Tuesday, September 12, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 31 to 35

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள் 1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30

31. முனி அடி - சிறுகதை - செந்தில் குமார்

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் படும் ஓர் சிறுமியின் கதை. உரையாடல்களாலும், வர்ணனைகளாலும் கிராம மக்களை, அவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் கொண்டு வருகிறார். "சாலையின் இரு புறங்களிலும் நடு உடம்பில் 48, 49 என அரசாங்க பச்சைக் குத்தப் பட்ட புளியமரங்கள், வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலை" போன்றவை ரசிக்க வைக்கின்றன. ""ஒத்த கிளி பெத்து....என் உசுரயே.. நான் கொடுத்து...." என்று கவிதை மனதைப் பிழிகிறது. முனி அடி, யதார்த்தமான அடி !!

மதிப்பெண் : 86 / 100

*****

32. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 4 - தொடர்கதை - ராசுக்குட்டி

இதற்கான விமர்சனத்தை சென்ற பகுதியிலேயே பார்த்து விட்டோம் !

*****

33. விரல் பிடிப்பாயா..? - சிறுகதை - வசந்த்

மகனுக்காக தியாகங்கள் நிறைய செய்து, இப்போது தனிமையில் வாடும் பெரியவரின் கதை. எளிமையாய் கால மாற்றங்களை காட்டி இருக்கிறார். "காலம் ரொம்ப மாறிக்கிட்டு இருக்குமா.. இப்பெல்லாம் இங்கிலீஸ் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கணும்மா.." என்று மகனை பெரிய ஸ்கூலில் சேர்த்ததை தந்தை நியாயப் படுத்துவது, நிறைவு. "நான் அவளோட அமெரிக்கா போகத் தான் போறேன்.. அவருக்கு மாசாமாசம் பணம் அனுப்பிடறேன்.." என பையன் சொல்லும் போது, நமக்கும் கோபம் வருவது, கதையின் வெற்றி. விரல் பிடிப்பாயா, மனதை பிடிக்கிறது !!

மதிப்பெண் : 82 / 100

*****

34. அண்ணே..லிப்ட் அண்ணே..! - சிறுகதை - வசந்த்

லிப்ட் கொடுப்பதைப் பற்றி, கலக்கலாக ஓரு சிறுகதை. யார், யாருக்கு கொடுக்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ். கடைசி பாராவை படித்ததும், மீண்டும் கதையை படிக்க வைக்கிறார். வித்தியாசமான கோணம், எண்ணங்கள், இயல்பான உரையாடல்கள். "நாளைக்கு சுத்தம் பண்ணும் போது சின்னசாமிகிட்ட சொல்லணும்.இனிமேல இவனுங்களுக்கு லிப்டே குடுக்கக் கூடாது" போன்றவற்றை இரண்டாம் முறையில்(படிக்கும்போது) ரசிக்கலாம். சிறுகதை, சிறகடிப்பு !!

மதிப்பெண் : 87 / 100

*****

35. முன்னாவும் ,சில்பாவும். - சிறுகதை - umakarthick

ஒரு பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து, பழக்கமாகி, காதலாகி திசைமாறிய(?) ஓர் இளைஞனின் கதை. காலேஜ் பேச்சிலர்ஸின் வாழ்க்கையை நன்றாக படம்பிடித்து காட்டியிருக்கிறார். "எங்க குரூப்ல பசங்க யாருக்காது பிறந்த நாளுன்னா அவனவன் அந்த அளவுக்கு சந்தோச படுவான்,அன்னைக்கு நைட் ரூமில பசங்க எல்லாரும் சேர்ந்து அவனுக்கு பொதுமாத்து (அதாங்க போர்வைய மூடி அவனை வந்தவன் போனவன்லாம் அடிக்குறது) போட்டு அப்புறம் அவன்கிட்ட இருக்கிற பணத்தலாம் எடுத்து ஒருத்தனை சரக்கு வாங்க அனுப்பி,இன்னொருத்தன பீப் ப்ரை வாங்க அனுப்பி அக்கவுன்ட்ல சிகரெட், புரோட்டா முட்டை பொரியல் எல்லாம் வாங்கி, ஒரு ரூம க்ளீன் பண்ணி ,கம்ப்யூட்டர்ல பாட்டை சவுண்டா வச்சி தண்ணி, கண்ணீர், வாந்தி.... அப்படின்னு கும்மி அடிப்போம்" போன்ற வரிகள் அசத்துகின்றன. க்ளைமேக்ஸ் கதை நடுவிலேயே வந்துவிடுகிறது. சம்பவங்களை அதன் போக்கிலேயே விவரித்து விளையாடியுள்ளார். முன்னா, மனதை தொடுகிறான் !!

