சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமாய் ரயிலில்தான் பயணம் செய்வோம். எப்போதாவது டிக்கெட் இல்லாவிட்டால் கேபிஎன்னில் புக் செய்து பயணிப்போம். இம்முறை திடீரென்று ஒரு வாரத்திற்கு முன்புதான் திருச்சி செல்லலாமென்று முடிவு செய்து வலையில் தேடினால் எதிலும் டிக்கெட் இல்லை.
அரசாங்க SETC யில் புக் செய்ய நேரில் செல்ல வேண்டும், மேலும் மே 1 - வெள்ளி, சனி, ஞாயிறு நீண்ட வாரயிறுதி ஆதலால் SETCயிலும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு குறைவே. இது போன்ற சமயங்களில் ரெட் பஸ் வெப்சைட்டில்தான் வழக்கமாய் ஆம்னி பஸ் புக் செய்வோம்.
சரியென்று நீண்ட நேரம் தேடி SSCM டிராவல்ஸ் என்ற பஸ்ஸில் வியாழன் இரவு 10 மணி பஸ், திரும்பி வர ஞாயிறு இரவு 10 மணி பஸ்ஸையும் புக் செய்து விட்டோம். எங்கள் போதாத நேரம் ஓரே சீட்டையே (எண் 7 & 8) செல்வதற்கும், திரும்பி வரவும் தேர்ந்து எடுத்திருந்தேன்.
வியாழன் இரவு சென்னை - அசோக் பில்லர் நிறுத்தத்தில் 10:15 க்கு ஏறிக்கொள்ள பதிவு செய்திருந்தோம். 10:15க்கு வரவேண்டிய பஸ், 11 மணிக்குத்தான் வந்தது, போன் செய்து கேட்டால் கோயம்பேடில் டிராபிக், அதனால்தான் லேட் என்றனர். அசோக் பில்லர் ஆம்னி பஸ் நிறுத்ததில் ஒரு வசதியும் இல்லை. கிட்டத்தட்ட 500 பேர் அந்த இரவில் நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு நிழற்குடை, சேர்கள் எதுவுமில்லாமல் இருக்கிறது.
ஒரு வழியாக வந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் அடுத்த தலைவலி ஆரம்பித்தது. சீட் எண் 7-ல் புஷ்பேக் வசதி சரியாக வேலை செய்யவில்லை. உட்கார்ந்து கொண்டே இரவு நேர பிரயாணம் என்பது கொடுமையான அனுபவம். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்தோம். பஸ்ஸின் உரிமையாளரும் அப்போது இருந்தார், அவரிடம் பிரச்சனையை கூறி பிறகு சரி செய்யக் கூறினேன். சரியென்று தலையாட்டினார். பிறகு பஸ் சென்னையை சுற்றி வேளச்சேரி சென்றது. அங்கிருந்து மேடவாக்கம் வழியே தாம்பரம் செல்ல 12 மணியாகி விட்டது.
இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு மெல்ல சென்று காலை 745 மணிக்கு திருச்சி தில்லைநகரில் இறக்கி விட்டனர். இரவு 11 மணிக்கு ஏறி காலை 745 வரை, கிட்டத்தட்ட 9 மணி நேரம் பயணம். இத்தனைக்கும் தூரமென்னவோ 300 கிமீ தான். மிகவும் மோசமான பயணம். இறங்கும் போது, டிரைவரிடமிடமும் புஷ்பேக் பிரச்சினையை சொல்லி சரி செய்ய நினைவு படுத்தினோம்.
ஞாயிறு இரவு திரும்பவும் அதே பஸ், அதே இருக்கையில் பயணித்தோம். சீட் சரி செய்யப் படவில்லை. டிரைவரும், செல்போனில் காண்டாக்ட் செய்த ஓனரும் சரியான பதில் தரவில்லை. திரும்பி வரும் போதும் இரவு 1030க்கு திருச்சியில் எடுத்து, காலை 8 மணிக்கு சென்னையில் இறக்கி விட்டனர்.
போதுமடா இந்த பிழைப்பு என்றாகி விட்டது. திரும்பவும் வாழ்க்கையில் SSCM டிராவல்ஸ் ஏறக்கூடாது என முடிவு செய்தேன். ரெட் பஸ் வெப்சைட்டில் மோசமான ரிவியூ கமெண்ட்டுகளை பதிவு செய்தேன். இதற்கு கன்ஸூயுமர் கோர்ட்டில் புகார் செய்யலாமா, அப்படி செய்தால் சீட் சரியில்லாததற்கு என்ன ஆதாரம் காட்ட முடியும் என்று சொல்லுங்களேன், எங்களிடம் டிக்கெட் பிரிண்டவுட் மட்டுமே இருக்கிறது.
15 comments:
கண்டிப்பா நேங்க பருந் இருந்த (?) புகார் புத்தகத்தில் புகரை பதிவு செய்திருந்தால் நுஅர்வூர் மன்றத்தில் புகார் கொடுக்கலாம்
தனியார் பேருந்திலேயே இந்த நிலையா?ம்ம்ம்ஹும்
கார்த்தி, ரொம்ப ஈஸியான வழி!!
இரண்டுமுறை போன் பண்ணி "பஸ் டயருக்கு ஆணி வச்சிருவேன்" அப்படீன்னு மிரட்டுனா எல்லாத்தையும் சரி பண்ணீருவாங்க.
அப்படியும் செய்யாட்டி ஆணியை வச்சிருங்க.
ஆனால் சீட் பிரச்சினைய மட்டும் சொல்லி மிரட்டுனா நீங்க மாட்டிக்க சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை!!!!
