Friday, September 08, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 11 to 15

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும் இந்த பகுதியின் நோக்கம் !

கடந்த விமர்சனங்கள் 1 to 5 6 to 10

11. லூர்து - சிறுகதை - அபுல் கலாம் ஆசாத்

சற்றே பெரிய சிறுகதை. சினிமாவில் பாட்டெழுத ஆசைப்படும் ஷேக் அலியிடமிருந்து கதை துவங்குகிறது. எளிமையான வார்த்தைகளைக் கொண்டு நிதானமாக நகர்கிறது கதை. "'ஏண்டா சம்பாத்தியம் பத்தலயா. கொமரு வூட்டுல உக்காந்தீக்குது நான்லொடா சம்பாத்தியத்த யோசன பண்ணனும்" போன்ற வட்டார மொழிநடை கதைக்கு பலம். "தறி நாடாவைச் சுற்றியல்ல தனது வாழ்க்கை..." போன்ற வரிகள், கதையின் மையப்போக்கை தீவிரப் படுத்துகின்றன. சினிமா கனவுகளை "எத்தினி வர்சம் அல்லாடி போன வர்சந்தான் மேளத்த மெல்லத் தட்டு மாமால ஒரு பீஸ் கெட்சுது" என்று
நகைச்சுவையையும் தெளித்திருக்கிறார். க்ளைமேக்ஸ் எதிர்பாராத, ஆச்சரியமான முடிவு. இதை அருமையாக கதையுடன் இணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. லூர்து, நிதானம் !!

மதிப்பெண் : 82 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

பாய்.. சொல்லி அடிக்கிறதுன்னா இது தானா? பொறுமையா படிச்சுட்டு, மறுபடி வர்றேன்.. :)

- ராசா (Raasa)

*****

12. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - Krishnaraj.S

நகைச்சுவையை மையமாகக் கொண்டு வந்திருக்கும் சிறுகதை. இயல்பான உரையாடல்களால், கதைக்குள் நாம் எளிதாக ஒன்ற முடிகிறது. "இந்தப்பெரிசு ஹெட்மாஸ்டர்கிட்ட மாட்டுனா , அது ஆடி அசைஞ்சு போய்ச் சேர்றதுக்குள்ளே அரை மணி நேரம் ஆகும்." போன்ற வரிகளின் மூலம் புன்முறுவல் பூக்க வைக்கிறார். வர்ணனைகளில் சில தூய தமிழிலும், சில பேச்சு தமிழிலும் இருப்பது சற்று நெருடுகிறது "இச்சம்பவம் நடந்தது எனக்கு ஏழு அல்லது எட்டு வ்யது இருக்கும்போது" / "நமக்கு ஆங்கிலப்புலமை வளத்தி உட்டதே இவருதான்". கதை முழுக்க இழையோடும் மெல்லிய நகைச்சுவை, கதைக்கு பலம். கிருஷ்ணராஜின் சிறுகதை, எளிமை !!

மதிப்பெண் : 77 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஆஹா பெருசு, இன்னமும் சின்னப்பிள்ளத்தனமா பேசிக்கிட்டே இருக்கீங்களே.

- gowrikrishna

*****

13. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - கவிதை - வசந்த்

சின்னஞ் சிறிய கவிதை. அளவாக, அழகாக இருக்கிறது. கவிதையின் மையக்கருத்தை ஓரிரு அடிகளிலேயே தெரிவிக்கிறார்.
"கடல் கரையைக் கேட்பதில்லை.
ஆண்டாண்டு காலமாய்
அலைகள் கொண்டு
உள் நுழைகிறது." என்று எளிமையாய் எழுதி ரசிக்க வைக்கிறார். எளிமை கவிதையின் பலம், வர்ணனைகள் இல்லாமல், நேரடி நிகழ்வாய் இருப்பது சிறு பலவீனம். கவிதை, கருத்துச் சிறப்பு !!

