Monday, September 04, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 1 to 5

1. சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுநிகழ்வு - சிமுலேஷன்

வித்தியாசமான படைப்பு, சரியான கடியுடன் டிவியில் பார்த்த ஓர் நிகழ்வை சுவையாக சொல்லியிருக்கிறார். சீரியல் திரைக்கதை போல் இருக்கிறது. முடிவு சற்று ஏமாற்றமளித்தாலும், நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில் வித்தியாசம், படைப்பில் மட்டும் !!

மதிப்பெண் : 65 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

மொத கதையே, கடியா ???? விளங்கிரும்கோவ் :-)))
இருந்தாலும் நிறைய பேரை வந்து படிக்க வச்சருக்கீங்க போல இருக்கே, போனாப்போவுது... வாழ்த்துக்கள் :-)
நல்ல லிப்ட்டுதான் போங்க, உங்க ப்ளாக் ஹிட் கவுண்ட்டருக்கு !!!

- சோம்பேறி பையன்

*****

2. லிஃப்ட் - சிறுகதை - Cyril Alex

எளிமையான சிறுகதை, அழகாக சுருக்கமாக சொல்லியிருக்கிறார். 'சாலை ஆறாய் உருகியோடிக்கொண்டிருந்தது', 'கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது', 'கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது' போன்ற வர்ணணைகள் ரசிக்க வைக்கின்றன. கதையின் முடிவில் யதார்த்தத்தை புரிய வைக்கிறார். அழுத்தம் சற்று குறைவாயிருந்தாலும், அழகாக இருக்கிறது லிஃப்ட், சிறில் தந்திருக்கும் கிஃப்ட் !!

மதிப்பெண் : 80 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கற்பனைப் பாத்திரமென்றாலும், லிப்ட் கொடுத்த இளைஞன், ஏற்கெனெவே ஒரு முறை பட்ட கசப்பான அனுவத்தையும் மீறி, மனிதாபிமான உணர்வுடன் லிப்ட் கொடுத்துவிட்டு, எச்சரிக்கை கலந்த யதார்த்தத்துடன் பாக்கெட்டைச் சரி பார்த்திருப்பானோ என்று தோன்றியது.

- சிமுலேஷன்

*****

3. போட்டிக்காக - வெண்பா - அபுல் கலாம் ஆசாத்

ஆங்கில வார்த்தைகளைக் கலந்து, நகைச்சுவை பூச்சில் வெண்பாக்களை வரைந்து விளையாடி இருக்கிறார். வெண்பா ஏதுமறியா என் போன்ற பாமரர்களையும் "ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும்
டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3
பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன்
கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்!" என்பதன் மூலம் ரசிக்க/சிரிக்க வைக்கிறார். இலக்கணம் கொஞ்சம் தெரிந்துகொண்டு நாமும் வெண்பா களத்தில் இறங்கலாம் என உற்சாகமூட்டுகிறார். சில வார்த்தைகளுக்கு அழகாக சிறு குறிப்பும் கொடுத்திருக்கிறார். ஆசாத்தின் வெண்பா, விளையாட்டுப்பா !!

மதிப்பெண் : 70 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஆசாத் ஜி எங்கேயோ போயிட்டீங்க
ஆசாத் கஜல் உட்டா
அசராது வெண்பா போட்டா
ஆளெல்லாம் கூடிடுமே - நமக்கும்
கொஞ்சம் கிடைக்காதோ லிப்ட்

