சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. ஏழு வருடங்களாக வலைப்பதிகிறேன்.. அமெரிக்காவில் வசிக்கிறேன்..
ஹலோ.. யாரு லலித்மோடிங்களா?? நாங்க குன்னாம்பட்டி மாரியம்மன் கோவில்ல இருந்து பேசறோம்.. இன்னைக்கு கொடையில ஆட வேண்டிய கரகாட்ட குரூப் வரலைங்க.. ஐபிஎல்ல ஆடற சீயர் லீடர்ஸை (cheer leaders) கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுங்களா??
ஹலோ.. யாரு ஷாருக்கானா பேசறது??? நாங்க கேகேநகர் மூனாவது குறுக்கு சந்து ராமசாமி கிரிக்கெட் கிளப்பில இருந்து பேசறோம்.. இன்னைக்கு மேட்ச்சுக்கு ரெண்டு பேரு குறையறாங்க.. கொஞ்சம் கங்குலியையும், மெக்கல்லமையும் அனுப்பி வைக்க முடியுங்களா??