நீ பிறக்கும் முன்
அம்மாவின் வயிற்றில் இருந்த போதே,
நான் உன்னிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டேன்...
எப்போதாவது அம்மாவின் மடியில்
படுக்க வரும்போது,
பாப்பா வயிற்றில் தூங்குகிறாள் என்று கூறி
நான் படுப்பதை அம்மா தடுப்பாள்...
அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு
உன்னைத் திட்டுவேன்...
நீ பிறந்த பின்பும்,
உனக்குத்தான் நிறைய செல்லம் கொடுப்பாள்..
என் மீது கவனிப்பும், செல்லமும் குறைந்ததால்
விவரமறியா சிறு வயதில்,
உன்மீது எனக்கொரு சிறு பொறாமை...
கொஞ்சம் வளர்ந்த பின்
தின்பண்டங்களுக்காக இருவரும்
சண்டை போட்டுக் கொள்வோம்...
விளையாட்டுச் சாமான்களுக்காக
நாம் சண்டை போட்டுக் கொள்ளாத
நாட்களே இல்லை...
வீட்டில் ஏதாவது பொருளை உடைத்து விட்டு
இருவரும் அடுத்தவரை குறை சொல்வோம்
இருவருக்கும் பொதுவாக அடி கிடைக்கும்...
கான்வென்ட்டில் இருந்து உன்னை
தினமும் மாலையில் அழைத்து வரும்போது
உன்னை மிரட்டிக் கொண்டே வருவேன்...
பள்ளிக் கூடத்தில் சேர்ந்த பின்
சிலேட்டிலிருக்கும் உன் வீட்டுப் பாடத்தை நான் அழிப்பதும்
என் வீட்டுப் பாடத்தை நீ அழிப்பதும் தினமும் நடக்கும்...
நான் பண்ணும் அடங்களை
அம்மாவிடம் தினமும் தவறாது போட்டுக் கொடுப்பாய்,
அம்மா திட்டி விட்டு நகர்ந்ததும்
நான் உன்னை அடிப்பேன்,
தேவைக்கதிகமான சத்தத்துடன் அழுவாய் நீ...
அம்மாவுக்கு தெரியாமல் நான்
தெருவில் விளையாட போகும்போது
என்னை தைரியம் கூறி அனுப்பி விட்டு
சிஐடியாய் அம்மாவுக்கு தெரிவிப்பாய்...
அம்மாவிடம் நான் அடி வாங்குவதை
ஒளிந்து நின்று ரசிப்பாய்...
இரவு உணவாக உப்புமா சாப்பிடும் போது
சிறு பெண்ணென்று, உனக்கு
வெல்லம் அதிகமாகவே கிடைக்கும்...
என் மீது பரிதாபப் பட்டு
சிறுதுண்டொன்றை எனக்கும் கொடுப்பாய்...
தாத்தா வீட்டு ஊஞ்சலில்
யார் அதிக நேரம் ஆடுவது என்று
தினமும் போட்டி நடக்கும், உனக்கும் எனக்கும்...
நான் நகரத்திற்கு படிக்கச் சென்றவுடன்
நான் ஊருக்கு திரும்பும் போதெல்லாம்
அம்மாவுடன், நீயும் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பாய்..
வா என்று பாசத்துடன் அழைத்து விட்டு
வீட்டினில் நீ நுழைந்தவுடன்
திரும்பவும் ஆரம்பிக்கும், நம்மிருவருக்குமிடையே யுத்தம்...
இருவரும் வளர, வளர
இடைவெளி அதிகமானது...
செல்ல சண்டைகள் குறைந்து போனது...
இருப்பினும் குறையவில்லை பாசம்...
இப்போது உனக்கு திருமணமாகி விட்டது...
முன்புபோல் உன்னோடு சண்டையிட முடியவில்லை...
புதிதாய் கிடைத்த உன் உறவுகளோடு
நீ மகிழ்ச்சியாய் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியே...
இப்போதும், நீ அத்தானுடன் விடுமுறையில்
நம் வீட்டுக்கு வரும்போது
உன்னுடன் சண்டைபோட காத்துக் கொண்டிருக்கிறேன்...
ஏனெனில் சண்டைகளெல்லாம் சண்டைகளல்ல...
உனக்கும் புரிந்திருக்கும், என் தங்கையே,
உறவுகள் சிற்சிறு செல்லமான
சண்டைகளாலும் பலமடைகின்றன...
16 comments:
ரசிக்க வைத்த ஒரு அழகியக் கவிதை. நல்லாயிருக்குங்க.
உறவுகள் சிற்சிறு செல்லமான
சண்டைகளாலும் பலமடைகின்றன...//
ஆஹா.. மென்மையான ஆனால் சத்தியமான உண்மை..
நெகிழ்ந்துப்போனேங்க..
