Tuesday, September 19, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 56 to 60

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55


56. எங்க வீட்டு ராமாயணம் - சிறுகதை - சிதம்பரகுமாரி

அப்பா வாங்கிக் கொடுத்த புது சைக்கிளில் ஊர் சுற்றப் போகும் சிறு பெண், அவளை சுற்றிய உலகம் என்று செல்லும் கதை. சிறுபெண்ணின் கற்பனையில் வரும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. விலங்குகளுக்கு பெயர் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. "..மேரி தான் சிரிப்பை அடக்கி, அந்த யானையை பார்த்து கேட்டாள், "அடப்பாவி, உன்னோட கல்யாணதுக்குமாடா லேட்டா வருவ?" மாப்பிள்ளை ராமு வெட்கப்பட்டு சிரிக்க.." போன்ற வரிகள் சிரிக்க வைக்கின்றன. ராமாயணம், குழந்தைகளுக்கு !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

keerthana yeppadi vetuku vanda avalukuthan vali theriyathe?mathapadi kathai fulla reeel

- Kavitha

*****

57. பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - அனுபவம் - உமா கதிர்

வேலை தேடி துபாய் சென்ற இடத்தில், ஓர் பாகிஸ்தானியருடன் பயணிக்கிறார். இது தொடர்பான சம்பவங்களும், உரையாடல்களும் அனுபவமாக எழுதியிருக்கிறார். இயல்பாக செல்லும் படைப்பில் "..வந்திட்டேன்னு சொல்றத விட வீட்லருந்து அனுப்பிட்டாங்கன்னுதான் சொல்லணும். வந்த புதிதில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது தெளிவாகவே புரிந்துவிட்டது.." என்று பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் மாறுவது சற்று நெருடுகிறது. "நீங்க நினக்கற மாதிரி எல்லாரும் அப்படிப்பட்டவங்க கிடையாது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஒட்டுமொத்த பழியும் மக்கள் மேல வந்திடுது." போன்றவை சிந்திக்க வைக்கின்றன. அனுபவம், வாழ்க்கைப் பயணம் !!

மதிப்பெண் : 76 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

தம்பி, நல்ல பதிவு
//தங்கமான மனசு அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொண்ணுக்கு. //
அப்படியா :)) ??

- சந்தோஷ்

*****

58. பதிவுக்கு மேய்க்கி - பதிவு - bsubra786

லிப்ட் என்ற தலைப்பில் வலைப்பதிவுகளில் இடுகைகள் வந்தால் எப்படியிருக்கும் என படம்பிடித்து காட்டியிருக்கிறார். ஈ.தமிழ், கில்லி, தேர்தல் 2006, தடிப்பையன் போன்ற வலைப்பதிவுகளில் வரும்/வந்த(?) இடுகைகள் என்று சிலவற்றை எழுதியிருக்கிறார். "பிரிட்டிஷாருக்கு பதில் அமெரிக்கர், இந்தியாவை ஆண்டிருந்தால் 'கொஞ்சம் எலிவேட்டர் கிடைக்குமா?' என்று கொங்கு ராசா தலைப்பிருப்பார்...", "இந்த மாதிரி பிற வலையகங்களில் இருந்து உருவி எழுதுவதை லிஃப்ட் எழுத்து என்பார்கள்." என்று நெடுக தொடரும் கிண்டல் பதிவு பற்றிய குழப்பத்தையும்(?) மீறி சிரிக்க வைக்கிறது. எதிர்காலம் 2036க்கும் ஓர் பகுதியில் பயணித்திருக்கிறார். மொத்தத்தில் பதிவுக்கு மேய்க்கி, மெகா புதிர் !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

சரவ், பதிவெழுதி இரண்டு நாளாகியும் எவரும் சீந்தாத நிலையில் நண்பருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.
'உன் கதை படிச்சேன்... ஒன்னுமே புரியலை'
'ஒரு ரெண்டு பேருக்காவது வெளங்கும்னு தோணுது!?'
'ஒன்று நீ... சரி! அந்த இன்னொருவர் எவர்?'
ஏதோ, மற்றொரு வாசகராவது ரசித்ததில் பெருத்த மகிழ்ச்சி :)

- Boston Bala

*****

59. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - கவிதை - வலைஞன்

வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கை பற்றிய கவிதை. எளிமையான, சிற்சிறு வரிகள் கவிதைக்கு பலம்.
"எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்... " போன்றவை ரசிக்க வைக்கின்றன. கவிதை, நம்பிக்கை !!

மதிப்பெண் : 78 / 100

*****

60. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இருவரிக் கதை - வலைஞன்

இரண்டு வரிகளில் ஒரு அருமையான கதை. க்ளைமேக்ஸ் நச். தேர்ந்தெடுத்த வார்த்தைகள், களம், முடிவு என அசத்துகிறது கதை. நிச்சயம் படிக்க வேண்டும். கதை, கலக்கல் !!

மதிப்பெண் : 84 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

7 comments:

கார்த்திக் பிரபு said...

kalakal kadhaigal udanadi vimarsanagal ..valthukkal somberi paiyan

கார்த்திக் பிரபு said...

kalakal kadhaigal udanadi vimarsanagal ..valthukkal somberi paiyan

வலைஞன் said...

நன்றி!

Boston Bala said...

நன்றி தல...

உமது பெருமையை யாம் மெச்சுகிறோம் :-D

கதிர் said...

கலக்கள் க்ரைம் + த்ரில்லர் கதை என்னாச்சு சோ.பை?

பழூர் கார்த்தி said...

அனைவருக்கும் நன்றி !!

***

தம்பி,

ஞாபகம் வைத்துக்கொண்டு கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி & ஸ்பெசல் நன்றி !!

சற்று அதிகமான வேலைப்பளு, விமர்சன வேலைகளுக்கு மத்தியில் கதையை தொடர முடியவில்லை..

அஜால் குஜால் மாற்றங்களுடன் அதிரடியாக, அடுத்த மாத தேன்கூடு போட்டியில் நமது கலக்கல் க்ரைம் திரில்லரும் களமிறங்கும் !! என்ன, தலைப்புக்கு தகுந்தாற்போல் அங்கே, இங்கே கொஞ்சம் தட்டி அனுப்பப் படும் :-)))))

தயாராகுங்கள், ஓர் புதிய அனுபவத்திற்கு !!!

கதிர் said...

//அஜால் குஜால் மாற்றங்களுடன் அதிரடியாக, அடுத்த மாத தேன்கூடு போட்டியில் நமது கலக்கல் க்ரைம் திரில்லரும் களமிறங்கும் !! என்ன, தலைப்புக்கு தகுந்தாற்போல் அங்கே, இங்கே கொஞ்சம் தட்டி அனுப்பப் படும் :-)))))//

எப்பவுமே இப்படித்தானா?, இல்ல இப்படித்தான் எப்பவுமேவா?