Sunday, September 10, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 21 to 25

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள் 1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20


21. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - க(வி)தை - இளா

கவிதையுடன் கலந்த கதை. கணவனை இழந்த இளம்பெண்ணுக்கும், இன்னொரு இளைஞனுக்கும் இயல்பாய் ஏற்படும் நட்பு, காதலாய் மாறி வாழ்க்கையாய் பயணிப்பதை அழகாக கவிதையாக சொல்லி இருக்கிறார். கதையாய் மாறுகின்ற ஒரு பாரா சற்று பொருந்த வில்லை. யதார்த்தமான சம்பங்களை கோர்த்து
"குறும்புடன் அவள் "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்றாள்.
"வாழ்க்கைக்குமா?" என்றேன் மனதில் கொண்ட தைரியத்துடன்." என்று ரசிக்க வைக்கிறார். கவிதை, கால மாற்றம் !!

மதிப்பெண் : 84 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

இதைப் போய் படிக்காமல் விட்டுவிட்டேனே :-( அருமையான நடை... போட்டியெல்லாம் எதுக்குப்பா... எடுத்து முதல் பரிச கொடுங்கப்பா ;)

- வெட்டிப்பயல்

*****

22. சாந்தியக்கா - நிகழ்வு - பாலபாரதி

பத்திரிக்கையாளர் சந்தித்த ஓர் நிகழ்வினை உருக்கமாக எழுதி இருக்கிறார். "நம்பிக்கையும், எதிர்பார்ப்புக்களும் இல்லாத வாழ்வு சூன்யமானது." என்பது போன்ற தேர்ந்தெடுத்த வார்த்தைகள் விறுவிறுப்பு. குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு விலைமாதுவாய் காலம் தள்ளும் பெண்ணை மீட்டு வந்து மறுவாழ்வு அமைத்துக் கொடுத்ததை அடக்கமாக விவரிக்கிறார். "யாராவது ஓரே ஒரு ஆம்பள கெடச்சாக்கூட அவன் காலடியிலேயே கெடப்பேங்க." போன்ற வரிகள் சுடுகின்றன. கூர்மையான உரையாடல்கள் பலம். 'சாந்தியக்கா', நம்பிக்கை தரும் உருக்கம் !!

மதிப்பெண் : 92 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கதைகள் கற்பனையில் வருவதை விட சொந்த வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்திய சம்பவங்கள், நபர்களைப் பற்றி எழுதும் போது அதன் அழுத்தம் தனிதான் பாலா.

- Kuppusamy Chellamuthu

*****

23. இதுவேறுலகம் - கதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

பிசிஓ வைத்திருக்கும் கண் தெரியாத செல்வத்தையும், அவரை உயர்த்திய அவருடைய நண்பரையும் பற்றிய கதை. வித்தியாசமான சில வர்ணனைகள் ரசிக்க வைக்கின்றன. "ஆண்வியர்வை வாடைக்கும் பெண் வியர்வை வாடைக்கும் அவனுக்கு வேறுபாடு தெரியும். இதை வைத்தே பலவற்றை அவன் கண்டு பிடிப்பான்." போன்ற வரிகள் பார்வையற்றவர்களின் உலகத்திற்கு நம்மையும் இட்டுச் செல்கின்றன. அகக்கிழத்தி, நயனம், யாக்கை என்று புதிய(?) சொற்களையும் அறிமுகம் செய்கிறார். இது வேறுலகம், நிஜமாகவே !!

மதிப்பெண் : 76 / 100

*****

24. நிலா நிலா ஓடி வா! - சிறுகதை - luckylook

அட்டகாசமான விண்வெளியியல் கதை. பூமியிலிருந்து, விண்வெளிக்கு பயணம் செல்லும் ஓர் குழுவின் கதை. "புவியீர்ப்புக் குறைக்கப்பட்ட அறையில் பயிற்சி எடுத்தும் கூட நிலவில் இயங்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது", "ஒரு இரவு ஒரு பகல் மாற பூமியின் கணக்கில் 27 நாட்கள் ஆகிறது இங்கே..." போன்ற வரிகள் கதைக்கு பின்னாலுள்ள உழைப்பை நினைவூட்டுகின்றன. கதை நடுவில் திரில்லாக வேகமாக பயணிக்கிறது. வித்தியாசமான, சற்று கிண்டலான முடிவு. சிறுகதை, விறுவிறுப்பு !!

மதிப்பெண் : 81 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

நல்ல கதை... //க்ரிஷ் பதிலளித்தான் "2069"//விண்வெளிக்கு சென்றால் வயது கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே ? அது எந்த அளவுக்கு உண்மை ??

- செந்தழல் ரவி

*****

25. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2 - தொடர்கதை - ராசுக்குட்டி

இதற்கான விமர்சனத்தை சென்ற பகுதியிலேயே பார்த்து விட்டோம் !

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள்! முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

13 comments:

- யெஸ்.பாலபாரதி said...

//நம்பிக்கை தரும் உருக்கம் !!//

நன்றி நண்பரே..
தங்களின் கடைசி வார்த்தை என் அனுபவங்களில்.. மற்றவைகளையும் பதிவு செய்யத் தூண்டுகிறது.