- மதுமிதா

*****

4. தவிப்பு - சிறுகதை - நெல்லை சிவா

படு ஸ்பீடாக பயணிக்கும் ஆங்கிலத் திரில்லர் போல் கதையை கொண்டு சென்றிருக்கிறார். இயல்பாக, வருணணைகள் அதிகமில்லாமல் பயணிக்கிறது கதை. "போற வழியிலே என் ஆள பிக்கப் பண்ணி, ஒரு காபி சாப்பிட்டுட்டு அவ எழுதப்போற எக்ஸாம்க்கு 'ஆல் த பெஸ்ட்' சொல்லிட்டு காலேஜ்ல ட்ராப் பண்ணனும்டா, கொஞ்சம் கருணை பண்ணுடா, மச்சி" போன்ற பரிச்சயமான உரையாடல்களுடன் கதைக்குள் நம்மை இழுத்து உட்கார வைக்கிறார். "வண்டி இழுத்துக் கொண்டே போய், நிறுத்த வேண்டிய கோட்டைத் தாண்டி நின்றது, சரியாக அங்கு நின்று கொண்டிருந்த ட்ராபிக் கான்ஸ்டபிள் முன்னால்..." என்று சஸ்பென்ஸை அதிகமாக்குகிறார். சுருக்கமாகவும், அழகாகவும் இருக்கிறது தவிப்பு, எக்ஸ்பிரஸ் சிறுகதை !!

மதிப்பெண் : 85 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

சைட் சமாச்சாரத்த தவிர, மத்த என்னோட அனுபவம்தான் இது கதையல்ல..நிஜம்... :)

- நெல்லை சிவா

*****

5. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - புதிர் - பினாத்தல் சுரேஷ்

இன்னுமொரு வித்தியாசமான படைப்பு. சில பிரபலங்கள் 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா' கருத்தில் எழுதினால் எப்படியிருக்கும் என்று சிந்தித்து எழுதியிருக்கிறார். எந்தந்த பிரபலங்கள் எழுதினார்கள் என்று அழகாக புதிரும் போட்டிருக்கிறார். மணிரத்னமும், கருணாநிதியும் சடாரென கண்டுபிடிக்க முடிகிறது. மிகுதியை யோசிக்க வைக்கிறார். பிரபலங்களின் எழுத்துப் பாணியை இமிடேட் செய்வது, கம்பி மேல் நடப்பது போன்றது. சரியாக நடந்து, யோசிக்க வைக்கிறது படைப்பு, புதிர் சரியான சதிர். சவாலுக்கு தயார்.

மதிப்பெண் : 70 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

எதெது தப்புன்னு சொன்னாத்தானே அடுத்த முயற்சி செய்ய முடியும், இப்படி மொட்டையா நாலு தப்புன்னு சொன்னா நான் எங்கன்னு போய் தேடுவேன். நமக்கு பொது அறிவு கம்மிங்க!! வழக்கம்போலவே வித்யாசமா, குசும்போட தான் எழுதியிருக்கிறீர்.

- தம்பி

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும் படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

26 comments:

அபுல் கலாம் ஆசாத் said...

அன்புடையீர்,

நன்றிகள்.

வெண்பா வடிக்கும் விருப்பம் வந்திருப்பது குறித்து மகிழ்கிறேன்.

இம்முறையும் வெற்றிக்கு அருகில் எனது படைப்பு போக வாய்ப்பில்லை என்பதை உங்கள் மதிப்பெண் காட்டியிருப்பதால் வருந்துகிறேன்.

இருப்பை நிரூபிக்கத்தான் நான் போட்டியில் கலந்துகொள்கிறேனோ என்னும் எண்ணம் வேர்விடத் துவங்குகின்றது.

ஆனாலும்...வழக்கம் போல் சப் சல்தா ஹை ஜீ.

அன்புடன்
ஆசாத்

கதிர் said...

தெளிவா விமர்சனம் எழுதி இருக்கீங்க. சவாலான வேலை. நல்லா பண்ணியிருக்கிங்க. வாழ்த்துக்கள்!!!

இந்த முறை விமர்சனம் மட்டும்தானா?, இல்ல உங்க பங்களிப்பும் இருக்கா. இருந்ததுன்னா நீங்களே உங்க படைப்புக்கு விமர்சனம் எழுதுவீங்களா?

ஹி ஹி ஹி

நமக்கு கேள்வி கேட்டே பழக்கமாயிடுச்சி அதான்!

அட!

நம்ம பின்னூட்டம் வித்யாசமா இருக்கா!!

சந்தோஷம்.

அன்புட்ன
தம்பி

கார்த்திக் பிரபு said...

kanipaa thalaiva nan idhu varai oru sila kadhaigali than padithu vote pottu vittu poit viduvane..indha murai vote poduvadhil kavanama irupane and elaarudaiya kadhaigalaiyum padikka pogirae..nalla alasal padhivu valthukkal

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !

***

பாஸ்டன் பாலாவை பார்த்துதான் எனக்கு விமர்சன ஆசை வந்து தொலைத்தது :-) முடிந்த வரையிலும் சிறப்பாக அளிக்க முயற்சிக்கிறேன்!

***

ஆசாத், வெண்பா இலக்கணங்கள் குறித்தும், எப்படி எழுதுவது என்பதையும் பற்றி ஏதாவது பதிவு போடுங்களேன் !

இந்த விமர்சனம் எனது கருத்து மட்டுமே, அதற்காக வெற்றியடையப் போவதில்லை என நினைக்காதீர்கள், தொடர்ந்து எழுதுங்கள் !

***

தம்பி,
//இந்த முறை விமர்சனம் மட்டும்தானா?, இல்ல உங்க பங்களிப்பும் இருக்கா. இருந்ததுன்னா நீங்களே உங்க படைப்புக்கு விமர்சனம் எழுதுவீங்களா?//

கலக்கலான(?) கிரைம் சிறுகதை ஒன்று உருவாகி வருகிறது.. விரைவில் வெளியிடப் படும், வெளியிட்டவுடன் அதற்கும் விமர்சனம் எழுதப்படும், எழுதுபவர் எழுத்தாளர் சோ.பையன்,
விமர்சிப்பவர் விமர்சகர் சோ.பையன், இது எப்படி இருக்கு :-))))

***

கார்த்திக், எல்லா படைப்புகளையும் படிக்கப் போவதற்கு பாரட்டுக்களும், வாழ்த்துக்களும் !!

கதிர் said...

//கலக்கலான(?) கிரைம் சிறுகதை ஒன்று உருவாகி வருகிறது.. விரைவில் வெளியிடப் படும், வெளியிட்டவுடன் அதற்கும் விமர்சனம் எழுதப்படும், எழுதுபவர் எழுத்தாளர் சோ.பையன்,
விமர்சிப்பவர் விமர்சகர் சோ.பையன், இது எப்படி இருக்கு :-))))//

தோ பார்றா, கதை இவரு எழுதுவாராம்!, விமர்சனமும் இவரே எழுதுவாராம்! நல்லா இருக்கே!!!

சூப்பரப்பு சூப்பரு!

நல்லா இருந்தா சரிதான்!

பினாத்தல் சுரேஷ் said...

சோம்பேறிப்பையன்,

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. (பொன்குஞ்சு இன்னும் பெறும் என்று காக்கை கருதினாலும்:-))

சிறில் அலெக்ஸ் said...

//எழுதப்படும், எழுதுபவர் எழுத்தாளர் சோ.பையன்,
விமர்சிப்பவர் விமர்சகர் சோ.பையன், இது எப்படி இருக்கு :-))))//

இதுவே த்ரில்லர் மாதிரி இருக்கே

விமர்சனத்துக்கு நன்றி.

கதையில் அழுத்தமில்லை என்பதை சரியாகச் சொன்னீர்கள். அழுத்தமாய் எதையும் சொல்லக்கூடாதென்பதே என் முடிவு. நம் கருத்தை திணிப்பதும் அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவதுதான்...

கதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முடிவையும் எண்ணத்தையும் தரவேண்டும் என விரும்ப்புகிறேன்.

பின்னூட்டங்களைப் பார்க்கையில் அதை சாதித்திருக்கிறேன் எனத் தோன்றுகிரது.

நெல்லை சிவா said...

சோம்பேறிப்பையன் என்று பெயர் வைத்துக்கொண்டு, சுறுசுறுப்பாய் விமர்சனம் எழுதியிருக்கீங்க. நல்ல முயற்சி.

70-80 படைப்புகளைத் தொட்டுக்கொண்டிருக்கின்ற இந்தப்போட்டிக்கு, சுடச்சுட விமர்சனம் எழுதினால்தான், எல்லாவற்றிற்கும் எழுதமுடியும். :)

இம்மாதிரியான முயற்சிகள், பின்னூட்டமில்லாமல் வெளிச்சத்துக்கு வாரா எழுத்துக்களையும் இனங்காட்ட வழிவகுக்கும்.

என் எழுத்துக்களையும் படித்து விமர்சதித்ததற்கு நன்றி. பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, உங்களின் விமர்சனம் ஊக்குவிப்பதாக இருந்தது.

தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்.

நெல்லை சிவா said...

மெனக்கெட்டு நீங்கள் செய்கின்ற இவ்விசயம், 70-80 என படைப்புகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், எளிதான காரியமல்ல!

சோம்பேறிப்பையன் என்று பெயர்வைத்துக்கொண்டு, சுறுசுறுப்பாக சுடச்சுட விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

போட்டியில் கலந்து கொண்டாலும், படிக்கப்படாமலேயே மறைந்து போகின்ற நல்ல எழுத்துக்களை, உங்கள் போன்றோரின் விமர்சனம் வெளிச்சத்துக்கு கொண்டுவர உதவும்.

பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, நமது எழுத்துக்களும் படிக்கப் படுகின்றன,விமர்சிக்கப் படுகின்றன என்பதே ஒரு எழுத்தாளனை உற்சாகப் படுத்தக்கூடிய ஒரு விசயம் தான்.

படைப்புகள் மட்டுமல்ல, பின்னூட்டங்களிலிருந்தும் 'ஹைலைட்' பண்ணுவது உங்கள் முத்திரையை காட்டியிருக்கிறது!


தொடரட்டும் உங்கள் பணி செவ்வனே!
விமர்சனத்திற்கும் அது தருகின்ற ஊக்கத்திற்கும் நன்றி!

பழூர் கார்த்தி said...

தம்பி, எழுதுவதை விட விமர்சிப்பது கடினம், படைப்பாளர்களின் மனம் புண்படாமல் விமர்சிப்பது மிகக் கடினம், முடிந்த வரை அடக்கி வாசிக்க முயற்சி செய்கிறேன், நன்றி :-)

க்ரைம் சிறுகதை(???) அடுத்த வாரம் வெளியிடப்படும் :-)))

***

சுரேஷ்,
//பொன்குஞ்சு இன்னும் பெறும் என்று காக்கை கருதினாலும்:-))//

ஜனரஞ்சக வாசகர்களிடம் சிறுகதை, கவிதைக்கு இருக்கும் ஆதரவு வேறுவிதமான படைப்புகளுக்கு குறைவு என்றே கருதுகிறேன், ஆதலால் மதிப்பெண் சற்று.... கருத்துக்கு நன்றி,

***

சிறில், கதையின் உட்கருத்தை வாசகரே புரிந்து கொள்ளுமாறு நீங்கள் வடிவமைத்திருந்து ரசிக்கத் தக்கது, தொடர்ந்து கலக்குங்கள் :-)

***

பழூர் கார்த்தி said...

demigod, உங்கள் க்ரைம் சிறுகதை சிறப்பாக உள்ளது, அனைத்து படைப்புக்களையும் இந்தமுறை படித்து விமர்சிக்க உள்ளேன், பார்ப்போம் :-)

***

நெல்லை சிவா, ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றி..
//போட்டியில் கலந்து கொண்டாலும், படிக்கப்படாமலேயே மறைந்து போகின்ற நல்ல எழுத்துக்களை, உங்கள் போன்றோரின் விமர்சனம் வெளிச்சத்துக்கு கொண்டுவர உதவும். //

அதுதான் எனது நோக்கமும் :-)

***

படைப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !!

dondu(#11168674346665545885) said...

நல்ல விமரிசனங்கள். ரசித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

G Gowtham said...
This comment has been removed by a blog administrator.
G Gowtham said...

//நெல்லை சிவா said
சோம்பேறிப்பையன் என்று பெயர் வைத்துக்கொண்டு, சுறுசுறுப்பாய் விமர்சனம் எழுதியிருக்கீங்க. நல்ல முயற்சி. //
நானும் நண்பர் சிவாவை வழிமொழிகிறேன்.
உங்கள் முயற்சி
பரிசு பெறாமல் போகும்
பல நல்ல படைப்புகளையும்
பலரைப் படிக்க வைக்கும்.
வாழ்த்துக்களும் நன்றியும்
(சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லாததால் முந்தைய எனது பின்னூட்டத்தை அழித்திருக்கிறேன், மன்னிக்கவும்!)

பழூர் கார்த்தி said...

