Friday, August 24, 2012

சிக்கன் 65 - பெயர்க் காரணம்அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ பண்டம் சிக்கன் 65. இன்னொன்று தந்தூரி சிக்கன். இந்த சிக்கன் 65 பெயர் எப்படி வந்தது என்று விக்கிபீடியாவில் துளாவிய பொழுது கிடைத்த தகவல்கள் கீழே...

இந்த பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் உள்ளன, ஆனால் எது உண்மையான காரணம் என்று நிரூபிக்கப் படவில்லை.சிக்கன் 65 - பெயருக்கு காரணங்களாக கூறப்படுபவை:
  • சிக்கன் 65 என்ற இந்த உணவு 1965 ஆண்டில் சென்னை புஹாரி ஹோட்டலில் அறிமுகப் படுத்தப் பட்டது. அறிமுகப் படுத்தப் பட்ட ஆண்டு பெயருடன் இணைந்து விட்டது.
  • சிக்கன் 65 தயாரிக்க உதவும் மசாலா 65 நாட்கள் ஊற வைக்கப் பட்டு, சிக்கனின் மேல் தடவப் படுகிறது.
  • சிக்கன் 65 உணவு 1965ம் ஆண்டு இந்திய போர் வீரர்களுக்கு சிறந்த, எளிய உணவாக அறிமுகப் படுத்தப் பட்டது.
  • சிக்கன் 65 உணவு, 65 மிளகாய்களை உள்ளடக்கி சமைக்கப் படுகிறது.
  • சிக்கன் 65 தயாரிக்க பயன்படும் கோழி 65 நாட்கள் வயதுடையது.
  • வட இந்திய போர் வீரர்கள் சென்னையில் பயிற்சி பெறும்போது அங்குள்ள மிலிட்டரி கேண்டீனில் உணவு வகைகள் தமிழில் எழுதப் பட்டிருக்கும். வீரர்கள் படிக்கத் தெரியாததால், மெனுவில் உணவு எழுதப் பட்டிருக்கும் நம்பரை (65) சொல்லி ஆர்டர் செய்வார்கள். அப்படியாக சிக்கன் 65 என்றாகி விட்டது.
என்ன நண்பர்களே, சிக்கன் 65 சாப்பிட தயாராகி விட்டீர்களா? இதில் என்ன காரணம் உண்மையாக இருக்கக் கூடும் (அல்லது) வேறு ஏதேனும் காரணம் உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் கூறுங்களேன்.

பெயரை விட்டுத் தள்ளுங்கப்பா, என்னவாய் இருந்தால் என்ன? கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரிதான் என்கிறீர்களா, அதுவும் சரிதான்!!

அடுத்த முறை ஹோட்டலில் சிக்கன் 65 சாப்பிடும் பொழுது, சர்வரிடம் பெயர்க் காரணம் கேளுங்களேன், என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!!

நன்றி: விக்கிபீடியா
படம் உதவி:mommyscuisine.com

12 comments:

நம்பள்கி said...

சென்னை புஹாரி ஹோட்டல் கைங்கர்யம்; அடையார் ரன்ஸ் ஹோட்டலிலும் famous!

பழூர் கார்த்தி said...

தகவலுக்கும், வருகைக்கும் நன்றி நம்பள்கி! அடையாரில் எங்கே உள்ளது ரன்ஸ்?

நம்பள்கி said...

இது தாஜ் மஹால் எங்கிருக்கிறது என்று கேட்பதற்கு சமம்!

நாங்கள் பள்ளியில் படிக்கும் போதே உண்டு; I.I.T and Guindy Eng. College மாணவர்களின் சுவர்க்கம்;

ரன்ஸ் ஹோட்டல் அடையார் பஸ் ஸ்டான்ட் எதிரில் உள்ளது!

வவ்வால் said...

ரன்ஸ் அந்த அளவுக்கு ஃபேமஸா?

அங்கே டிராபிக் ஜாம் என்ற பெயரில் சிக்னல் அருகேவே ஒரு ஹோட்டல் இருக்கும் அங்கு கூட்டம் கூடும்.

---------

பழூவூர் கார்த்தி,

65 நாள் கோழி என்பதே சரியாக இருக்கும், கால்நடை மருத்துவர் ஒருவர் அப்படித்தான் சொன்னார்.அப்போது தான் எலும்புகள் ரொம்ப முத்தாமலும், தசைகள் மென்மையாகவும் இருக்குமாம்.

90 நாட்களுக்கு மேல் பிராய்லர் கோழி வளர்ப்பது பொருளாதார நஷ்டம் என்றார்,ஏன்ன் எனில் உணவினை எடையாக மாற்றும் திறன் குறைந்துவிடும்(feed to meat conversion ratio) இதனை கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் கணக்கிட்டே விற்பனைக்கு கோழியை அனுப்ப வேண்டும்.

அதிகபட்சம் 75 நாட்களுக்குள் கோழியை விற்றுவிட வேண்டும்,இல்லை எனில் அவற்றுக்கு தீவன செலவு தான் அதிகம்,ஆனால் தீவனத்திற்கு ஏற்ப கோழியின் உடல் எடை கூடாது.எனவே அதனை நட்டம் என்பார்கள்.

பழூர் கார்த்தி said...

நம்பள்கி, தவறாக நினைக்க வேண்டாம்.. சென்னையில் நான் 4 வருடங்கள் வசித்திருந்தாலும் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்ததில்லை.. அடையாறில் சங்கீதா உணவகம் அடிக்கடி செல்வதுண்டு.. செட்டிநாட்டு வகை உணவு வகைகள் சுவையாக இருக்கும்!

***

தகவலுக்கு நன்றி, அடுத்த முறை ரன்ஸ் செல்ல முயல்கிறேன்!

பழூர் கார்த்தி said...

வவ்வால், நீங்கள் கூறிய காரணம் லாஜிக்கலாக ஒத்து வருகிறது, தகவலுக்கும், வருகைக்கும் நன்றி!

உங்களது பல பின்னூட்டங்களை, சில பதிவுகளை படித்திருக்கிறேன், பல விஷயங்களை நுணுக்கமாக அறிந்து இருக்கிறீர்கள், தொடருங்கள், வாழ்த்துகள்!!

நம்பள்கி said...

கார்த்தி, இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது. நான் வசித்து அடையார்; அதனால் எனக்கு தெரியும்!

புஹாரி ஹோட்டல் மேனேஜர் சொன்ன விஷயம்;மேலும், 1965 ல் அறிமுபப்டுதிய போது புதுமையாக இருக்க இந்தப் பெயர் வைத்தாங்க, என்னுடைய வாத்தியாரும் சொல்வார்.

பழூர் கார்த்தி said...

நன்றி நம்பள்கி! அடையாறில் நான் அடிக்கடி சென்ற இடங்கள் சங்கீதா, ரெயின் ஃபாரெஸ்ட் உணவகங்கள் மற்றும் அனந்தபத்மநாப சுவாமி கோயில்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

65 நாட்கள் வயதுடைய கோழி என்பதே இப்பெயர் வரக் காரணம்.

பழூர் கார்த்தி said...

தகவலுக்கும், வருகைக்கும் நன்றி யோகன் பாரிஸ்..

//65 நாட்கள் வயதுடைய கோழி என்பதே இப்பெயர் வரக் காரணம்.//

அதுதான் லாஜிக்கலாகவும் ஒத்து வருகிறது!!

T.N.MURALIDHARAN said...

நல்ல ஆராய்ச்சி.

பழூர் கார்த்தி said...

நன்றி முரளிதரன்!