Wednesday, April 04, 2007

கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு?





முதலில் அரையிறுதிக்கு தகுதிபெறக் கூடிய அணிகளின் வாய்ப்புகளைப் பற்றி பார்ப்போம்.

சூப்பர்-8க்கு தகுதி பெற்ற அணிகளில் அயர்லாந்து, பங்களாதேஷ் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எனவே இவைகளை ஒதுக்கி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. தற்போதைய ஃபார்மில் இதுவும் வெளியேறி விடும்.இங்கிலாந்தும் சுமாராகத்தான் காட்சி அளிக்கிறது. அயர்லாந்துடன் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. எனவே இதற்கும் வாய்ப்புகள் குறைவு.

எனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியுசிலாந்து, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். இவற்றில் முதலிடம் பெறும் அணி நான்காமிடம் பெறும் அணியிடமும், இரண்டாமிடம் பெறும் அணி மூன்றாமிடம் பெறும் அணியிடமும் மோதும். தற்போதைய நிலைமையின் படி, இரு அரையிறுதிகளிலும் தென்னாப்ரிக்கா - இலங்கை (A2 vs A3), ஆஸ்திரேலியா - நியுசிலாந்து (A1 vs A4) மோதுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.


இவற்றில் வென்று இறுதிப் போட்டியில் மோதுவதற்கு ஆஸ்திரேலியா & தென்னாப்ரிக்கா அணிகள் தயாராக உள்ளன. வாய்ப்பும், ஃபார்மும் கூட இவ்விரண்டு அணிகளுக்கே உள்ளன. ஆனாலும் அந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அவையே முன்னேறலாம். இதெல்லாம்
சரி, இறுதிப்போட்டியில் யார் வெல்வார் என்று கேட்கிறீர்களா? தென்னாப்ரிக்கா வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை, பொறுத்திருந்து பார்ப்போமே!!

இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரர் ஆவதற்கான வாய்ப்பு மேத்யூ ஹேடன், மெக்ராத், ஜெயசூர்யா, மாலிங்கா ஆகிய வீரர்களுக்கு அதிகமுள்ளது! இவ்வீரர்களில் முதல் மூவர் 30 வயதை தாண்டிய அனுபவ வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உங்கள் சாய்ஸ் (உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி, சிறந்த வீரர்) என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

5 comments:

குசும்பன் said...

என் ஆசை ஆஸ்திரேலியாவை தவிர வேறு
எந்த நாடு வாங்கினாலும் சந்தோசபடுவேன்.

எல்லாம் சரி இந்த புள்ளி விபரம் எதற்க்காக? "முதல் மூவர் 30 வயதை தாண்டிய அனுபவ வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது."

இந்திய டீம் தாத்தாங்களுக்கா?

-L-L-D-a-s-u said...

இலங்கை / நீயூஸி

ஹேடன்

Naufal MQ said...

ஆஸிதான் இம்முறையும் சாம்பியன்.

ஜே கே | J K said...

நானும் ஆஸியைத்தவிர எந்த அணி வாங்கினாலும் மகிழ்ச்சியடைவேன்.

பழூர் கார்த்தி said...

குசும்பன்,

//என் ஆசை ஆஸ்திரேலியாவை தவிர வேறு எந்த நாடு வாங்கினாலும் சந்தோசபடுவேன். //

நீங்களும், நானும் மட்டுமல்ல, நிறைய பேருக்கு ஆஸ்திரேலியா தோற்றால் மகிழ்ச்சிதான்.. அது ஏன் என்று விளக்கமாக ஆராய வேண்டும்.. ஒரு வேளை ஆஸ்திரேலிய அணியின் அரோகன்ஸ் அப்ரோச்தான் காரணமாக இருக்குமோ ??

<<>>

"எல்லாம் சரி இந்த புள்ளி விபரம் எதற்க்காக? "முதல் மூவர் 30 வயதை தாண்டிய அனுபவ வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது."

இந்திய டீம் தாத்தாங்களுக்கா? "

சத்தம் போடாதீங்க, அப்புறம் டெண்டுல்கர் இதுக்கும் அழுவாரு :-)))

<<>>

எல் எல் தாசு,

அதென்ன பேருல தாரு அடிச்சி வச்சிருக்கீங்க (போட்டோவில) ?? :-))

<<>>

f. பவுலர்,

வெயிட் பண்ணிப் பார்ப்போம் :-))

<<>>

jk,

அப்படிப் போடுங்க...