அதுக்கு எனக்கு தங்கை என்று எவரும் இல்லையே என்பதும் ஒரு காரணம்..
wow super....
enakku en thangai nyabagam vanduchhu
odane poi sandai podanum pola irukku..
Too good
நண்பர்களே, வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி !!
***
பொதுவாக ஆண்கள் பாசத்தை பெண்கள் போல் வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
தங்கைகளின் மீது அளப்பறிய பாசத்துடன், ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கும் எத்தனையோ நண்பர்களுக்கும் இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்...
***
தேவ், ஜோசப், அனிதா, ரசித்தால் மட்டும் போதாது, இதை உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் கொண்டு சேருங்கள், அப்புறம் தகுதியென நினைத்தால், மறக்காமல் தேன்கூட்டில் வாக்களியுங்கள் !!
//அப்புறம் தகுதியென நினைத்தால், மறக்காமல் தேன்கூட்டில் வாக்களியுங்கள் !!
//
அது மேட்டரு!
(கவிதை நல்லா இருக்குப்பா!)
எனக்கு சொந்தத் தங்கை கிடையாது. ஒரே ஒரு அக்காதான். என் சித்தப்பாவின் நான்கு பெண்கள்தான் எனக்குத் தங்கைகள். அவர்களில் இரண்டாமவளும் மூன்றாமவளும் எனக்கு அதிகப் பிரியமானவர்கள்.
நான் பம்பாயில் இருந்த மூன்றரை வருடங்களும் நானும் எனது இரண்டாவது தங்கையும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் பாசத்தில் தோய்த்து எழப்பட்டிருக்கும்.
உங்கள் கவிதை எனது இரண்டாவது தங்கையை நினைவுபடுத்தி விட்டது. நன்றிகள் பல. போட்டியில் வெற்றிபெற எனது ஆசிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கவிதையா இதுன்னு சண்டைப் போட வரல. நல்ல இருக்குன்னு சும்மா சொல்ல வந்தேன்.
கவிதகள் அருமை நண்பா?
எனக்கு ஒரு தங்கை இல்லயே என்று நான் வருத்தப்பட்டதுண்டு.
இப்பவவும்தான்.
அழகான கவிதை. என் அண்ணனை ஞாபகப்படுத்தியது!
மதுரா, உங்கள் அண்ணனுக்கும் கவிதையைக் காட்டுங்கள்
***
உதயகுமார், நன்றி
***
தம்பி, தமிழ் வலைப்பதிவுகளில் எத்தனையோ சகோதரிகள் இருக்கின்றார்களே !
***
ஜெஸிலா, பாராட்டுறீங்களா திட்டுறீங்களான்னு தெரியலயே :-)
***
டோண்டு, ஆசிக்கு நன்றி..
thalaiva ean indha vipareedha muyaechi ..irudhndaalum kavidhai nalal than iruku ..valthukkal
//தமிழ் வலைப்பதிவுகளில் எத்தனையோ சகோதரிகள் இருக்கின்றார்களே //
அட ஆமா இல்ல!,
நல்லா இருக்கு
ஆனால் கொஞ்சம் வரிகள் நீண்டு போனமாதிரி இருக்கு
நான் கடைக்குட்டி
அந்த சண்டைகள் கி்டையாது
//கார்த்திக் பிரபு : ஏனிந்த விபரீத முயற்சி ?//
ஏங்க, ரொம்ப குறும்புங்க உங்களுக்கு :-))
அவ்வளவு நல்லாவா இல்ல ???
***
தம்பி, கலக்குங்கள் :-)
***
srivats, கவிதை வரிகள் கொஞ்சம் நீண்டு போனது உண்மைதான், அடுத்த முறை திருத்தி விடுகிறேன், ஆலோசனைக்கு நன்றி :-)
***
zeal, அறுந்த வாலா ???? நான் நல்ல பையன்க :-)))
***
யாழ் அகத்தியன், உங்க சகோதரியிடம் இன்னும் நல்லா சண்டை
போடுங்க :-)
***
என்னார், நீங்க க்டைக்குட்டியா, கொடுத்து வைத்தவர்தான் :-)
***
நண்பர் அருண் மின்னஞ்சலில் அனுப்பிய பின்னூட்டம் இது :
கவிதையில்
கையாண்ட
சாராம்சம்
அருமை...கவிதை
நடை
இன்னும்
கொஞ்சம்
வேண்டுமென்பது
எனது
தாழ்மையானக்
கருத்து.....உங்கள்
சாராம்சத்தைக்
கையாள
அனுமதி
வேண்டும்.
அருண் ச
//இருவரும் வளர, வளர
இடைவெளி அதிகமானது...
செல்ல சண்டைகள் குறைந்து போனது...
இருப்பினும் குறையவில்லை பாசம்...
உண்மை . வாழ்த்துக்கள்
Post a Comment