Thursday, September 07, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 6 to 10

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள் 1 to 5

6. ஐந்து வெண்பாக்கள் - வெண்பா - அபுல் கலாம் ஆசாத்

மீண்டுமொரு வெண்பா படைப்பு, சென்ற படைப்பின் ஆங்கிலக் கலப்பிற்காக தூய தமிழில் புகுந்து விளையாடி இருக்கிறார். சில வாக்கியங்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், ஒருவாறு ஊகித்து படிக்க வைக்கிறார்.
"வல்லமை பெற்றிருந்தும் வாயடைத் தேயிருக்கும்
நல்லவ ராலேதும் நன்மையுண்டோ - கொல்லுலையாய்
நெஞ்சக் கனலெழுப்பி நேர்மைக்கு வாள்பிடிக்க
கொஞ்சம் கிடைக்காதோ கோல் !" போன்ற வெண்பாக்கள் மூலம் சிந்திக்கவும் வைக்கிறார். வெண்பா, தேனிசைத் தமிழில் அமிழ்ந்த இனிப்புப்பா !!

மதிப்பெண் : 73 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன். முதல் வாக்கு என்னுடையதுதான் உங்களுக்கு.பெரியவங்க சொன்னா கேட்டுக்கணூமா? எளக்கியவாதியா ஆவுறதா 'எண்ணமே' இல்லையா?

- ஆசிப் மீரான்

*****

7. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - கவிதை - சேவியர்

எளிமையான வார்த்தைகளைப் போட்டு இயல்பாக செதுக்கியிருக்கிறார் கவிதையை. சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி அழகூட்டுகிறார். பயண நடுவில் லிப்ட் கேட்பவர்கள் பற்றியும், லிப்ட் கொடுக்க நினைப்பவரின் நியாயமான தயங்கல்களையும் தெளித்திருக்கிறார்.
"தேவர்களும்
அசுரர்களும்
ஒரே சீருடையில் அலையும்
நகரத்துச் சாலைகளில்" போன்ற வரிகளின் மூலம் ரசிக்க வைக்கிறார். கவிதை, இயல்பு !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

nall iruku kadaisi paravai innum koormaiyana varthaigalal alangarithaal nalaa irukum

- karthick

*****

8. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - demigod

கலக்கலான கிரைம் கதை. "ஆள் அரவம் இல்லாத, அடர்ந்த மரங்களை இரு புறமும் கொண்ட நேர் கோட்டுச் சாலை. இரவின் வீரியமான குளிர்பனி திரையைக் கிழித்துக் கொண்டு, சீரான வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது அந்த அம்பாசிடர் கார்" ஆரம்பத்திலேயே ஆர்வத்தை தூண்டுகிறார். வர்ணணைகளும், உரையாடல்களும் சமச்சீராக பரவியிருக்கின்றன. "பேய் பிசாசு எல்லாம் இருக்கோ இல்லையோ? ஆனா எல்லாருக்கும் பயம்னு ஒன்னு இருக்கிறது உண்மை. என்ன, எந்த ஒரு கட்டத்துல எல்லை மீறி பயத்தை வெளிக்காட்டுறாங்கறதுல மட்டும்தான் மனுசங்க வேறுபடுறாங்க.” என்று நடுநடுவே தத்துவத்தையும் தெளிக்கிறார். க்ளைமேக்ஸ் எதிர்பாராத நகைச்சுவை. ஆங்கிலப் படங்கள் முடிவது போல், முடிவில் ஒரு ட்விஸ்ட்
வைக்கிறார். ஆக மொத்தத்தில் சிறுகதை, கிரைம் சிறப்பு !

மதிப்பெண் : 87 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

Good one! Good pace to narrate this witty tale.The title could have been different though. Best of Luck.

- Harish

*****

9. கொஞ்சம் தூக்கி விடலாம்! - சமூக ஆலோசனை - யதா

மிகவும் அருமையான நோக்கமுடைய படைப்பு. சமூக முன்னேற்றத்துக்காக உதவும் மனமுள்ளவர்களுக்கு, உதவும் வழிமுறைகளை, சிற்சிறு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சில சமூகத்தொண்டு நிறுவனங்களின் வலை முகவரிகளையும் வெளியிட்டு இருக்கிறார். யதார்த்தமான சில அறிவுரைகளையும் "உதா: உங்களூர் பள்ளிக்கு ட்யூப் லைப் போடத்தேவையிருக்கலாம். (ட்யூப் லைட் வெளிச்சம் தெரியாத அளவுக்கு பெயிண்ட் அடிக்கிற வேலையெல்லாம் வேணாமே ப்ளீஸ்!)" வழங்கி இருக்கிறார். போட்டிகளைத் தாண்டி எல்லாரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய படிப்பு,இந்த படைப்பு !!

