மேலே தலைப்பில் உள்ள தேதி (திகதி?)யை கவனித்தீர்களா? நமது ஊரில் தேதியை எழுதும் போது நாள்/மாதம்/வருடம் என்றே எழுதுவோம். ஆனால் இங்கே அமெரிக்காவில் மாதம்/நாள்/வருடம் என்று எழுதுவார்கள். கணிணி மென்பொருளில் சில சமயம் நிரலை உள்ளிடும் போது எங்களுக்கு குழப்பம் வந்துவிட்டால் கஷ்டம்தான், கவனமாக இருக்க வேண்டும்!!
இது மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்களில் அமெரிக்கா நமக்கு நேரெதிர்தான். சாலையில் வலது பக்கம் பயணிப்பது (நாம் இடது பக்கம் - keep left), கரண்ட் சுவிட்ச் மேலே இழுத்தால் ஆன் (கீழே ஆஃப்).
சாலையில் வலதுபக்கம் பயணிப்பது அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் வலதுபக்க பயணம்தான். இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற ஒருசில நாடுகளில் மட்டுமே இடதுபக்க பயணம். இதற்கு ஒரு பெரிய காரணம் உள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்நாளில் 6 முதல் 8 குதிரைகள் கூடி இழுக்கக்கூடிய பெரிய குதிரை வண்டிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் இடது பக்க கடைசி குதிரையில் அமர்ந்து வண்டியை ஓட்டும்போது எல்லா குதிரைகளையும் வலது கையிலுள்ள சாட்டையால் கட்டுப் படுத்துவார். வண்டியில் ஓட்டுநருக்கு இருக்கை இருக்காது.
அவ்வாறு இடது பக்க குதிரையில்(left most horse) உட்கார்ந்து ஓட்டுபவருக்கு எதிர்ப்புறம் வரும் வாகனங்கள் இடது புறம் வந்தால், வலப்புறம் செல்பவர் குதிரைகளை கட்டுப் படுத்தவும் அவரது கண்பார்வையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்கும், இடித்து விடாமல் ஓட்டவும் வசதியாக இருக்கும். இப்படி ஆரம்பித்ததுதான் வலப்பக்க பயணம்.
ஆஸ்திரேலியா என்பதை ஏன் ஈழத்தமிழில் அவுஸ்திரேலியா என்று கூறுகின்றனர்? கதைப்பது = பேசுவது, எங்கடே = எம் என இம்மாதிரி ஈழத்தமிழ் வார்த்தைகளுக்கு அகராதி ஏதெனும் உள்ளதா?
handloom என்றால் கைத்தறி என்று தெரியும், powerloom என்பதற்கு தமிழ்ச்சொல் தெரியுமா? விடை: பொறித்தறி!! சுஜாதா வழங்கிய கலைக்களஞ்சியம் ஒன்றில் படித்தது (கற்றதும் பெற்றதும் - 2003).
எனது மகன் நன்றாக வாசிப்பான் - இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன?? 'எனது மகன்' என்று வரக்கூடாது, தொல்காப்பிய இலக்கண விதிகளின்படி, உயர்தினையின் முன் -அது- என வரக்கூடாது. 'எனக்கு மகன்' என்று சொல்லலாம். எனது வீடு என்று சொல்லலாம், எனது மகன் எனக் கூடாது. இது கலைஞர் எழுதிய தொல்காப்பிய விளக்கத்தில் இருந்து எடுத்தாளப் பட்டது.
இன்னொரு குறிப்பு: வாழ்த்துக்கள் - தவறான பிரயோகம், வாழ்த்துகள் என்பதே சரி!!
களவும் கற்று மற - என்ற ஒரு பழமொழியை அடிக்கடி பலர் கூற கேட்டு இருப்பீர்கள். ஆனால் சரியான பழமொழி அதுவல்ல. சரியான பழமொழி: களவும், கத்தும் மற - இதுவே சரி. களவு - திருடுவது, கத்து - புறங்கூறுதல். திருடுவதையும், பிறர் மேல் புறங்கூறுதலையும் (பழிச்சொல்) மறந்து விடு என்பதை அர்த்தம். இது ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது.
ஐபிஎல்லில் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு வருமா? நம்மவர்கள் எப்போதுமே - சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா - என்றே விளையாடி அடுத்த சுற்றுக்கு வருவர். அப்படி இம்முறையும் வந்தால் செயிண்ட் லூவிஸ் பிள்ளையாருக்கு, பிஸ்ஸா (pizza) படைப்பதாய் கனவில் வேண்டிக் கொண்டிருக்கிறேன்!!!
அது சரி, இந்த பதிவிற்கு ஏன் பழூர் காராச்சேவு என்று பெயர்?? பதிவர்கள் அவியல், குவியல், ஒயின்ஷாப், சாண்ட்வெஜ் என்று எல்லா பக்கமும் கவர் செய்து விட்டதால் காராச்சேவு என்று எனக்கு பிடித்த ஒரு பதார்தத்தையும், பழூர் என்பது எனது ஊர் ஆதலால் அதனையும் சேர்த்து விட்டேன்!!!
8 comments:
வாழ்த்துகள்
nice!
நன்றி சமுத்ரா!
நன்றி அபர்ணா!
handloom என்றால் கைத்தறி என்று தெரியும், powerloom என்பதற்கு தமிழ்ச்சொல் தெரியுமா? விடை: பொறித்தறி!! சுஜாதா வழங்கிய கலைக்களஞ்சியம் ஒன்றில் படித்தது (கற்றதும் பெற்றதும் - 2003).
பொறித்தறி கிடையாது. விசைத்தறி - நாமக்கல், ஈரோடு மாவட்டத்திற்கு வந்து பேசித் தெரிந்து கொள்ளுங்கள். நடைமுறை வார்த்தை இதுவே.
உங்கள் கருத்து சரியே மைக் முனுசாமி, விசைத்தறி என்பதே பொருத்தமான வார்த்தை, நன்றி!!
காதலிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். காதலித்துக்கொண்டே இருந்துவிடக்கூடாது. விரைவில் அதனை மறந்து திருமணம்
செய்துகொள்ளவேண்டும் என்பதையே..
களவும் கற்றுமற என்று நம்முன்னோர் உரைத்துச்சென்றனர்.
http://www.gunathamizh.com/2012/05/blog-post_28.html
Nanga etha nambarathu..
Nandri
Vadivel
வடிவேல், உங்க கருத்துக்கு நன்றி, இந்த பதிவை படித்தேன், அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது!!
Post a Comment