Tuesday, August 08, 2006

என் பெயரில் போலி வலைப்பதிவு

என் பெயரில், எனது புகைப்படத்தையும் இணைத்து, போலி ஆபாச வலைப்பதிவுத் தளம் ஒன்று சமீபத்தில் உருவாகியுள்ளது. மேலும் அந்த போலி எனக்கு மின்னஞ்சலில் "டோண்டுவுக்கு நீ அடிக்கடி பின்னூட்டுவதால் உனக்கு நான் கொடுக்கும் சிறப்புப் பரிசு இது." என மிரட்டல் விடுத்துள்ளார்.

எனது உண்மையான வலைப்பதிவு முகவரி http://lazyguy2005.blogspot.com/

எனது உண்மையான ப்ளாக்கர் எண் 11015751

எனது உண்மையான மின்னஞ்சல் முகவரி swami.plr@gmail.com

எனது உண்மையான ப்ளாக்கர் பெயர் சோம்பேறி பையன் (போலி வலைப்பதிவில் சோம்பேறிபையன் (without space) என்று உள்ளது).

போலி வலைப்பதிவு பற்றி சென்ற வாரம் எனக்கு தமிழ்மணத்திலுள்ள நண்பர்கள் தெரிவித்தனர். ஆகவே, வலைப்பதிவாளர்கள், நண்பர்கள் கவனமாக இருக்கவும். ஏதாவது சந்தேகத்துக்குரிய, ஆபாசமான பின்னூட்டம் வந்தால்,
மட்டுறுத்த வேண்டாம். எனக்கு மின்னஞ்சலில் அதை தெரிவித்து, தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!!

மேலும் இதைப்பற்றி ப்ளாக்கரில் புகார் தெரிவித்துள்ளேன்.

பின்குறிப்பு: இந்த பதிவை சென்ற வாரம் பதிவிட்டு, தலைப்பு நீளம் காரணமாக அது நீக்கப்பட்டு விட்டது. எனவே, திரும்பவும் மீள்பதிவு செய்துள்ளேன்.

3 comments:

Anonymous said...

அப்படியா? போலி தள முகவரி கொடுங்கள்


போலியார் நற்பணி இயக்கம்,
இஸ்ரேல்.

Muse (# 01429798200730556938) said...

அதை விடுங்கள்.

இப்போது என்னோடு மல்லுக்கட்ட வாருங்கள்.

அத்தி பூத்தாற்போல எப்போதாவது சுறு சுறுப்பு வந்து தொலைத்து அவ்வப்போது கட்டுரை பதியும் நான் சோம்பேறி பையனா, இல்லை மாதத்திற்குக் குறைந்தது இரண்டாவது பதிந்துவிடும் நீங்கள் சோம்பேறி பையனா?

உங்களுக்கே இது அநியாயமாகத் தோன்றவில்லை?

ஸூப்பர் மேன் பட்டம் போல அடுத்து சோம்பேறி மேன் பட்டத்திற்கு போட்டி வைக்கப் போகிறார்களாம். எனக்கு கலந்து கொள்ள சோம்பலாக இருக்கிறது என்பதற்காக நீங்கள் கலந்துகொண்டுவிடக் கூடாது என்பதற்குத்தான் இந்த பின்னூட்டமே.

இந்த போட்டிக்கு தாங்கள் பின்வரும் காரணங்களால் கலந்து கொள்ளக்கூடாது:

1. அதாவது வந்து ... (அப்புறம் சொல்லுகிறேனே. இப்போது சோம்பலாக உள்ளது.)

பழூர் கார்த்தி said...

போலியார் நற்பணி இயக்கமா....யப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே !!!

****

உக்காந்து யோசிப்பாய்ங்களோ, எப்படி பின்னூட்டம் போடறதுன்னு ????

****

ம்யுஸ், நானே இப்பத்தான் கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கேன், கண்ணு வைக்கறீங்களே :-)