மதிப்பெண் : 93 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

Nalla Ennam Ungalukku. Nalla PAthivum kooda. Uthava ninaippavargalukku oru thoondugol thaan ungal pathivu.

- மா.கலை அரசன்

*****

10. லிஃப்டாவது கிடைக்குமே! - சமூக நிகழ்வு - ஜி.கௌதம்

அரவாணிகள் சம்பந்தமான ஓர் பயங்கர நிஜ நிகழ்வை நேர்த்தியாக விவரித்திருக்கிறார். காதலர்களின் பார்வையில் ஆரம்பித்து ""ஆபிஸ்ல கொஞ்சம் வேலையிருக்கு" என்றாள் அவள். "கொஞ்சற வேலையா?" என நான்" போன்ற உரையாடல்களின் மூலம் நகைச்சுவைக் கதையோ/நிகழ்வோ என நினைக்க வைக்கிறார். போகப்போக படைப்பில் சூடு பிடிக்கிறது, திகில் தாண்டவமாடுகிறது. "குடிசையின் நட்ட நடுவே ஆறடி நீளத்துக்கு ஆழமாக
வெட்டப் பட்டிருந்த குழியை அப்போதுதான் கவனித்தேன். தோண்டிக் குவித்த மண்மேடு பீதி கொடுத்தது" போன்ற வர்ணனைகள் மூலம் அமானுஷ்ய சூழலுக்கு வாசகரை இழுத்துச் செல்கிறார். சற்று பிசகினாலும் ஆபாச முத்திரை குத்தப்பட்டு விடக்கூடிய நிகழ்வில் தேவைக்கதிகமான வர்ணனைகளோ, உரையாடல்களோ இல்லாமல், அடக்கி வாசிக்கிறார். நிகழ்வின் பயங்கரத்தை வாசகருக்கு எளிமையாக உணர்த்துகிறார். "எங்களுக்கு முறையா ஒரு அங்கீகாரம் கொடுத்து மனுஷியா மதிக்காத இந்த கவர்ன்மென்ட்டத்தான் கேட்கணும். " என்பதன் மூலம் அரவாணிகளை அங்கீகரிக்காமல் ஒதுக்கி வைக்கும் சமூகத்தையும், அரசாங்கத்தையும் லேசாக சாடியிருக்கிறார். மொத்தத்தில் 'லிஃப்டாவது கிடைக்குமே', திகில் அக்கறை !!

மதிப்பெண் : 90 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

பலமான இதயமுள்ளவர்களே அதிர்ச்சியடையும் சேதி இது. கடைசி லிப்ட் மட்டும் எனக்கு போட்டிக்காக இடைச்சொருகலாக படுகிறது. இயல்பான நடைக்கும் சமூக அவலத்தை எழுத முனைந்ததற்கும் என் வாழ்த்துக்கள்

- Vignesh

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும் படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

14 comments:

பழூர் கார்த்தி said...

சிறு மாற்றங்களுடன், இந்த இடுகை மீள்பதிவு செய்யப் பட்டுள்ளது.

***

யாராவது எதுனா பின்னூட்டம் போடுங்கப்பா.. பதிவு போட்டு மூனு மணிநேரம் ஆகியும் ஒத்த பின்னூட்டம் கூட வல்ல, மனசு வலிக்குதுப்பா :-)))

ILA (a) இளா said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

dondu(#11168674346665545885) said...

நல்ல முயற்சி சோம்பேறி பையன் அவர்களே. அரவாணி கதைக்கு மட்டும் பின்னூட்டமிட்டேன். மற்றப்படி வெண்பாக்கள் ஆகியவை எனக்கு ரொம்ப தூரத்தில் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

சுவாமிநாதன்,

பின்னூட்டக் கல்லாவில் கவலையோடு படும் வருத்தத்திற்கு சிறு மருந்தாக இந்தப் பின்னூட்டம்.

ஏதோ உங்க ரிவ்யூவால சில புதிய படைப்புக்களைப் சோம்பேறித்தனம் தாண்டி படிக்க முடிந்தது.

புது முயற்சி. அப்பப்ப மறுமொழிந்து மனவலி நீக்க நல்ல உள்ளங்கள் தமிழ் மனத்தில் ஆள் இருக்காங்க. பின்னூட்டக் கவலையை விடுங்க.

yata said...