மதிப்பெண் : 86 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

7 comments:

இரா. வசந்த குமார். said...

நண்பர் சோ.பையனுக்கு... அசுர பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறது தேன்கூடு போட்டிக்கான பதிவுகள். சளைக்காமல் நீங்கள் இடுகின்ற விமர்சனங்கள் என்னைக் கூர்தீட்டிக் கொண்டு இன்னும் நல்ல ம்திப்பெண்கள் வாங்க வேண்டும் என்று என்னைத் தூண்டுகின்றன். மிக்க நன்றி.. தங்கள் பார்வையில் என் முன்னேற்றம் : 70,71,78,80,68,82,87.

இரா. வசந்த குமார். said...

நண்பர் சோ.பையனுக்கு... அசுர பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறது தேன்கூடு போட்டிக்கான பதிவுகள். சளைக்காமல் நீங்கள் இடுகின்ற விமர்சனங்கள் என்னைக் கூர்தீட்டிக் கொண்டு இன்னும் நல்ல ம்திப்பெண்கள் வாங்க வேண்டும் என்று என்னைத் தூண்டுகின்றன். மிக்க நன்றி.. தங்கள் பார்வையில் என் முன்னேற்றம் : 70,71,78,80,68,82,87.

கார்த்திக் பிரபு said...

என் படைப்பிற்க்கான விமர்சனம் பார்த்தேன். எப்படியோ பாஸாகி விட்டேன் . நன்றி.
எனக்கு போட்டியில் வெற்றி பெறுவதை விட இந்த விமர்சன பதிவும்,எல்லாருக்கும் நீங்கள் அளிக்கும் மதிப்பெண்கள்
கவனிப்பதிலும் தான் ஆர்வம் அதிகம் இருக்கிறது.

வேறு யாராவது விமர்சனங்கள் எழுதுகிறார்களா என்ன?பாபாஜி என்ன ஆனார்?

மேலும் நீங்கள் ஒவ்வொரு கதைக்கு வரும் பின்னூட்டங்களை இந்த முறை போட வில்லை..அதையும் போடுங்கள். நன்றி வருகிறேன்.

பழூர் கார்த்தி said...

வசந்த,

நன்றி, தொடர்ந்து கலக்குங்கள் !!

***

கார்த்திக் பிரபு,

நன்றி,
//மேலும் நீங்கள் ஒவ்வொரு கதைக்கு வரும் பின்னூட்டங்களை இந்த முறை போட வில்லை//

சில படைப்புகளில் நான் படிக்கும்போது பின்னூட்டங்கள் இருப்பதில்லை (அ) குறைவு (1 அ 2). ஆதலால் நான் சென்று படிக்கும்போது நான் ரசிக்கும்படியான பின்னூட்டம் இருந்தால் நிச்சயம் அது இடம்பெறும்... தொடர்ந்து கலக்குங்க..

வலைஞன் said...

குறிப்பு:

பயர்பாக்சில் உங்கள் பதிவின் தலைப்பும் தலைப்புவிளக்கமும் மட்டும் குழம்பித் தெரிகிறது. உங்கள் டெம்ப்ளேட்டின் ஸ்டைல்ஷீட்டில்
#blog-title {
margin:5px 5px 0;
padding:20px 20px .25em;
border:1px solid #eee;
border-width:1px 1px 0;
font-size:200%;
line-height:1.2em;
font-weight:normal;
color:#666;
text-transform:uppercase;
letter-spacing:.2em; x*****x
}
#blog-title a {
color:#666;
text-decoration:none;
}
#blog-title a:hover {
color:#c60;
}
#description {
margin:0 5px 5px;
padding:0 20px 20px;
border:1px solid #eee;
border-width:0 1px 1px;
max-width:700px;
font:78%/1.4em "Trebuchet MS",Trebuchet,Arial,Verdana,Sans-serif;
text-transform:uppercase;
letter-spacing:.2em; x******x
color:#999;
}
இந்த இடங்களில் letter-spacing: 2em; என்ற வரிகளை நீக்கி விடுங்கள்.

பழூர் கார்த்தி said...

வலைஞன்,
ஆலோசனைக்கு நன்றி !! நீக்கி விட்டேன் அந்த வரிகளை..

மதுமிதா said...

சோம்பேறிப் பையன்
இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நல்ல பணி தொடரட்டும்