Tuesday, September 19, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 61 to 65

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60


61. லிஃப்ட் கொடுத்தவர்கள் - சிறுகதை - அஹமது சுபைர்

நல்ல வேலை கிடைக்க உதவி செய்த கல்லூரி நண்பனையும், நேர்முகத் தேர்வுக்கு லிப்ட் கொடுத்த அறிமுகமில்லாதவரையும் மறக்காத அனுபவக் கதை. "..போடா லூஸு...அவன் முகத்தில முழிச்சதால தான் நான் டெஸ்ட்ல பாசானேன். அவன் முகத்தில முழிச்சாதான் இன்டெர்வியூ நல்லா பண்ண முடியும்..." போன்ற வரிகள் சிரிக்க வைக்கின்றன. கதையின் பின்குறிப்பு மனதைத் தொடுகிறது. சிறுகதை, நெகிழ்வு !!

மதிப்பெண் : 75 / 100

*****

62. ஒரு தலைப்புச் செய்தி - சிறுகதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

நக்சலைட் ஒருவனின் நாசவேலைக்கான பயணத்தையும், அவன் மாட்டிக் கொள்வதையும் பற்றிய கதை. வித்தியாசமான கதைக்களம். இருந்தாலும் சற்று அலுப்பு தட்டுகிறது. துரவர், சீருந்து போன்ற தூய தமிழ்(?) வார்த்தைகள் ரசிக்கவும், யோசிக்கவும் வைக்கின்றன. கடைசி வரி நச். சிறுகதை, வித்தியாசம் !!

மதிப்பெண் : 78 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

...இதற்கு முதல் பரிசு கிடைக்கவில்லையெனில்....போட்டி நடுவர்களைச் சந்தேகிப்பதைத் தவிர வேறு வழியில்லை! என் வோட்டு நிச்சயம்!

- SK

*****


63. லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு? - நிகழ்வு - barath

பாலியல் தொழிலாளி ஒருவளின் குழந்த வரைந்த ஓவியத்தையும், அவர்களின் வாழ்க்கையையும் பற்றிய அற்புதமான படைப்பு. படைப்பின் கருத்தும், எழுதிப்பட்ட விதமும் நெகிழ்வு. "இவர்களில் எத்தனைபேரின் குழந்தைகளுக்கு தந்தை என்ற உறவு கிடைத்திருக்கிறது என்பது தெரியவில்லை." போன்ற வரிகள் சுடுகின்றன. இக்குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்க சமூகம் உதவ வேண்டுகிறார். நிகழ்வு, சமூக அக்கறை !!

மதிப்பெண் : 85 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கட்டாயம் வாழ்க்கையில் லிப்ட் கிடைக்க வேண்டியது இவர்களுக்குதான். பெரியோர் செய்யும் தவறின் தண்டணையை இந்த பிஞ்சுகள் சுமக்க வேண்டியுள்ளது மிக கொடுமை.

- அனுசுயா

*****


64. மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் - சிறுகதை - சரவ்

இரு நண்பர்கள் ஓரிடத்தில் (எங்கே என்பது சஸ்பென்ஸ்) சந்தித்து கொள்கிறார்கள். அவர்களின் உரையாடல், அவர்களில் ஒருவர் எப்படி அங்கே வந்தார் என்பதை சுவாரஸ்யமாக(?) சொல்லியிருக்கிறார். பின்புலத்தில் ஒரு ஜொள்ளான விபத்து. க்ளைமேக்ஸ் கலக்கல். படித்ததும், திரும்பவும் ஒருமுறை கதையை படிக்க வைக்கிறார் (வேறு புரிதலோடு). "ஜானத்தன், ‘அதுசரி மாப்ள, நீ எப்டிடா இங்க?.." போன்றவற்றை இரண்டாம் முறையில் நிறையவே ரசிக்கலாம். சிறுகதை, ஜொள் !!

மதிப்பெண் : 80/ 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஒரு த்ரில்லர் கதை எழுதலாம்-னு ஆரம்பிச்சேன். கொஞ்சம் ஜொள்ளரா ஆய்டுச்சு!!

- சரவ்

*****


65. மொழிபெயர்ப்பு - சிறுகதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

தூய தமிழ் வார்த்தைகளுடன் எளிமையான ஓர் கதை. சேவைப் பொறியாளனான அசோகன், ஓரிரவில் சந்திக்கும் சம்பவம்தான் கதை. "..மீண்டும் அந்த பூனைக் குரல் வந்தது. இல்லை! அது பூனை இல்லை!!அசோகனுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன." போன்ற வரிகள் திரில்லை (பயத்தை) அதிகமாக்குகின்றன. எதிர்பாராத, யதார்த்தமான க்ளைமேக்ஸ். சிறுகதை, உருக்கம் !!

மதிப்பெண் : 74 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

2 comments:

ஓகை said...

ஒரு தலைப்புச் செய்தி -// வித்தியாசமான கதைக்களம். இருந்தாலும் சற்று அலுப்பு தட்டுகிறது.//

அலுப்பா தட்டுகிறது? நான் விறுவிறுப்பாக எழுத முயற்சித்தேன். அடுத்த கதையில் இன்னும் முயல்கிறேன்.

// துரவர், சீருந்து போன்ற தூய தமிழ்(?) வார்த்தைகள் ரசிக்கவும், யோசிக்கவும் வைக்கின்றன.//

தமிழை உணர்ந்து தனித்து குறிப்பிட்டதற்கு நன்றி.

// மொழிபெயர்ப்பு - தூய தமிழ் வார்த்தைகளுடன் எளிமையான ஓர் கதை.//

மீண்டும் தமிழை குறிப்பிட்டுக் கூறியதற்கு நன்றி.

பரத் said...

விமர்சனத்திற்கு மிக்க நன்றி