Wednesday, August 29, 2012

கிரிக்கெட்: அஸ்வின் சுழலில் தடுமாறிய நியுசி - ஒரு அலசல்


அஸ்வின் - உங்களையும், என்னையும் போன்ற ஓர் சாதரண குடும்பத்து பையன். நமது பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், பேட்டிகளிலோ, இண்டர்வியூ கொடுக்கும்போதோ இயல்பாக, உண்மையாக பேசுவார், சின்சியாரிட்டி தெரியவரும்.

அருமையான சுழற்பந்து வீச்சாளர். ஹர்பஜனுக்கு பிறகு என்ன என்ற கேள்விக்கு சரியான விடையாக இந்திய அணியில் உருவாகி வருகிறார்.

நிறைய ஒருநாள் (இதுவரை 40 போட்டிகள்), டி20 கிரிக்கெட் விளையாடியுள்ளதால் ஒன் - டே ஸ்பெசலிஸ்டாக கருதப் பட்டார். ஆனால் 2011 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 22 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அவ்வளவாக சோபிக்க வில்லை. தற்போது நியுசிக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.இதுவரை இந்தியாவில் அஸ்வின் விளையாடிய 4 போட்டிகளில், 43 விக்கெட்டுகள் வீழ்த்தி, 3 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். இதுவே ஒரு பெரிய சாதனைதான். இவரும் ஓஜாவும் சேர்ந்து இந்த 4 போட்டிகளில் 60 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். கும்ப்ளே - ஹர்பஜன் போல அஸ்வின் - ஓஜா ஜோடியும் தொடர்ந்து பல போட்டிகளில் அசத்துவார்கள் என ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.

பந்து வீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் அஸ்வின் ஜொலிக்கிறார். இப்போது நடந்த் முடிந்த போட்டியில் கூட அவர் எடுத்த 37 ரன்கள் அணிக்கு ஒரு பெரிய ஸ்கோரை தந்து, நியுசிலாந்தை பயப்படுத்தியது.

டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள், டி20 போட்டிகளிலும் ஒரு அட்டாக்கிங், அக்ரெசிவ் பவுலராக உருவெடுத்துள்ளார் அஸ்வின். எந்த போட்டியிலும் முதல் ஐந்து-ஆறு ஓவர்களில் நிறைய ரன்கள் போய்விட்டால், தோனி இவரைத்தான் பந்து வீச அழைப்பார். எதிரணி ரன்கள் குவிப்பதை குறைத்து, விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுவார்.

டெஸ்ட் போட்டிகளில் இவரது பவுலிங் ஆவரேஜ்: 26.83, பேட்டிங் ஆவரெஜ்: 35.66. இதுவே இவரது திறமைக்கு சான்று. இவர் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது, ஆனாலும் நமது அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் அஸ்வின். இவர் மென்மேலும் வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்!

நன்றி: படம் மற்றும் தகவல் உதவி - கிரிக் இன்ஃபோ வலைத்தளம்

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

பழூர் கார்த்தி said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்!

வவ்வால் said...

கார்திக்,

நல்ல அலசல்.

அஸ்வின் ஆஸ்திரேலியாவில் எடுப்படாமல் போனதன் காரணம் , இவரும் வழக்கம் போல ஸ்பின் டிராக்கில் மட்டும் ஜாலம் செய்யும் பந்து வீச்சாளராக இருப்பதே, இவர் இளையவர் என்பதால் வெளிநாட்டு பிட்ச்களில் எப்படி பந்து வீச வேண்டும் என விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும், அப்போது தான் அனில் கும்ளே போல நீண்டகாலம் நிற்க முடியும்.

கும்ளே பெரிதாக டர்ன் செய்யாவிட்டாலும் கூடுதலாக பவுன்ஸ் ஆகும், மேலும் வேகம் ,லெங்க்த் என மாற்றி வெளிநாட்டிலும் சாதித்தார் அது போல அஸ்வினும் முயன்றால் நன்றாக எடுபடும்.

பழூர் கார்த்தி said...

நன்றி வவ்வால்! உண்மைதான் உங்கள் கருத்து, அஸ்வின் வெளிநாட்டு சுழலுக்கு ஒத்துவராத ஆடுகளங்களில் எவ்வாறு ஜொலிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! ஹர்பஜன் அணிக்கு திரும்புவது இனி கடினம்தான்!

ராஜ் said...

பாஸ், ரொம்ப நல்ல அலசல்..
அஸ்வின் தமிழ்நாடு டீம்ல முதல ஒபென் பேட்ஸ்மேன் ஆக ஆடிகிட்டு இருந்தார், அவர் பேட்டிங் ஸ்டைல் நல்ல பேட்ஸ்மேன் மாதிரி இருக்கும். என்ன கேட்டா தோனிய விட நல்லா ஸ்டைல்லா ஆடுவார் அஸ்வின். ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா, இங்கிலாந்துல எந்த ஸ்பின்னர்ருமே (வார்னே தவிர்த்து) சதிச்சது இல்லை. ஹர்பஜன், கும்ப்ளே கூட பெருசா ரெகார்ட் எல்லாம் பண்ணுனது இல்லை.

வவ்வால் ஜி..
கும்ப்ளே கூகுளி போட தெரிஞ்ச மீடியம் பாஸ்ட் பௌலர் :):), சில பால் அவரு வெங்கடேஷ் பிரசாத்தை விட ஸ்பீட்டா போட்டு இருக்கார்.

வவ்வால் said...