முன்பு ஊர்ல இருந்தப்போ இதுமாதிரி செய்து ஜெயிச்சிருக்கோம்.
இது கொஞ்சம் தப்பான வழிதான், ஆனால் சிலரை தப்பான வழியிலதான் திருத்த முடியும்.
கார்த்தி,
காலை நேரங்களில் திருச்சி செல்லும் SETC பேருந்து பெரும்பாலும் காலியாகவே இருக்கும்.
ஆனால் பலருக்கு காலை வேளையில் பயண் செய்ய இயலாது.
இதுதான் ஜன நாயக நாடு
தலைவா நான் ஒரு SETCயில் சென்று இரண்டு ஆண்டு ஆகிறது, நான் அதற்க்கு முதலில் அதில் தான் செல்வேன் ... ஒரு வாட்டி முட்ட பூச்சி தொல்ல தாங்கல , கேட்டா கொடுகுற 2000 காசு அதிகாரிகள் அமுக்கிடாங்க நாங்க எப்படி மருந்து அடிக்கிறது என்று கண்டக்டர் சொல்லிடார்... என்ன செய்ய...
புகார் எல்லாம் கொடுத்து ஒரு மண்ணும் ஆகல
பிறகு பஸ் சென்னையை சுற்றி வேளச்சேரி சென்றது. அங்கிருந்து மேடவாக்கம் வழியே தாம்பரம் செல்ல 12 மணியாகி விட்டது. //
ஐயோ பாவம் இது ரொம்ப கொடுமை தலைவரே
DHANS, பேருந்தில் புகார் புத்தகமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லைங்க.. அப்படி இருந்தாலும் நாங்க எழுதிய புகாரை வைத்திருப்பாங்களா, என்ன?
<<>>
அத்திரி,
ஆமாங்க, ஒருசில பேருந்துகள்ளதான் இப்படி, பெரும்பாலான பஸ்கள் தரமானதா இருக்கு..
<<>>
பெயரில்லா,
ஆணி வைக்கனுமா?? அடப்போங்க.. சட்டப்படி ஏதாவது வழி சொல்லுங்க..
:-))
<<>>
அரவிந்தன்,
காலையில் சென்றால் ஒருநாளை பிரயாணமே சாப்பிட்டு விடுமே :-((
<<>>
நசரேயன்,
ஜனநாயக நாட்டில்தான் இப்படி நடக்கிறது.. புகார் சொல்லவும் முடிகிறது :-))
<<>>
sureஷ்,
மூட்டைப்பூச்சி இல்லாத SETC பஸ்ஸே கிடையாதுங்க :-))
<<>>
jackiesekar,
ஆமாங்க.. எனக்கு அப்படியே அழுகை வந்துட்டு :-))))
சட்டப்படி போனால்லாம் ஒரு பருப்பும் வேகாது.
யாரு சட்டத்துக்கு பயப்பிடுறாங்க?? முதல்வரே சட்டத்தை மீறுவது எப்படின்னு மகனை வச்சு மதுர முழுக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறாரு.
இந்தமுறை சீட்டுதான் வேலைசெய்யல, அடுத்தமுறை பஸ்ஸே வேலை செய்யாமல் நடுவழியில நிற்கக்கூடும்!!
இதே திருச்சி சென்னை ரூட்டில், பஸ்ஸில் மழையில் நனைந்த படியும், புஷ் பேக் இல்லாமலும், அழுக்கு சீட் கவருடனும் பயணித்த கொடூர அனுபவம் உண்டு எனக்கு :(
we faced this problem for 2 years as we donot have train facillity from chennai to mayiladuthurai...
some work is going on till now..
eppo US la erukkaradhunaala thapichom.. thirumba oorukuu porathukulla sari aayidumnu nenakaren..
Ur blogs are nice.. :)
Monica. (Aparna's Cousin)
நல்ல வேளை இப்பவெல்லாம் இணையத்தில் ஒப்பாரி வச்சு வேதனையை பங்கு போட்டுக்க முடியுது.
அந்தக் காலத்திலே நாங்க இதைக் கூட சொல்லாமல்ல போய் வந்துக் கிட்டிருந்தோம்.
நொந்தாச்சா?
பெயரில்லா,
என்னங்க ரொம்ப கோபப் படுறீங்க.. இவ்ளோ கோபம் கூடாதுங்க.. சட்டப்படி என்ன செய்யலாமோ அதைச் செய்வோம்..
<<>>
ஆகாயநதி,
ஓ.. நீங்களும் இம்மாதிரி கொடுமையை அனுபவித்து இருக்கீங்களா?? ஏதாவது புகார் கொடுத்தீங்களா??
<<>>
மோனிகா,
இப்பவும் சென்னை - குடந்தை ட்ரெயின் மெயின்லைன் வேலை முடிந்தபாடில்லை.. இன்னமும் எத்தனை வருடங்களாகுமோ??? இவ்வேலை முடிந்தால் பஸ்ஸில் கூட்டம் குறையும்..
எனது ப்ளாக் குறித்த உங்க பாராட்டுக்க்கு ரொம்ப நன்றி.. நேரமிருந்தா பழைய பதிவுகளை படித்துப் பாருங்கள்.. திருச்சியை பற்றியும், கும்பகோணத்தை பற்றியும் சில பதிவுகள் எழுதியிருக்கேன்..
<<>>>
ரங்குடு,
ஆமாங்க, வேதனையை பகிர்ந்து கொண்டாலே கொஞ்சம் குறைந்து விடும்.. :-)
<<>>
புகழினி,
:-))
Post a Comment