அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ பண்டம் சிக்கன் 65.
இன்னொன்று தந்தூரி சிக்கன்.
இந்த சிக்கன் 65 பெயர் எப்படி வந்தது என்று விக்கிபீடியாவில் துளாவிய பொழுது கிடைத்த தகவல்கள் கீழே...
இந்த பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் உள்ளன, ஆனால் எது உண்மையான காரணம் என்று நிரூபிக்கப் படவில்லை.
சிக்கன் 65 - பெயருக்கு காரணங்களாக கூறப்படுபவை:
- சிக்கன் 65 என்ற இந்த உணவு 1965 ஆண்டில் சென்னை புஹாரி ஹோட்டலில் அறிமுகப் படுத்தப் பட்டது. அறிமுகப் படுத்தப் பட்ட ஆண்டு பெயருடன் இணைந்து விட்டது.
- சிக்கன் 65 தயாரிக்க உதவும் மசாலா 65 நாட்கள் ஊற வைக்கப் பட்டு, சிக்கனின் மேல் தடவப் படுகிறது.
- சிக்கன் 65 உணவு 1965ம் ஆண்டு இந்திய போர் வீரர்களுக்கு சிறந்த, எளிய உணவாக அறிமுகப் படுத்தப் பட்டது.
- சிக்கன் 65 உணவு, 65 மிளகாய்களை உள்ளடக்கி சமைக்கப் படுகிறது.
- சிக்கன் 65 தயாரிக்க பயன்படும் கோழி 65 நாட்கள் வயதுடையது.
- வட இந்திய போர் வீரர்கள் சென்னையில் பயிற்சி பெறும்போது அங்குள்ள மிலிட்டரி கேண்டீனில் உணவு வகைகள் தமிழில் எழுதப் பட்டிருக்கும். வீரர்கள் படிக்கத் தெரியாததால், மெனுவில் உணவு எழுதப் பட்டிருக்கும் நம்பரை (65) சொல்லி ஆர்டர் செய்வார்கள். அப்படியாக சிக்கன் 65 என்றாகி விட்டது.
என்ன நண்பர்களே, சிக்கன் 65 சாப்பிட தயாராகி விட்டீர்களா?
இதில் என்ன காரணம் உண்மையாக இருக்கக் கூடும் (அல்லது) வேறு ஏதேனும் காரணம் உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் கூறுங்களேன்.
பெயரை விட்டுத் தள்ளுங்கப்பா, என்னவாய் இருந்தால் என்ன?
கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரிதான் என்கிறீர்களா, அதுவும் சரிதான்!!
அடுத்த முறை ஹோட்டலில் சிக்கன் 65 சாப்பிடும் பொழுது, சர்வரிடம் பெயர்க் காரணம் கேளுங்களேன், என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!!
நன்றி: விக்கிபீடியா
படம் உதவி:mommyscuisine.com