---------

கார்த்தி,

ஆமாம் அனைத்து விக்கெட்டிலும் டீசன்டாக பெர்ஃபார்ம் செய்தால் நிரந்த இடம் கிடைக்கும், இல்லை எனில் கஷ்டம் தான்.

ராஜேஷ் சவ்கான்(அப்போ ராஜூ,கும்ப்ளே,சவ்கான்,டிரையோ)போல கொஞ்ச காலம் கலக்கிட்டு போக நேரிடலாம்.
--------------

ராஜ்,

//வவ்வால் ஜி..
கும்ப்ளே கூகுளி போட தெரிஞ்ச மீடியம் பாஸ்ட் பௌலர் :):), சில பால் அவரு வெங்கடேஷ் பிரசாத்தை விட ஸ்பீட்டா போட்டு இருக்கார்.//

செம ,கிரிக்கெட் நல்லா கவனிக்கிறிங்க போல, ஆடவும் செய்வீங்கன்னு நினைக்கிறேன்.

கும்ளே மித வேகப்பந்துவீச்சாளர் ஆகத்தான் ஆரம்பிச்சார், அவர் ஆக்‌ஷன் சரி இல்லைனு சொல்லவே ஸ்பின்னர் ஆனதாக படிச்சு இருக்கேன்.சென்

சின்ன வயசில் வெங்கடேஷ் பிரசாத், ராமன், டிராவிட் எல்லாம் சென்னையில லீக் மேச் ஆடுவாங்க,அப்போ நான் பந்து பொறுக்கி போட்டு இருக்கேன், சிகரெட் வாங்கி வர கூட சொல்லி இருக்காங்க :-))

சேக்காளி said...

இவர் மென்மேலும் வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்

Doha Talkies said...

இவர் காரம் பாலை ரொம்ப உபயோகபடுத்தாமல் இருந்தால் நீண்ட நாட்கள் விளையாடுவார்.
stock ball ஆக மட்டும் யூஸ் பண்ணினால் நல்ல இருக்கும்.

பழூர் கார்த்தி said...

ராஜ்,

நன்றி, ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆடினாரா? ஆச்சரியமாக இருக்கிறது, தெரியாத தகவல், ஆனால் ஏதொ ஒரு பேட்டியில் தான் ஒரு பேட்ஸ்மேனாக ஆரம்பத்தில் விளையாடியதை குறிப்பிட்டு இருந்தார்.

//கும்ப்ளே கூகுளி போட தெரிஞ்ச மீடியம் பாஸ்ட் பௌலர் :):), சில பால் அவரு வெங்கடேஷ் பிரசாத்தை விட ஸ்பீட்டா போட்டு இருக்கார். //

ஹா ஹா ஹா :))

பழூர் கார்த்தி said...

வவ்வால், கூடுதல் தகவல்களுக்கு நன்றி!!

பழூர் கார்த்தி said...

சேக்காளி, நன்றி!பழூர் கார்த்தி said...

தோஹா டாக்கீஸ், ஆமாங்க, இப்படித்தான் தூஸ்ராவை அடிக்கடி யூஸ் பண்ணி ஹர்பஜன் காணாம போயிட்டார் :) இவர் கேரம் பாலை அதிகம் பயன்படுத்தக் கூடாது!! நன்றி!

வவ்வால் said...

கார்த்தி,

//இவர் கேரம் பாலை அதிகம் பயன்படுத்தக் கூடாது!! நன்றி!//

கேரம் பால் தூஸ்ரா என்பதெல்லாம் ஒரு ஹைப் கொடுக்க சொல்வது, அப்படி எல்லாம் எப்போதும் நடக்காது , சீம் பொசிஷனை மாற்றி வைத்து போடுவார்கள், 10 முறை அப்படிப்போட்டால் அதில் நான்கைந்து முறை எடுப்பட்டுவிடும், அவர் கேரம், தூஸ்ரா போட்டு ஆகாமல் போன பந்த்து எது என நமக்கு தெரிவதில்லை.

ஆப் பிரேக் போடும் போது சீம் ஸ்டெம்புகளை நோக்கி இருக்கணும் அவ்வாறு இல்லாமல் மாற்றி ஸ்லிப் பக்கம் வச்சு போட்டாலே அவுட் ஸ்விங் போல போகும்.

ஆட்காட்டி விரல் தான் அப்படி பந்தினை ஆப் பிரேக் ஆக செய்ய உட்பக்கம் திருப்பும், அதனை ஃப்ரியாவிட்டு விட்டு நடுவிரலால் சுழற்றினால் பந்து வாப்லிங்க் ஆகி லெப் பிரேக் போல போகும், ஆனால் இது எல்லா சமயமும் எடுபடாது, எனவே சீம் நிலையை மாற்றி வைத்தும் செய்வார்கள்.இதற்கு பந்து வெளியாகும் போது ரிஸ்ட் பொசிஷன் எல்லாம் கண்ட்ரோல் செய்யனும். இப்படி என்னமோ எல்லாம் மெனக்கெட்டு செய்து லைன் அன்ட் லெங்த் மிஸ் ஆகி தான் ஹர்பஜனை வெளுத்துவிட்டார்கள்.

டிராப்பிங் ஆர்ம் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டும் இருக்கார்.

இனிமேல் ஹர்பஜனுக்கு மீண்டும் வர கஷ்டமே, சக்லைன் முஷ்டாக் போன்றோருக்கும் இந்த பிரச்சினை வந்தது. அதிகம் விளையாடினால் வருவது.வயதாக ஆக அப்படி ஆகிவிடும்.

பழூர் கார்த்தி said...

வவ்வால், விளக்கமான கருத்திற்கு நன்றி!