நன்றி டோண்டு, நீங்களும் போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கலாமே, வாருங்கள் !

***

நன்றி கவுதம், போட்டியில் கலந்து கொள்வோரை ஊக்கப் படுத்துவதும், அனைவரது எழுத்துக்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவதுமே இப்பதிவின் நோக்கம் !!

இவ்விமர்சனங்களை போட்டிக்கு அனுப்ப வில்லை :-)

***

நண்பர் சந்திரமவுலி மின்னஞ்சலில் "நன்றி" என்று அனுப்பியுள்ளார்.

வடுவூர் குமார் said...

அட!இந்த பதிவு புது மாதிரி இருக்கே?
வாழ்த்துக்கள்

yata said...

மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எல்லா படைப்புகளையும் விமர்சனம் செய்யுங்கள்.

Waiting for the next batch!

பழூர் கார்த்தி said...

வடுவூர் குமார், புதுமாதிரி எல்லாம் இல்லை, ஏற்கனவே பாஸ்டன் பாலா விமர்சித்து கலக்கி இருக்கிறார் :-)

ஏதோ என்னால் முடிந்தளவு நானும் விமர்சிக்....

***

யதா,
//தொடர்ந்து எல்லா படைப்புகளையும் விமர்சனம் செய்யுங்கள்.//

ஆமாம், அதற்குத்தான் முயற்சிக்கிறேன்
:-)

***

அடுத்த செட் விமர்சனங்கள் இன்னும் ஓர் மணி நேரத்தில் வெளிவரும்...

நாமக்கல் சிபி said...

நல்ல முயற்சி...

இன்னும் நிறைய படைப்புக்கள் வரும்... காத்திருங்கள் ;)

அதற்கு உங்களுடைய விமர்சனத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம் ;)

yata said...

"அடுத்த செட் விமர்சனங்கள் இன்னும் ஓர் மணி நேரத்தில் வெளிவரும்..."

hi, waiting for your reviews. pls do continue your best service.

பழூர் கார்த்தி said...

வெட்டிப்பயல்,
//அதற்கு உங்களுடைய விமர்சனத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம் //
முடிந்த வரை சுறுசுறுப்பாக கொடுக்க முயற்சிக்கிறேன் !!

***

யதா, கொஞ்சம் தாமதமாகி விட்டது..
இப்போது வெளியிட்டு விட்டேன் :-)

***

அடுத்த செட் தேன்கூடு விமர்சனங்களுக்கு இங்கே பாருங்கள் !!

Simulation said...

சோம்பேறி பையன்,

விமர்சனத்திற்கு நன்றி.

"சீரியல் திரைக்கதை போல் இருக்கிறது."

கிட்டத்தட்ட இருபது வரிகள்கூட இல்லாத இந்தக் குட்டிக்கதையை சீரியல் திரைக்கதை போல் உள்ளது என்று சொல்லியிருப்பது உள்குத்தா? இல்லை வெளிக்குத்தா?

- சிமுலேஷன்

பழூர் கார்த்தி said...

சிமுலேஷன்,
//"சீரியல் திரைக்கதை போல் இருக்கிறது." என்பது உள்குத்தா//

இல்லை, நிஜமாகவே பாராட்டுதான், உள்குத்து, வெளிகுத்து எதுவுமில்லை..

இதற்காக புனேவிற்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம்ம்ம்ம்ம்ம் :-)))

Raji said...

Thanks for ur warm welcome!!

nice comments and for ur encouragement...
next time i will try not to made typo.

மதுமிதா said...

சோம்பேறிப் பையன்
இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நல்ல பணி தொடரட்டும்

பழூர் கார்த்தி said...

ராஜி,

வாருங்கள், வலைப்பதிவுலகத்தில் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் !!

***

மதுமிதா,
//இவ்வளவு சுறுசுறுப்பா உங்களுக்கு
நல்ல பணி தொடரட்டும் //

அதுசரி, இவ்வுளவு சுறுசுறுப்பா எல்லா விமர்சனப் பதிவிலும் பின்னூட்டம் போட்டிருக்கீங்க போலிருக்கே, இதைப் பத்தியே ஒரு தனிப்பதிவு போட்டுடறேன் :-))