Friday, October 13, 2006

நில், கவனி, யோசி..

"சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளிலிருந்து சமூகம் விடுதலையடைய வேண்டும். இக்குறிக்கோளை அடைய என் உயிரையும் தியாகம் செய்ய தயாரக இருக்கிறேன். மாணவர்களாகிய நீங்களே, நாளைய சமுகத்தை மாற்றப் போகும் தூண்கள், எனவே இத்தகைய வேறுபாடுகளை களைந்து, படிப்பால், உழைப்பால் முன்னேறி வாழ்க்கையில் நீங்கள் வெற்றிநடை போட வாழ்த்துகிறேன் !!" பலத்த கைதட்டல்களுக்கு இடையே மேடைப் பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கினார் முத்துமாணிக்கம்.

முத்துமாணிக்கம் மலைக்கோட்டை மாநகரின் பிரபல தொழிலதிபர். திருச்சி கைலாசபுரம் அருகே பெல் நிறுவனத்தைச் சார்ந்து இயங்கும் ஓர் பெரிய தொழிற்சாலைக்கு சொந்தக்காரர். சில, பல கல்விக்கூடங்களையும் நடத்தி வருகிறார். லயன்ஸ், எக்ஸ்னோரா மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இருக்கிறார். தொண்டு நிறுவனம் ஒன்று, இவருடைய சேவையைப் பாராட்டி 'சமூகக் காவலர்' என்று பட்டம் கூட கொடுத்திருக்கிறது. திருச்சியில் புகழ்பெற்ற ஓர் கல்லூரி ஆண்டுவிழாவில்தான் மேற்கண்டவாறு பேசிவிட்டு அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.

அலுவலகத்தில் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவுடன், காரியதரிசி உள்ளே வந்து "சார், ஷிப்ட் சூப்பர்வைசர் வேலைக்கு இண்டர்வியூ முடிந்து விட்டது, மூன்று பேர் கடைசி லெவல் வரை வந்து இருக்கிறார்கள். நீங்கள் இறுதி இண்டர்வியூ நடத்திவிட்டால் மூவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து விடலாம்..." என்றார்.

முத்துமாணிக்கம் "எனக்கு இப்போ நேரமில்லை, அவங்களைப் பத்திய விபரங்களை கொண்டு வாங்க.." என்றார்.

"...சார்.. அந்த மூணு பேர்ல ஒருத்தன் நம்ப ஜாதி பையன்..." - காரியதரிசி.

"அப்ப, அந்த பையனையே அப்பாயிண்ட் பண்ணிடுங்க.." என்றார் சமூகக் காவலர் முத்துமாணிக்கம் !!

***

தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்தும் அக்டோபர் மாத போட்டிக்கான சிறுகதை.

5 comments:

டிபிஆர்.ஜோசப் said...

ஊருக்குத்தான் உபதேசம்னு கேள்விப்பட்டதில்லையா அந்த கதைதான்..

இங்க ஏறக்குறைய எல்லாருமே அந்த ரகம்தான் சோ.பையன், என்னையும் சேர்த்து..

தருமி said...

ம்ம்ம்...ம்ம்...ம்

ரவி said...

:))))))0

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி !!

***

ஜோசப்,

//ஊருக்குத்தான் உபதேசம்னு கேள்விப்பட்டதில்லையா//

மாற்ற முயற்சிப்போமே :-)

***

தருமி,

//ம்ம்ம்...ம்ம்...ம் //

ஆஹா.. ஓஹோ.. ஆஹா :-))

***

செந்தழல் ரவி,

//:))))))0 //

:-))))))))))))))ooooo

Boston Bala said...

ரொம்ப எளிமைரொம்ப எளிமை : )

என்னால் முடிந்த நாரதர் வேலையை ஆரம்பிக்கிறேன் ; )

கதாபாத்திரத்துக்கு ஏன் 'முத்துமாணிக்கம்' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது? : P
: )