Monday, September 18, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 51 to 55

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50


51. சர்தார்ஜி ஜோக் ஒன்று....கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - ஜோக் - ramkumarn
படு கடியான சிறியதொரு ஜோக். இருந்தாலும் மனம் விட்டு சிரிக்கலாம். தலைப்புடன் சரியாக பொருந்துகிறது. ஜோக், கடிச் சிரிப்பு !!

மதிப்பெண் : 72 / 100

*****

52. லிப்டாக இருக்கிறேனே..! - சிறுகதை - வசந்த்

ரொம்ப கண்டிப்பாக பள்ளி மாணவர்களை நடத்தும் ஓர் டீச்சரின் கதை. ஒரு பிரச்சினையால் இன்னொரு பள்ளிக்கு செல்கின்ற டீச்சர் அங்கே மனம் மாறுகிறார். எளிமையாக, அமைதியாக செல்கிறது கதை. "..ஆனா நாம எல்லா வசதிகளும் இருந்தும், எந்தக் குறை யில்லாம இருந்தும் சாதனை செய்ய யோசிக்கிறோம். முன்னேற எண்ணம் இல்லாம இருக்கோம்.." போன்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. சிறுகதை, மனமாற்றம் !!

மதிப்பெண் : 79 / 100

*****

53. அவன் கண்விடல் - சிறுகதை - குந்தவை வந்தியத்தேவன்

இராணுவத்தில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன், அவன் சந்தித்து பழகும் அழகிய இளம்பெண் என்று கதை நகர்கிறது. நீளமான வாக்கியங்கள் சற்று அலுப்பைத் தருகின்றன. இதையும் தாண்டி, "சாதாரணமான விஷயமாக அவள் செய்த இதை சாதாரணமா நான் எடுத்துக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது." போன்ற வரிகளை ரசிக்கலாம். க்ளைமேக்ஸ் எதிர்பார்த்ததே. திருத்தப்பட்ட குறள், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. சிறுகதை, மசாலா !!

மதிப்பெண் : 80 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஒரிஜினல் குறள்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

- சரவ்

*****

54. கடவுள் கேட்ட லிஃப்ட் - சிறுகதை - சேவியர்

லிஃப்ட் கேட்டு வரும் கடவுள், அவருக்கு காரில் லிஃப்ட் தந்து, பேசிய படியே வரும் சராசரி மனிதன், நடுவே நடக்கும் சம்பவங்கள் என வித்தியாசமான கதைக்களம். கடவுளுக்கும், மனிதனுக்கும் நடக்கும் உரையாடல்கள் சிந்திக்க வைக்கின்றன. "நம்பிக்கையில்லாத உலகில் வாழ்ந்து வாழ்ந்து உங்களுக்கு யாரையுமே நம்ப முடியாமல் போய் விட்டது. யாராவது பாராட்டினால் கூட எதையோ எதிர்பார்த்து தான் பாராட்டுகிறான் என்று நினைக்கிறீர்கள்.." போன்றவை நிஜமான சுய பரிசோதனை. யதார்த்தமான முடிவு. கடவுள், தத்துவம் !!

மதிப்பெண் : 82 / 100

*****

55. அவள் - சிறுகதை - நிர்மல்

விலைமாது ஒருவளை வீட்டுக்கு கூட்டி வந்து விடும் நண்பன், அதனால் ஏற்படும் சங்கடங்கள் என நகரும் கதை. "கணேசனுக்கு தலைசூடு அதிகமானது. அவனுக்கும், சண்முகத்துக்கும் வீட்டு வாடகை மற்றும் செலவு கணக்கு தவிர எந்த சொந்தமும் கிடையாது. இவளோ ஓரே வரியில் இரண்டு மாமா போடுகிறாள்..." போன்றவை சிரிக்க வைக்கின்றன. முடிவென்று ஏதுமில்லாமல் சிற்சிறு சம்பவங்களால் நகர்கிறது. சிறுகதை, பொழுதுபோக்கு !!

மதிப்பெண் : 71 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

//என்ன சொல்றதுன்னே தெரியல.//
"
"
"

- அமுதன்

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

5 comments:

இரா. வசந்த குமார். said...

நன்றி சோ.பையன் அவர்களே...!

கதிர் said...

அபாரமான உழைப்பு!!

தொடரட்டும் உமது சிறப்பான பணி.

சிறில் அலெக்ஸ் said...

சோம்பேறிப் பயல், பொறுமையா எல்லாத்தையும் படிச்சு விமர்சிக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்.

படைப்புக்களுக்கு வரும் பின்னூட்டங்களை தேர்ந்தெடுத்து தொகுப்பதும் ந்ல்ல யுக்தி. வாழ்த்துக்கள்.

எல்லா படைப்புக்களையும் படித்த பிறகு முன்னமே விமர்சிக்கப்பட்ட படைப்புகளை மறு மதிப்பீடு செய்யத் தோணியிருக்கிறதா உங்களுக்கு?

மதிப்பெண் எப்படி வழங்குகிறீர்கள்?
'வாரி வாரி' என்பது தவிர வேறு பதில் சொல்லவும்.

ராம்குமார் அமுதன் said...

சர்தார்ஜி ஜோக் ஒன்று.... இதைச் சும்மா எல்லாரும் பார்த்து சிரிக்கட்டுமே என்றுதான் போட்டிக்கு அனுப்பினேன்.... அதற்கும் விமர்சனம் போட்டு பாஸ் மார்க் கொடுத்த சோம்பேறிப் பையனுக்கு நன்றி.... நிர்மலின் அவள் சிறுகதையில் நம்ம பின்னூட்டத்தை ரசிச்சதா போட்ருக்கீங்க.... அதுக்கும் ஒரு நன்றி......

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !!

***

சிறில்,
//எல்லா படைப்புக்களையும் படித்த பிறகு முன்னமே விமர்சிக்கப்பட்ட படைப்புகளை மறு மதிப்பீடு செய்யத் தோணியிருக்கிறதா உங்களுக்கு?//

இல்லை :-)


//மதிப்பெண் எப்படி வழங்குகிறீர்கள்?//

படைப்பை படிக்கும்போது எந்தளவுக்கு ரசித்தேன், எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறதா, படித்தபின் படைப்போ அதன் கருத்தோ மனதில் நிற்கிறதா போன்ற காரணிகள் !!