:-)))o
தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!
:-)))o
அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்
<<<>>>>
தீபாவளி சம்பந்தமாய் வந்த பெரும்பாலான இணைய இடுகைகளில் சென்று பின்னூட்டம் இட்டாகி விட்டது. நண்பர்களுக்கெல்லாம் மின்னஞ்சலிலும், செல்பேசி குறுஞ்செய்திகளிலும் வாழ்த்து அனுப்பி விட்டோம். உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாயிற்று. இருந்தாலும் எம் போன்ற கவிஞர்களுக்கு(?) அழகு தீபாவளியை ஓர் கவிதையுடன் கொண்டாடுவதே! இதோ....
<<<>>>>
புத்தம்புது ஆடைகள்,
விதவிதமான திண்பண்டங்கள்,
வீடுகொள்ளா உறவினர்கள்,
பயமுறுத்தும் அதே சமயத்தில்
ஆர்வமூட்டும் வெடிகள்,
வானொலி செய்திகளில் வரும்
பிரபலங்களின் வாழ்த்துகள்,
தெருமுழுக்க சிதறி கிடக்கும்
பட்டாசு காகிதங்கள்,
காற்றில் மிதந்து வரும்
வெடிவாசனையுடன் கூடிய புகை,
பரவசமூட்டும் பண்டிகை
கொண்டாடங்கள்...
இவையனைத்தும் இல்லாமல்
மடிக்கணினியில் உலாவும் இணையம்,
கைத்தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள்,
தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள்,
அடுக்குமாடி அண்டைவீட்டாரின் 'ஹேப்பி திவாளி',
மெக்டொனால்ட்ஸின் பிஸ்ஸா
என்று கழியும் எங்களுக்கு
இத்தீபாவளி திருநாள்....
இருந்தாலும் அடுத்த தீபாவளியை
எதிர்நோக்கி ஆர்வமாய் காத்திருப்போம் !!!!
<<<>>>>
தீபாவளியை ஊருக்கு சென்று வீட்டோடு கொண்டாட இயலாத, எம் போன்ற எண்ணற்ற பேச்சிலர் நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் !!
<<<>>>>
8 comments:
சோம்பேறி பையன், சென்டிமென்டலாக தாக்கிவிட்டீர்களே! புனெயிலிருந்து நவிமும்பை எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா ? நாம் சேர்ந்து கொண்டாடுவோம்.
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
நண்பர்களே, வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி !!
***
மணியன்,
//புனெயிலிருந்து நவிமும்பை எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா ? நாம் சேர்ந்து கொண்டாடுவோம். //
அழைப்பிற்கு மிக்க நன்றி !!
உங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது, வேறுசில திட்டங்கள் இருப்பதால் எம்மால் வர இயலாது.. மீண்டும் நன்றி & வாழ்த்துக்கள் !!
***
வேந்தன்,
ஒன்றிற்கு இருமுறையாய்
வந்திருக்கும் உங்கள் வாழ்த்துகள்
மேட்ரிக்ஸ் பட சண்டைக் காட்சிபோல்
பல கோணங்களில் எம்மை மகிழ்விக்கிறது :-))) நன்றி !
சுறுசுறுப்புப் பையன் வெகு
ஆனந்தமான தீபாவளி அமைய வாழ்த்துக்கள்.
இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி !!
***
வல்லிசிம்ஹன்,
//சுறுசுறுப்புப் பையன் வெகு
ஆனந்தமான தீபாவளி அமைய வாழ்த்துக்கள். //
சுறுசுறுப்புப் பையன் :-))) !!!
***
Boston Bala,
:->>
***
வைசா,
ஒன்றிற்கு இருமுறையாய்
வந்திருக்கும் உங்கள் வாழ்த்துகள்..
நன்றி !! நன்றி !!
Surusuruppana, somperi paiyana????? :)
Post a Comment