ILA (a) இளா said...

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி LazyGuy.

இரா. வசந்த குமார். said...

நண்பர் சோ.பையனுக்கு, தங்களது அன்பான, தவறாத பின்னூட்டங்கள் என் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன. தங்களது அசுர உழைப்புக்கு நன்றியுடையவன் ஆகின்றோம். மிக்க நன்றி.

லக்கிலுக் said...

என்னைப் போன்ற அமெச்சூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தேன்கூடுவுக்கும் அதை சிரமம் பாராமல் விமர்சித்துப் பாராட்டிய சோம்பேறி பையனுக்கும் (நீங்களா சோம்பேறி?) நன்றிகள் கோடி....

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி !!

***

பாலபாரதி,
//தங்களின் கடைசி வார்த்தை என் அனுபவங்களில்.. மற்றவைகளையும் பதிவு செய்யத் தூண்டுகிறது. //

மகிழ்ச்சி, நம்பிக்கை ஊட்டக்கூடிய இம்மாதிரியான நிகழ்வுகளை, பத்திரிக்கையாளர் வாழ்வில் சந்திக்கும் தர்மசங்கடங்களையும், போராட்டங்களையும் எழுதுங்களேன் !!

***

இளா, தொடரின் அடுத்த பதிவெப்போது :-) ??

***

வசந்த்,
//அன்பான, தவறாத பின்னூட்டங்கள் என் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன. //

மகிழ்ச்சி, தங்களது படைப்புகள் என்னை வியக்க வைக்கின்றன ! தொடர்ந்து கலக்குங்கள் :-))

***

லக்கிலுக்,
//ஊக்குவிக்கும் தேன்கூடுவுக்கும் அதை சிரமம் பாராமல் விமர்சித்துப் பாராட்டிய //
என்னால் முடிந்தவரை விமர்சிக்கிறேன், தொடர்ந்து படியுங்கள் :-)

ILA (a) இளா said...

//இளா, தொடரின் அடுத்த பதிவெப்போது :-) ??//

தொடரா? நானா? எங்கே? எப்போது?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல முயற்சி படைப்புகளுக்கு ஒரு அறிமுகம் கொடுப்பது படிக்கத் தூண்டுகிறது. மேலும் 100 மதிப்பெண்களுக்கு மார்க் கொடுப்பதும் நல்ல ஐடியாவாக தோன்றுகிறது.

பழூர் கார்த்தி said...

இளா,
//தொடரா? நானா? எங்கே? எப்போது? //

மன்னிக்கவும், ராசுக்குட்டியிடம் கேள்வியை பாஸ் செய்யுங்களேன் :-))

***

குமரன் எண்ணம்,
//மேலும் 100 மதிப்பெண்களுக்கு மார்க் கொடுப்பதும் நல்ல ஐடியாவாக தோன்றுகிறது. //

இது உள்குத்தா (அ) வெளிகுத்தா
:-))) ???

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
இது உள்குத்தா (அ) வெளிகுத்தா
:-))) ???
///

ஐய்யய்யோ என்னங்க இப்படி கேட்டுப்புட்டீங்க? நான் சொன்னது பாலா வந்து 4க்கு மார்க் போட்டதால ஒவ்வொரு படைப்ப்பையும் அவ்வளவா வித்தியாசப் படுத்திக் காமிக்க முடியல நீங் (உ.தா.பாலபாரதி, கௌதம் பதிவுகளை 92, 94) நல்லா வித்தியாசப் படுத்திக் காமிக்க முடியுதுன்னு சொன்னேன்.

எதுக்கு உள்குத்தா வெளிக்குத்தான்னு கேட்டீங்க ஒண்ணும் புரியல்லையே :-))) ? நான் என்னிக்கும் எங்கேயும் போய் உள்குத்து வெளிக் குத்து எல்லாம் வைச்சுப் பேசறதில்லீங்க. பிடிக்கலன்னா பிடிக்கல பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு அவ்வளவுதாங்க.

பழூர் கார்த்தி said...

மன்னிக்கவும் குமரன் எண்ணம் அவர்களே,

சும்மா காமெடிக்காக மட்டுமே "இது உள்குத்தா (அ) வெளிகுத்தா" என்று கேட்டேன், பக்கத்திலே ஸ்மைலிஸ் போட்டிருக்கிறேனே :-) !!

ஜாலியா எடுத்துக்கிடுங்க :-)) !!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

காமெடின்னுதான் நினைச்சிட்டிருக்கோம் ஆனா டப்புன்னு கோபத்தை வெளிப்படுத்தீடறாங்க என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தமா போயிடுது அதனால இப்போவெல்லாம் எதைப் பாத்தாலும் கொஞ்சம் டவுட் வருது தப்பா நினைச்சுக்காதீங்க.

ஓகை said...

சோ.பை. அவர்களே,

உங்கள் விமர்சனத்துக்கு மிகவும் நன்றி.

மதுமிதா said...

சோம்பேறிப் பையன்
இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நல்ல பணி தொடரட்டும்