சிரிக்க முடிகிறது. க்ளைமேக்ஸ் சற்று ஏமாற்றம். சபலம், சற்று நேரத்திற்கு !!

மதிப்பெண் : 69 / 100

*****

37. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - Udhayakumar

நகைச்சுவை கலந்த த்ரில்(?) கதை. இரவு 8 மணிக்கு மெயின்ரோட்டிலிருந்து வீட்டிற்கு 10 நிமிடம் தனியாக நடக்கும் ஓர் இளைஞனுக்கு நிகழும் சம்பவம்தான் கதை. நகைச்சுவை மசாலா பூசிய வர்ணனைகளுடன் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார். "..நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன் என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்", "..யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான்" போன்ற வரிகள் மெலிதாக சிரிக்க வைக்கின்றன. கிண்டலான முடிவு. சிறுகதை, புன்சிரிப்பு !!

மதிப்பெண் : 76 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

நீ தேறுவது கஷ்டம்தான்...

- வல்லவன்

*****

38. konjam lift kidaikkuma?? - கவிதை - Rajalukshmi

புதிய வலைப்பதிவாளர் உற்சாகத்துடன் களத்தில் இறங்கி இருக்கிறார். வாழ்த்தி வரவேற்போம். வாழ்க்கையில் நடக்கும் சிற்சிறு சம்பவங்களில் உள்ள லிப்ட்டுகளை அழகான கவிதையாக்க முயற்சித்து இருக்கிறார். முதல் படைப்பாதலால் சிற்சிறு எழுத்துப் பிழைகளை (முதல் கவிதை உங்கள் வலைப்பில் வந்தால்.. - வலைப்பூவில் ??, கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா பீலிஸ் - ப்ளீஸ் ??) மழலை சொல் போல் ரசித்து மறக்கலாம். மொத்தத்தில்
கவிதை, முயற்சி !!

மதிப்பெண் : 60 / 100

*****

39. லாந்தர் விளக்கு - சிறுகதை - வசந்த்

கிராமத்து த்ரில்லர் கதை. வெவ்வெறு பகுதிகளாக எழுதி, அதை இணைத்திருக்கும் விதம் அழகு. இயல்பான உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன. "ரெண்டு தலமுறைக்கு முன்னாடி, எல்லாம் இங்கிருந்து போனவங்களாம். அதனால தமிழ்ப் பேரு தான்." போன்ற ஜஸ்டிபிகேஷன் வரிகளை வாசகர்களேயே ஊகிக்க விட்டு, தவிர்த்திருக்கலாம். க்ளைமேக்ஸ் அருமை. சிறுகதை, த்ரில்லர் மசாலா !!

மதிப்பெண் : 74 / 100

*****

40. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 5 - தொடர்கதை - ராசுக்குட்டி

முந்தைய பகுதிகளைப் போலவே துள்ளியோடும் இளமை. காலேஜ் படிப்பதிலிருந்து ஆரம்பித்து, காலேஜ் வாழ்க்கை, சைட், கட்டடித்து படம் பார்ப்பது, புரொபசர்களை கலாய்ப்பது, காதல், வேலை என்று வெவ்வேறு பருவங்களை அழகாக இணைத்து கல்யாணத்தில் செட்டிலாகிறது கதை. "உன் ரெஸ்யூமே எனக்கு அனுப்பி விடு எங்க project ல அடுத்த மாசம் மேய்க்கிறதுக்கு ஆள் வேணும்னாய்ங்க முயற்சி செஞ்சு பாப்போம்" போன்ற வரிகள் மென்பொருள் துறையாளர்களையும் ரசிக்க வைக்கிறது. தொடர்கதை, இளமை !!

மதிப்பெண் : 82 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கற்க கற்க...ன்னு ஒரு வார்த்தை போடறதுக்காக பாட்டுக்கே லிங்க் கா??? இது கொஞ்சம் ஓவர்

- Anonymous

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

8 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி ! //


உங்களை உற்சாகப்படுத்தத் தான் போட்டிக் கதைக்கு உங்கள் பெயரை வைத்திருக்கிறேன் :)

கார்த்திக் பிரபு said...

good work frend...keep going

நாமக்கல் சிபி said...

என்னங்க வர வர மார்க் எல்லாம் குறையுது???

பழூர் கார்த்தி said...

கோவி.கண்ணன்,
//உங்களை உற்சாகப்படுத்தத் தான் போட்டிக் கதைக்கு உங்கள் பெயரை வைத்திருக்கிறேன் :) //

ரொம்ப சந்தோசங்க :-))
இன்னும் கதையை படிச்சி பாக்கல, படிக்கிறேன் !!

***

கார்த்திக் பிரபு,
நன்றி !!

***

வெட்டிப்பயல்,
//என்னங்க வர வர மார்க் எல்லாம் குறையுது??? //

படைப்புகளைப் பொறுத்தே மதிப்பெண்கள் மாறுபடுகின்றன. கருத்திற்கு நன்றி !!

Udhayakumar said...

//இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

நீ தேறுவது கஷ்டம்தான்...

- வல்லவன்//

உங்க விமர்சனத்துக்கு நன்றி!!! அந்த ஒரு கமெண்ட் மட்டுந்தான் உங்க கண்ணுல பளிச்சுன்னு பட்டிருக்கு. :-)

வசந்த் said...

நண்பர் சோ.பையனுக்கு தங்கள் விமர்சந்திற்கு நன்றி. கதை நன்றாக இருந்தது என்று சொல்லிவிட்டு மார்க் மட்டும் கொஞ்சம் குறைவாகப் போட்டு விட்டீர்களோ என்று ஐயுறுகிறேன். (லாந்தர் விளக்கு)
இருந்தாலும் விட்டிடுவோமா..? இன்னும் வேகமாக போட்டியில் இறங்குவோம். ;-)

மதுமிதா said...

சோம்பேறிப் பையன்
இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நல்ல பணி தொடரட்டும்

Simulation said...

சோம்பேறி(ப்) பையன் என்று பெயர் வைத்துக் கொண்டு, இப்படி சுறுசுறுப்பாக விமர்சனங்கள் எழுதித் தள்ளுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- சிமுலேஷன்