மதிப்பெண் : 70 / 100

*****

14. லிஃப்ட் குடுக்கலியோ லிஃப்ட் - சிறுகதை - சனியன்

மெலிதான நகைச்சுவை இழையோட, எளிமையாய் வந்திருக்கும் கதை. ஆரம்பம் முதலே பரபரப்பாய் நகரும் கதையின் போக்கை வாசகரை ஊகிக்க விடாமல் நகர்த்தி சென்றிருப்பது கதையின் பலம். க்ளைமேக்ஸ் எதிர்பாராத, ரசிக்கும் படியான முடிவு. உரையாடல்களிலும், வர்ணனைகளிலும் கிண்டல் தொணியை புகுத்தி, புன்முறுவல் பூக்க வைக்கிறார்.
"ஒரு
வெட்டி நாயே
வெட்டியாய் நாய்
வளர்க்கிறதே...
ஆச்சரியக்குறி." போன்ற கவிதை(?) வரிகள் அசத்துகின்றன. சிறுகதை, மசாலா பொழுதுபோக்கு !!

மதிப்பெண் : 78 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

சோம்பேறிப்பையன், படிச்ச 200 பேர்ல சோம்பேறித்தனப்படாம பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க.

- சனியன்

*****

15. இன்னா சார்? - சிறுகதை - வசந்த்

மெட்ராஸ் பேச்சுத் தமிழ் கதை முழுவதும் புகுந்து விளையாடுகிறது. கதையை விட, உரையாடல் மொழிதான் மனதில் பதிகிறது. நகைச்சுவையாக சில சம்பவங்களையும் கட்டி இருக்கிறார். "போன தபா, ஒரு வேலயா அடயாராண்ட போயிருந்தேனா, அங்க புட்ச்சேன் மனோகர் சார. இன்னா வூடுன்றெ நீ? சும்மா சோக்கா இருந்ச்சு சார்." என்று ஓர் லிப்ட் ஆபரேட்டரின் பார்வையில் கதை அமைதியாய் செல்கிறது. சிறுகதை, சிரிப்பு.

மதிப்பெண் : 71 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

14 comments:

dondu(#11168674346665545885) said...

உங்கள் தயவில் நல்ல் கதைகள் படிக்க முடிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

உங்கள் தயவில் நல்ல் கதைகள் படிக்க முடிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

சோம்பேறி பையன் என்று பெயர் வைத்துக்கொண்டு, இவ்வளவு பொறுமையாக படைப்புக்களை படித்து விமர்சனம் செய்வதற்க்கு ஒரு ஹேட்ஸ் ஆப்...

சோம்பேறி பையன் - சுறுசுறுப்பு பையன்

( சன் டிவி விமர்சன பாணியில் படிக்கவும்)

நாமக்கல் சிபி said...

//முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !
//

இது மேட்டரு!

உங்கள் நல்ல பணியை உயரே வையுங்கள்!

பழூர் கார்த்தி said...

டோண்டு,
//உங்கள் தயவில் நல்ல் கதைகள் படிக்க முடிகிறது.//

மகிழ்ச்சி, அனைத்து படைப்புகளுக்கும் என்னால் ஓர் அறிமுகம் கிடைப்பது மகிழ்ச்சியே, படிக்கும் கதைகளுக்கும் உங்கள் கருத்தை அங்கே தெரிவித்திருப்பீர்கள் என நம்புகிறேன் !

***

செந்தழில் ரவி,
//விமர்சனம் செய்வதற்க்கு ஒரு ஹேட்ஸ் ஆப்...
சோம்பேறி பையன் - சுறுசுறுப்பு பையன்//

ஹா..ஹா..ஹா..
இதுல உள்குத்து, வெளிகுத்து எதுவுமில்லைன்னு நினைக்கறேன்..
ஏய்ய்ய்ய்ய், என்னை வச்சி காமெடி, கீமெடி எதுவும் பண்ணலயே :-)))))

***

நாமக்கல் சிபி,
//உங்கள் நல்ல பணியை உயரே வையுங்கள்! //

தொடர்ந்து விமர்சிக்கிறேன், உயர்வா, தாழ்வான்னு நீங்கதான் சொல்லனும்..

