
நேற்று நண்பர் ஒருவரிடமிருந்து செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது "I m going 2 TRY this wknd". நண்பர் திருச்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் இந்த வார இறுதியில் திருச்சிக்கு செல்கிறார் என்பதை உடனே புரிந்து கொள்ள முடிந்தது.
திருச்சிராப்பள்ளி என்பதே திருச்சியின் முழுப்பெயர். பழங்காலத்தில் திரு. சிராப்பள்ளி என்று பழக்கத்தில் இருந்து வந்தது, காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என்று மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி என்னும் பெயர், எப்போது திருச்சி என சுருக்கமாக வழங்க ஆரம்பிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை பேருந்துகளிலும், மற்ற பெயர் பலகைகளிலும் எழுதுவதற்கு சுலபமாக கடந்த 40 - 50 வருடங்களுக்குள்ளாகவே இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம்.
திருச்சியின் பெயர் மட்டுமல்லாமல், தஞ்சாவூர் என்பது தஞ்சை என்றும், கும்பகோணம் என்பது குடந்தை என்றும், திருநெல்வேலி என்று நெல்லை என்றும், பாண்டிச்சேரி என்பது பாண்டி என்றும் அழகாக சுருக்கப்பட்டுள்ளன. எனக்கென்னவோ சுருக்கப்பட்டுள்ள பெயர்களை விட, உண்மையான முழுப்பெயர்களே கவர்ச்சியாக உள்ளதாக உணறுகின்றேன்.
இப்போது இணைய அரட்டை, செல்பேசி குறுஞ்செய்திகளெல்லாம் வந்துவிட்ட பிறகு திருச்சி என்பதைக் கூட TRY என்றோ try. என்றோ இன்னும் சுருக்கி பயன் படுத்துகிறார்கள். ஒருவேளை எதிர்காலங்களில் இதுவும் கூட இன்னும் சுருங்கி திருச்சியை 'T' அல்லது 'தி' என்று பயன் படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்(how are you) என்பதை h r u? என்று கேட்கிறார்கள். இதை விடவும் இணைய அரட்டைகளில் ASL என்னும் அறிமுகம் செய்து கொள்ளும் வார்த்தை பிரபலம். ASL என்றால் Age, Sex & Location.
குறுஞ்செய்திகளில் சென்னை என்பது CHN என குறிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்தால் (இன்னமும் ஏன் வரவில்லை?) சென்னையை எவ்வாறு குறிப்பிடுவார்கள் என்று யோசித்தால் விடை புலப்பட வில்லை. 'செ' என்று குறிப்பிட முடியுமா? உதாரணத்திற்கு ஜெயங்கொண்டம் என்ற ஊரின் பெயரை 'ஜெ' என்று சொல்ல முடியுமா? ஜெ என்றால் இன்று வரை ஜெயலலிதாவை மட்டுமல்லவா குறிக்கிறது.
திருச்சியில் தில்லைநகர் என்ற இடத்தின் பெயரை தி.நகர் என்று சில பேருந்து பலகைகளில் பார்க்கலாம். இதுவே சென்னையில் தி.நகர் என்றால் தியாகராஜ நகர் என புரிந்து கொள்ள வேண்டும். மேலும் திருச்சியில் வயலூர், புத்தூர், உறையூர், திருவரங்கம் போன்றவற்றை எப்படி சுருக்க முடியும் என்று தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும், தி என்றால் திருச்சி என்பது உடனே சாத்தியமாக வேண்டும் என்றால் ரஜினியின் அடுத்த படத்தில் ஒரு பாட்டு வைத்து விடலாம் 'தி என்றால் திருச்சி... ர என்றால் ரஜினி...', எஸ்பிபி மூச்சு விடாமல் பாடுவது ஒரு சரணம் வைத்து விட்டால் அப்புறம் கேட்கவா வேண்டும். உலகம் முழுக்க தி என்றால் திருச்சி என்று தெரிந்து விடும், என்ன சொல்கிறீர்கள்?
9 comments:
திருச்சியின் ஆரம்ப கால பெயர் திரிசிரபுரம் என்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். திரிசிரபுரம்தான் ஆங்கிலேயர்களால் திருசினாபோலி ஆகி திருச்சிராப்பள்ளியாகி மருவி திருச்சியாகி இப்போது உங்களால் தி என ...
இனி 'தி'யை எப்படி சுருக்குவதோ என நாளை...
தகவலுக்கு மிக்க நன்றி சுல்தான் அவர்களே !
//இனி 'தி'யை எப்படி சுருக்குவதோ என நாளை... //
ஆமாம், இதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது :-)
//
எதிர்காலத்தில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்தால் (இன்னமும் ஏன் வரவில்லை?)
//
இங்கே சென்று கொஞ்சம் பாருங்கள்
http://sellinam.blogspot.com/2005/01/sellinam-worlds-first-tamil-sms.html
நன்றி மருதநாயகம்,
தாங்கள் அளித்துள்ள சுட்டியை சென்று படித்தேன்! மகிழ்ச்சி!
ஆனாலும் இந்த மென்பொருளை எப்படி நமது செல்பேசியில் இறக்கிக் கொள்வது / பொருத்திக் கொள்வது, எப்படி பயன்படுத்துவது, எங்கே வாங்குவது போன்ற விவரங்கள் இல்லையே, தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன், நன்றி !!
http://www.murasu.com/mobile/onenov2004.html
கார்த்தி! இங்கே சென்று பார்க்கவும். சில காலம் முன்பு வரை மிக பரபரப்பாக இயங்கி வந்த இவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. தெரிந்தால் கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்
மிக்க நன்றி மருதநாயகம்!!
தமிழில் குறுஞ்செய்திகள் இப்போது நடைமுறையில் உள்ளதா என்று யாராவது கூறுங்களேன்....
But as far as I know, The name Trichirappalli came from the name of the rock in the city. It was called 'Chiraa kundru'. Later Samana pepople built a 'palli' (similar to a 'madam'. For Samanar's it is called palli). Then it was called Chirap palli. (You can still find the palli in the rockfort). When the shiva temple was built on that rock, to honour it, thiru was added.. so finally it came to "Thiru Chira Palli"..
If possible refer the book, "Aatrangaraiyinile" by RA.Pi. Sethupillai.. You can find lot more interesting stories.. It is a very old book.
Bee'morgan
//But as far as I know, The name Trichirappalli came from the name of the rock in the city//
இதனை அரைகுறையாக ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும், விரிவாக விளக்கியதற்கு நன்றி!!
Post a Comment