Monday, September 18, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 46 to 50

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45


46. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 2 - தொடர்கதை - யோசிப்பவர்

டைம் மிஷினுடன் எதிர்காலத்துக்கு பயணிக்கும் சாப்ட்வேர் இளைஞனின் கதை. டைம் மெஷினில் செல்லும்போது இன்னோர் இளைஞன் லிப்ட் கேட்கிறான். எதிர்காலத்தின் லைப்ரரிக்கு செல்கிறார் கதாநாயகன், அங்கே இன்னோர் பெண்னுடன் லிப்ட்டில் பயணிக்க போவதாக இந்த பாகம் முடிவடைகிறது. அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்கலாம். கதைக்களம், வர்ணனைகள் கதைக்கு பலம். சஸ்பென்ஸ் போதிய அளவுக்கு உள்ளது. தொடர்கதை, அறிவியல் எதிர்பார்ப்பு !!

மதிப்பெண் : 77 / 100

*****

47. காடனேரி விளக்கு - சிறுகதை - MSV Muthu

அருமையான த்ரில் கதை. காடனேரி விளக்கு நிறுத்தத்திலிருந்து காடனேரி கிராமத்துக்கு இரவு 12 மணிக்கு நடந்து செல்கிறான் ஓர் இளைஞன். அதைச் சுற்றி சம்பவங்களை த்ரில் விறுவிறுப்போடு கலந்திருக்கிறார். வெவ்வேறு பகுதிகளாக சம்பவங்களைக் கொடுத்து, கடைசியில் வாசகர்களையே கதையின் போக்கை ஊகிக்க விடுவது ரசிக்க வைக்கிறது. "பயணிகள் 'தேவதை இளம் தேவி' என்ற பாடலைக்கூட இரசிக்காமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்." போன்ற வரிகள் கதையின் த்ரில்லை சற்று விலக்குகின்றன. காடனேரி விளக்கு, ஒளிர்கிறது !!

மதிப்பெண் : 84 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

பங்காளி! பக்கத்துல உள்ள எங்க அரசபட்டி, கரிசல்குளம் எல்லாத்தையும் விட்டுட்டீங்க.

- கார்மேகராஜா

*****

48. கண்டிப்பாடா செல்லம்.. - சிறுகதை - ramkumarn

எத்தனை கதைகள் வந்தாலும், காலேஜ் காதல் கதைகள் மட்டும் அலுப்பதே இல்லை. இன்னுமோர் காலேஜ் காதல் கதை. உணர்வு பூர்வமாக வார்த்தைகளை, உரையாடல்களை வரைந்து விளையாடி இருக்கிறார். "ஒவ்வொரு புன்னகைக்கும் ஒரு கவிதை சேமித்துக் கொண்டிருந்தான்" போன்ற வரிகள் புருவம் உயர்த்த வைக்கின்றன. "அவள் தலையை வருடியபடியே சொன்னான் அவன், கண்டிப்பாடா செல்லம்" என்று முடியும் க்ளைமேக்ஸ் அற்புதம். சிறுகதை, செண்டிமெண்ட் கலக்கல் !!

மதிப்பெண் : 88 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

அந்த பையனும் ஒரு செமஸ்டர்ல ஃபெயிலாகி அப்பறம் மீண்டு வந்தது கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு. நான் பாத்து அப்படியே சீரழிஞ்சவங்க தான் அதிகம்.

- வெட்டிப்பயல்

*****

49. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - மாதங்கி

சின்னஞ்சிறு கதை. அழகான முடிவு. கதையின் கடைசி வரிகள் நிஜமாகவே எதிர்பாராதது. "..இப்படி ஆள்அரவம் இல்லாத இடத்தில் வாகனம் ரிப்பேர் ஆகி மாட்டிக்கொண்டாகிவிட்டது. தகவல்தொடர்பு சாதனம் வேலை செய்யவில்லை..." போன்றவற்றை இரண்டாம் முறை படிக்கும்போது நிறையவே ரசிக்கலாம். சிறுகதை, சூப்பரப்பூ !!

மதிப்பெண் : 89 / 100

*****

50. நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - முரட்டுக்காளை

மற்றுமோர் விண்வெளி அறிவியல் கதை. வர்ணனைகளில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இ-யுனிட்ஸ், டைட்டன் கிரகம் என்று கதை படு வித்தியாசமாக பயணிக்கிறது. "ஜூபிட்டர் கிரகத்தைச் சுற்றும் பல நிலாக்களில் யுரோப்பாவும் ஒன்று. அங்கு ஒரு நாள் என்பது 85 மணி நேரங்கள் கொண்டது. மூன்று 24 மணி நேர பூமி-நாட்களில்..." போன்றவை வாசகரை விண்வெளி சூழ்நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. க்ளைமேக்ஸ் எதிர்பார்த்ததே !!

மதிப்பெண் : 75 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

2 comments:

ராம்குமார் அமுதன் said...

விமர்சனத்துக்கு மிக்க நன்றி சோம்பேறி பையன்.... நம்ம கண்டிப்பாடா செல்லம் கதைக்கு 88 மார்க்குகள் போட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். நான் இந்த முதல் படைப்பிற்கு உங்களிடமிருந்து இவ்வளவு மார்க் எதிர்பார்க்கவேயில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரி "ஒவ்வொரு புன்னகைக்கும் ஒரு கவிதை சேமித்துக் கொண்டிருந்தான்" நானும் கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்து எழுதியது. அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது மனதிற்கு இதமாகவே இருக்கிறது.

உளமார்ந்த நன்றிகள் :)))))......

ரசிக்கத் தகுந்ததான பின்னூட்டம் போட்ட அண்ணன் வெட்டிப்பயலுக்கும் நன்றி... நன்றி...

MSV Muthu said...

நன்றி சோம்பேறிப்பையன். உங்களை சோம்பேறிப்பையன் என்று சொல்லவே நா எழவில்லை. இவ்வளவு பதிவுகளையும் படித்து, ரசித்து, விமர்சனம் எழுதிய உங்களை எப்படி சோம்பெறிப்பையன் என்று அழைப்பது. சுறுசுறுப்புத்திலகம் என்றல்லவா அழைக்கவேண்டும். என் கதையையும் பொறுமையாகப்படித்து, 84 மதிப்பெண்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் பாஸ’டிவ் விமர்சனம் ஊக்கத்தை அளிக்கிறது. ஆனால் குறைகளையும் கூறினால், அதை திருத்திக்கொள்ளலாம். இது ரிக்வஸ்ட் மட்டுமே. உங்கள் பிஸ’ ஸ்கெடியூளிலும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த நேரம் எடுத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.