இரா. வசந்த குமார். said...

அன்பு சோ. பையனுக்கு மிக்க நன்றி... உங்கள் பின்னூட்டங்கள், ஊக்கம் அளிக்கின்றன... இன்னும் நிறைய உபயோகமான பதிவுகள் இட உற்சாகம் அளிக்கின்றன..

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய பையன்,

நன்றிகள்.

கொஞ்சம் மேலே வந்திருக்கிறேன் :) வட்டார மொழியை அடிக்கோடிட்டுக் காட்டியது மகிழ்வை அளிக்கிறது.

அன்புடன்
ஆசாத்

வல்லிசிம்ஹன் said...

சோம்பேறிப்பையனா?
இதைவிட சுறுசுறுப்பு எங்கே பார்க்கமுடியும்.
உழைப்பு பிறரைப் பாராட்டப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

லக்கிலுக் said...

போட்டியின் எல்லா ஆக்கங்களுக்கும் விமர்சனம் பண்ணப் போறீங்களா?

அசுரப் பணி அது.... இருந்தாலும் உங்கள் உழைப்பின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அது சாத்தியமே....

வாழ்த்துக்கள்!!!!

பழூர் கார்த்தி said...

வசந்த,
//உங்கள் பின்னூட்டங்கள், ஊக்கம் அளிக்கின்றன... இன்னும் நிறைய உபயோகமான பதிவுகள் இட உற்சாகம் அளிக்கின்றன.. //

மிக்க மகிழ்ச்சி, இது எனக்கும் உற்சாகம் அளிக்கின்றது :-)

***

ஆசாத்,
//வட்டார மொழியை அடிக்கோடிட்டுக் காட்டியது மகிழ்வை அளிக்கிறது.//

தொடர்ந்து கலக்குங்கள் :-)

***

வள்ளி,
//உழைப்பு பிறரைப் பாராட்டப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.//

சற்று கடினமான முயற்சிதான், அனைத்தையும் விமர்சிக்க முயற்சிக்கிறேன்..

***

லக்கிலுக்,
//உங்கள் உழைப்பின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அது சாத்தியமே....//

உள்குத்து ஏதாவது :-)))

***

அனைவருக்கும் நன்றி !!

சனியன் said...

பரவாயில்லையே. நான் பர்ஸ்ட் கிளாஸ்ல பாசாயிட்டேன் போல இருக்குதே. நன்றி. நன்றி.

எபப்டிங்க எல்லா போட்டி பதிவையும் படிச்சு விமர்சனம் பண்ணறீங்க. சோம்பேறிப்பையன் ஆனாலும் ரொம்ப பொறுமைசாலி போல இருக்குது. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். வேணும்னா இதையும் போட்டிக்கு அனுப்பிடுங்க. ஆமாங்க. எழுதறவங்களுக்கு மார்க் போட்டு உற்சாகப்படுத்தி தூக்கி விடுறீங்கள்ல. இதுவும் ஒரு லிப்ட்தான. (சூர்யா: சனியா, எனக்கே சந்தேகமா இருக்கு. இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கோன்னு.)

பழூர் கார்த்தி said...

சனியன்,
//ஆனாலும் ரொம்ப பொறுமைசாலி போல இருக்குது//

இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கோ ??????? :-))))

பெருசு said...

அண்ணா

ரொம்ப நன்றிங்கண்ணா.
நம்மளையும் ஒரு எழுத்தாளனா மதிச்சு 77 மார்க்
போட்டிருக்கீங்களே.

நம்மளுக்கும் கொஞ்சம் லிப்ட் குடுத்ததுக்கு நன்றி.

மதுமிதா said...

சோம்பேறிப் பையன்
இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நல்ல பணி தொடரட்டும்