Friday, October 06, 2006

மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்

கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் மீண்டும் நாளையிலிருந்து(அக்-7)ஆரம்பமாகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நாளையிலிருந்து இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. இதற்கான முன்னோட்டமே இந்த இடுகை.

இலங்கை, மேற்கிந்திய தீவுகள், கென்யா & வங்காளதேச அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் இலங்கை & மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்க அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. 2005ல் இந்தியா பிரகாசிக்க காரணமான பதான், தோனி போன்றோரின் ஃபார்ம் கவலை தரும் அம்சம். பந்துவீச்சில் அணி மிகப் பலவீனமாக உள்ளது.

இங்கிலாந்து அணி ப்ளிண்டாப், வான், ஜோன்ஸ் போன்றோர் இல்லாமல் தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. இலங்கை முரளி, வாஸ், ஜெயசூர்யா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்து போட்டி தரும்.

போட்டிகள் அனைத்தும் சோனி-மேக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகின்றன. திருவிழாவுக்கு தயாராகுங்கள்.

கோப்பையை வெல்ல என்னோட சாய்ஸ் ஆஸ்திரேலியாதான், உங்களோட சாய்ஸ் என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க !!!

***

இந்த இடுகை சோம்பேறி பையனின் வலைத்தளத்திலும், கிரிக்கெட் கூட்டுப் பதிவிலும் பதிவிடப்படுகிறது.

10 comments:

ரவி said...

சோம்பேறி...

கிரிக்கெட் முன்னோட்டம் எல்லாம் சரிதான்...அதுக்காக உங்க படத்தை இவ்வளவு கிட்டத்துல எடுத்து போட்டு பச்சப்புள்ளைங்கள பயமுறுத்தனுமா ?

பாருங்க, குழந்தை அழுவுது...

:)))))))))))))))))))

சும்ம்ம்ம்ம்மா...

Prabu Raja said...

India will win

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !!

***

செந்தழல் ரவி,

கோச்சுக்கிடாதீங்க, படத்த சீக்கிரம் மாத்திடுவோம் :-)))))

நம்ம கார்ட்டூனைப் பத்தி ஒன்னும் சொல்லவேயில்லயே

***

பிரபு ராஜா, இந்தியா வின் பண்ணுமா ???? ஆசை, தோசை, அப்பளம், வடை :-)))))))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

on paperல் ஆஸ்திரேலியா பெஸ்ட் டீமாக இருக்கலாம் ஆனால் போட்டி நடப்பது சப் காண்டினெண்ட் பிட்ச்களில் என்பதால் எனக்கென்னவோ இந்தியா பாகிஸ்தான் இல்லை இலங்கை இவற்றிர்கே வாய்ப்புகள் இருப்பதாக தோன்றுகிறது.

வடுவூர் குமார் said...

கொண்டாடுங்க..
இங்க வாய்ப்பு இல்லை.(எனக்கு)

ஆவி அம்மணி said...

என் படத்தை விட உங்க படம் பயம் தருதா?

பழூர் கார்த்தி said...

குமரன் எண்ணம்,

கருத்துக்கு நன்றி...
சப் காண்டினெண்ட் பிட்ச்களிலும் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா நன்றாகவே விளையாடியுள்ளது... இப்போதைய ஃபார்ம் வேறு பயமுறுத்துகிறது :-))

***

வடுவூர் குமார், போட்டோ மாத்திட்டீங்க போலிருக்கே... கலக்குங்க :-)))


//இங்க வாய்ப்பு இல்லை.(எனக்கு) //

எந்த ஊரு உங்களுக்கு ???

***

அமானுஷ்ய ஆவி, பயமுறுத்தாதீங்க....
அழுதுருவேன்...

***

வைசா, தகவலுக்கு நன்றி...
ப்ளிண்டாப் இருந்தாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்புகள் குறைவே...

கார்மேகராஜா said...

சோம்பேறி பையன் எப்பவும் இப்படித்தானோ?

வெல்லப்போவது இந்திய அணிதான். ஏனெனில், கடந்த உலககோப்பை பார்த்தீர்களா? சுத்தமாக பார்ம் இல்லாமல் இருந்த (அதாங்க, நியுசிலந்து போய் 5-2நு மண்ணக்கவ்விட்டு இருந்தாங்கள) அணி திடிரென உத்வேகத்துடன் உலகபோட்டியில் பைனல் வரை போனது ஞாபகம் இருக்கா?

கதிர் said...

santhEkamee illaama Australia than veRRi!

பழூர் கார்த்தி said...

வைசா, கருத்திற்கு நன்றி, home advantage இருந்தாலும் இந்தியாவிற்கு வாய்ப்புகள் குறைவே, பார்ப்போம் எப்படி விளையாடுகிறார்கள் என்று..

***
karmegaraja,

//வெல்லப்போவது இந்திய அணிதான். //

எனக்கும் இப்படிச் சொல்ல ஆசைதான், ஆனால் நிலவரம் கலவரமாக உள்ளது :-)))
இந்திய அணி வென்றால் மகிழ்ச்சியே, வாழ்த்துக்கள் அணிக்கு :-)))

***

தம்பி, ஆஸ்திரேலியாவுக்கே நிறைய வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி..
உங்களுக்காக இத்தகவல், நமது க்ரைம் திரில்லர் இம்மாத போட்டியிலும் இடம்பெற போவதில்லை..