சோம்பேறி பையன். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

வழக்கம்போல நிறைய பதிவுகள் இருக்கிறது. உங்கள் விமர்சனங்களைத்தான் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்கள். :-)

மறுமொழிகள் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து உங்கள் நல்ல முயற்சியை செய்யுங்கள்.

அன்புடன்,

டிபிஆர்.ஜோசப் said...

சோ.பையன் பின்னூட்டம் வரலையேன்னு கலங்காதீங்க. பின்னூட்டம் வந்தால்தான் மக்கள் வாசிக்கிறார்களென்று அர்த்தமல்ல. இது அவசர உலகம்.. அப்படித்தான் இருக்கும். இங்கு சர்ச்சைக்குரிய பதிவுகளுக்குத்தான் பின்னூட்டங்கள் வரும். பின்னூட்டம் வேண்டுமென்றால் ஜாதி, மத, மொழி, கலாச்சாரத்திற்கு எதிராக வில்லங்கமாய் எதையாவது எழுதுங்க. நாலு அடியும் கிடைக்கும். நாலு பாராட்டும் கிடைக்கும். தரமான பதிவுகளைத்தான் தருவேன் என்று அடம் பிடித்தால் இதுதான் கதி. அதுக்குன்னு சோர்ந்திராதீங்க. பதிவ போட்டுட்டு மறந்துருங்க.

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி !!

***

இளா, நன்றி !

***

டோண்டு, நிறைய நல்ல படைப்புகள் வந்துள்ளன, நேரமிருக்கும்போது படியுங்கள் !

***

ஹரிஹரன்,
//ஏதோ உங்க ரிவ்யூவால சில புதிய படைப்புக்களைப் சோம்பேறித்தனம் தாண்டி படிக்க முடிந்தது.//

மகிழ்ச்சி!

***

யதா, நன்றி
//உங்கள் விமர்சனங்களைத்தான் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்கள். :-) //

இதுல உள்குத்து எதுவும்
இல்லையே :-))

***

ஜோசப்,
//பின்னூட்டம் வந்தால்தான் மக்கள் வாசிக்கிறார்களென்று அர்த்தமல்ல. இது அவசர உலகம்.. //

புரிகிறது, நன்றி :-)

சிறில் அலெக்ஸ் said...

தொடர்ந்து கலக்குங்கள்

Boston Bala said...

இன்னும் பத்து இருக்கிறது போலிருக்கிறதே... விடாமல் தொடரவும். சுவாரசியமான விமர்சனங்கள்.

பழூர் கார்த்தி said...

சிறில் அலெக்ஸ்,
//தொடர்ந்து கலக்குங்கள்//

எனக்கென்னவோ "தொடர்ந்து கலங்குங்கள்" என்று சொல்வது போல் தோன்றுகிறதே :-))

***

குருநாதர் பாஸ்டன் பாலா அவர்களே, உங்கள் விமர்சனங்களைப் பார்த்துத்தான் எனக்கும் விமர்சன ஆசை வந்தது (புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல..) :-))

தொடர்ந்து விமர்சிக்கிறேன், நன்றி !!

நெல்லை சிவா said...

தலைவா..

நீங்க ப்ளாக்கர் மட்டுமே பதிவு போட அனுமதிக்கிறீங்க. டிபிஆர் சார் சொல்ற மாதிரி, அவசர உலகத்துல 'லாக்கின்' பண்ணி போடற மக்கள் கம்மிதான். ஒருவேளை, அத ரிமூவ் பண்ணினா, இன்னும் அதிகம் பின்னூட்டம் கிடைக்கலாம்..

மத்தவங்களுக்கு 'ஊட்டம் தர்ர மாதிரி' வர்ர உங்க பதிவுக்கு, நீங்க ஏங்க பின்னூட்டத்துக்கு கலங்கறீங்க.. உங்க விமர்சனத்துல 'பாஸாகனும்னு' எழுதறவங்கள்ளா கலங்குறோம், என்னையும் சேர்த்து.. :))

தொடர்ந்து கலக்குங்க..

கார்த்திக் பிரபு said...

hi innum niraya kumiyudhu kadhaigal m seekiram aagtum..en kadhai padinga... peyil mark keedhu poturaadhenga!!

மதுமிதா said...

சோம்பேறிப் பையன்
இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நல்ல பணி தொடரட்டும்

மதுமிதா said...

சோம்பேறிப் பையன்
இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நல்ல பணி தொடரட்டும்