தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.
கடந்த விமர்சனங்கள்
1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40
41. ஆனா ஆவன்னா... - கவிதை - ஜி.கௌதம்
மாணவர்களை நன்கு பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையில் உயர காரணமான ஆசிரியரைப் பற்றிய கவிதை. மாணவர்கள் எல்லோரும் நல்ல பொருளாதார நிலைமையில், ஏணியான ஆசிரியரோ கடைநிலையில். இந்த வேறுபாட்டை அழகாக சித்தரிக்கிறது. கவிதைநடை சற்று குறைவாய், உரையாடல் போல் தோற்றமளிப்பது சிறு பலவீனம். கவிதை, சிந்தனை !!
மதிப்பெண் : 75 / 100
இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :
ஏறிய வழியே
திரும்பிப் பார்த்தேன்
அதே இடத்தில
திடமாய் நின்று
என்னைப் பார்த்து சிரித்தது
ஏணி!
- ILA(a)இளா
*****
42. சோம்பேறி பையன் - சிறுகதை - கோவி.கண்ணன்
சோம்பேறியான கணவனை ஆலோசனை கூறி நல்வழிப் படுத்தி, வாழ்க்கையில் உயரவைக்கும் மனைவி, மனைவி சொல்படி நடந்து வெற்றியடையும் கணவனைப் பற்றிய கதை. அமைதியான நீரோடை போல் எளிமையாக செல்கிறது கதை. இதுவே கதைக்கு பலம். "என் மனைவி என்மீது நம்பிக்கை வைத்து படிப்படியாக என் காலடியில் அமைத்த ஏணி என்னை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருந்து" என்று முடியும்போது கதை, நிறைவு !!
மதிப்பெண் : 80 / 100
இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :
தம்பி...! மாதா மாதம் போட்டி நடத்தினால் அப்பறம் கதைக்கு எங்கே போவது. விக்ரமன் அவதாரம் எடுக்க வேண்டியதுதான் !
- கோவி.கண்ணன்
*****
43. லிப்ட் ப்ளீஸ் - 1 - 2 - 3!!! - தொடர்கதை - வெட்டிப்பயல்
க்ரைம் நாவல் போல் ஒரு தொடர்கதை. இரு வருடங்களுக்கு முன் பண்ணிய ஒரு விபத்தை நினைத்து அதிலிருந்து சற்று மனம் குழம்பி திரிகிறார் கதை நாயகன். மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்று மறுமுறை திரும்ப வரும்முன் மனக் குழப்பத்தால் இறக்கிறார். இதை திரில், க்ரைம் மசாலா தூவி பரிமாற முயற்சித்திருக்கிறார். "அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு" போன்றவைக்கு உழைத்திருக்கிறார். பகுதிகளை சரியான முறையில் தெளிவாக முடிக்காதது சிறுகுறை. க்ளைமேக்ஸ் வாசகர்களை சற்று குழப்புகிறது. கதையை விட, முடிவை விளக்கம் சொல்லி போட்ட பதிவு சூப்பர். மொத்தத்தில் கதை, ரசிக்கும்படியான குழப்பம் !!
மதிப்பெண் : 74 / 100
இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :
அனைத்து பின்னூட்டங்களும், தவிப்போடு அனைத்திற்கும் பதிலளித்த படைப்பாளியும்..
*****
44. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - சிறுகதை - pavanitha
தந்தைக்கும் மகனுக்குமிடையேயான பாசத்தையும், பரிவையும் சொல்லும் கதை. வாழ்க்கைப் படியில் ஏற்றி விட்ட தந்தையை மறக்காது, நன்றிக் கடன் செலுத்தும் மகன், பாசத்தை கொட்டும் தந்தை என்று கலக்கலான கதைக்களம். உரையாடல்கள், சம்பவங்கள் திடிர் திடீரென தாவி ஓடுவது சிறுகுறை. "டேய் ராஜ்,இந்த வருஷம் உனக்கு ரொம்ப ராசிடா. புது வண்டி அப்புறம் இப்ப கேம்பஸ் இன்டர்வியுல நல்ல வேலை. நடத்துடா." போன்ற உரையாடல்களின் மூலம் தாவுகின்ற கதையில் பலவீனங்கள் சில பலமாக மாறுகின்றன. சிறுகதை, சிறப்பான களம் !!
மதிப்பெண் : 76 / 100
இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :
கதை நல்லா 'நீட்'டா வந்துருக்குங்க. வாழ்த்து(க்)கள்
- துளசி கோபால்
*****
45. லிப்ட் கிடைக்குமா? - கவிதை - madhumitha
ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் இருக்கும் லிப்ட் ஆபரேட்டரைப் பற்றிய அழகிய கவிதை. நல்ல களம் கவிதைக்கு. வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார்.
"கிறுகிறுக்கும் உணர்வினை
ரசனையை
மகிழ்வை
புழுக்கத்தை
வெளிக்காட்டாது
இயந்திர மனிதனாய்" போன்ற வரிகளை ரசிக்கலாம். கவிதை, சுய பரிசோதனை !!
மதிப்பெண் : 78 / 100
*****
நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !
*****
7 comments:
சோம்பேறி பையன் அவர்களே !
நம்ப கதைக்கு மார்க் அள்ளி போட்டிருக்கிங்க...ரிமார்க் ஆகிடப் போவுது !
ஆனால் தயவுசெய்து ரீ மார்க் போட்டுடாதிங்க !
:))
மிக்க நன்றி
சோம்பேறிப் பையன்
இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நன்றிங்க
ஃபுல் ஃபார்மில் பிச்சு உதறீங்க... படைப்புகளுக்கு சிறப்பான அறிமுகமாக இருக்கிறது!
நேத்து நைட் லேட்டானதால அதிகமா கமென்ட் போட முடியல :(
எப்படித்தான் கஷ்டப்பட்டு படிக்கறீங்களோனு புரியல...
ஒரு சின்ன விளக்கம்
//"அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு" போன்றவைக்கு உழைத்திருக்கிறார்//
இதவிட ரெண்டு டாக்டர்ஸும் பேசற இடத்துல அந்த நோயோட அறிகுறி அப்பறம் பெண்டங்குலார் ஹாலோசினேஷன்ல ஆடியோவும் சில சமயம் கேட்கும் போன்றவற்றிற்குத்தான் அதிக நேரம் எடுத்தது.
மற்றப்படி உங்கள் விமர்சனம் சரியாகவே படுகிறது.
மிக்க நன்றி
அடுத்த விமர்சனப் பகுதி எப்பங்க? ஆவலா காத்திட்டுருக்கேன்.
ennapa idhu pinnotamey illai? ellarum enna panranga?
Post a Comment